”தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளின் தகுதிக்கேற்ப, அனைத்து பள்ளிகளுக்கும், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி, பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில், ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் படி, சேர்க்கைக்கு அனுமதிக்கவில்லை என, கவனத்துக்கு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, அதன் மூலம், 3,000 பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.