திருச்சியை அடுத்த முசிறி அருகில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளைத்
தொடங்கிவைக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம்திருச்சி வந்தார். பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகுப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.
அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள்குறித்து 15 நாள்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில்அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும். சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளைஎதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும்மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும்.பள்ளி மாணவர்கள், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.