News

Logo

அரசு ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் பீதி!

தமிழகத்தில் எழும் வேதனை குரல்கள் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல் பள்ளிகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் தயக்கம் காட்டும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 260 நடுநிலைப்பள்ளிகள், 3,044 உயர்நிலைப்பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 959 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் […]


Logo

ஏழை மாணவர்களுக்கு கேள்விக்குறியாகும் இடஒதுக்கீடு !

* கல்வியாளர்கள் அதிர்ச்சி * நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆயத்தம் சேலம்: பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வரும் புதிய ஆணையத்தால் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி சீரழியும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி), […]


Logo

நீட்’ பயிற்சிக்கு வராமல், ‘டிமிக்கி’ : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர். சவால் : அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக […]


Logo

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள் பேசுதல். பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம் சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும். மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள்,பள்ளி ஆய்வாளர்கள்அனைவரும்பள்ளிமாணவர்களுக்குதூய்மைசார்ந்த விழிப்புணர்வுக் குறிப்புகளை வழங்குதல். துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும்(Swachta Shapath Day)நிகழ்ச்சியினை நடத்தி அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல். […]


Logo

பூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.     அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.   கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் […]


Logo

வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி

சென்னை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, ‘அப்ஜெக்டிவ்’ முறையில், வினாத்தாள் […]


Logo

கல்வித்துறையில் இருள் – உதயச்சந்திரன் கல்வித்துறையில் மீண்டும் உதிப்பாரா?

    உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள். ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா […]


Logo

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தல் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார். பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்


Logo

2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும்!

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியிருந்ததை, மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீட் பற்றிய […]


Logo

2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம்

நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலே 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 7 கிலோ வரை புத்தக பையை சுமக்க வேண்டிய […]