EMIS சார்பான தகவல்கள்…

1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

 

2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

 

3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.

 

4.ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

 

5.இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும், ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்.

 

6.வகுப்பு 1 முதல் 8ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏதேனும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் EMIS COMMON POOLல் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை ( RTE) செய்து இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது புதிய பதிவுகளாக சேர்த்துக்கொள்ளலாம்.

 

7.கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.

‘ஆதார்’ எண் வழங்கிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘ஆதார்’ எண் இருந்தால் மட்டுமே ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க முடியும்.

தற்போது, தாலுகா அலுவலகங்களில் ‘ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டைக்கு படம் எடுக்கும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், ‘ரேஷன் கடைகளில் குழந்தைகளின் பிறப்பு சான்று வழங்கினால் போதும்’ என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி பதிவு செய்த போது ஸ்கேனர் கருவி வேலை செய்யவில்லை. இக்குறையை களைந்து குழந்தைகளுக்கு மட்டும் ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது; தாலுகா அலுவலகங்களில் இப்பணி நடக்கும்’ என்றனர்.

C.B.S.E பாடத்திட்டத்தில் 1 – 8-ம் வகுப்புக்கு N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு…

சென்னை: சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் ( N.C.E.R.T-யின் ) பாடப்புத்தகங்கள் மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. N.C.E.R.T-யின் பாடப் புத்தகங்களை பயன்படுத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

 

 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்புடையவை இல்லை என்றும் சில கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேறுபட்ட சமூக பண்பாட்டு சூழல் உள்ளதால், ஒரே பாடப்புத்தகம் என்ற முறை தேவையற்றது என்று கூறியுள்ளனர். மேலும் காலஅவகாசம் கூட அளிக்காமல் திடீரென மாற்றம் செய்வது பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை வெகுவாக பாதிக்கும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். CBSE பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதால் பெற்றோர்களுக்கு கூடுதுல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். CBSE பாடப்புத்தகங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வாங்கி பயன்படுத்துவதால் செலவு அதிகம் என கருதப்படுகிறது. இதனால் N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry  பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.

 

 

அனைத்து மாணவர்களின் விவரங்களையும் update செய்து முடிக்கவும்

விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 2,500 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை,

மே முதல் வாரத்தில் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்பின், பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, பிப்., 2 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை, 1,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கைக்கு, தனியார் பள்ளிகள் தற்போதே விண்ணப்பங்கள் வழங்குவது விதிகளை மீறிய செயல்என, பள்ளிக் கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு, பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க, விதிமீறிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

நல்லா படிக்கணுமா? அப்போ இதைப் படிங்க..!

‘படிக்கணும். எல்லாத்தையும் படிக்கணும்; எல்லா யூனிட்டையும், ஒரு டாபிக் விடாம படிக்கணும்; ஆனா, எக்ஸாமுக்கு முந்துன நாள் மட்டும் படிக்கணும்; அதுக்கு என்ன பண்ணலாம்னு நம்ம ஃப்ரண்ட்ஸ்கிட்ட அறிவுரை கேட்க, அதுக்கு அவன் ‘நீ இண்டெக்ஸ் பேஜ்தான் படிக்கணும்’னு கிண்டல் பண்ணுவான். இது தேர்வுக்கு முந்தைய நாள்களில் நடக்கும் வழக்கமான உரையாடல். தேர்வு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படுகிறதா? உங்களுக்குத்தான்

இந்தக் கட்டுரை.

 

என்னதான் பரிட்சைக்கு முந்தினநாள் படிக்கணும்னு நினைச்சாலும் இந்த ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நம்மை சும்மா விடாது. ‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்னு கூடவே வரும். அதையும் தாண்டி உட்கார்ந்தா, எங்கயோ கேட்குற பாட்டு, கிச்சன்ல இருந்து வர்ற வாசம் உங்க நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்கும். இல்லையா? அப்போ, உங்களுக்கு கவனச்சிதறல் இருக்கு. இதனால, அமெரிக்காவுல 2005-ல் பல பில்லியன் டாலர் நஷ்டமாயிடுச்சாம். அடடா! ‘இது என்னடா… புது வியாதின்னு நினைக்கிறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.  இந்த நோயைக் குணப்படுத்தி உங்க வேலையை சரியாகச் செய்வதற்கான வழிமுறைகள். இதோ…

 

  1. லிஸ்ட் போட்டு வேலை பாக்கணும்:

லிஸ்ட் போட இதென்ன மளிகைக்கடை பொருளான்னு நீங்க கேக்குறது புரியுது. இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நண்பா.  இந்த விஷயத்தை இந்த டைம்ல பண்ணி முடிக்கணும்னு நோட் பண்ணி வச்சுக்கணும். அப்டி நோட் பண்ணுனா, சரி ஆகிடுமா? உடனே ஆகாது. இந்த மாதிரி நோட் பண்ணி வைக்கிறப்போ,  நாம எவ்ளோ வொர்க் பண்ணாம விட்டு இருக்கோம்னு நமக்கு தெரியும். அப்போ நமக்குள்ளயே ஒரு பயம் வரும். அந்த பயம் எப்படியோ அடுத்த தடவை அந்த வேலையை முடிக்க வச்சுடும்.

 

  1. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்க :

எப்படி படிக்கிறோம் என்பது மட்டும் அல்ல, எங்கே படிக்கிறோம் என்பதும் முக்கியம். படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான்னு சொல்வாங்க. அதெல்லாம் படிக்கிற பையனுக்கு. நமக்கு? அதுக்குத்தான் சரியான விடையைத் தேர்ந்தெடு மாதிரி, சரியான இடத்தை தேர்ந்தெடுக்கணும். முதல்ல நம்மல சுத்தி டிவி, செல்போன், கம்யூட்டர், கதை புத்தகம் போன்ற அபாயகரமான பொருட்கள் இருக்கான்னு பார்க்கணும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்க. தீவிரமா வாசிக்கும்போது சின்னச்சின்ன சத்தம் கூட கடுப்பு ஏத்தும், அதுனால கொஞ்சம் வாய்விட்டு படிச்சா அந்த சத்தமெல்லாம் கேட்காது. மைண்டும் வேற எங்கும் போகாது.

 

  1. எலக்ட்ரானிக் பொருட்களை கொஞ்ச நேரம் மறந்துடுங்களேன் :

 

 

‘இது என்ன புதுசா இருக்குனு யோசிக்காதீங்க ப்ரோ. வீட்ல எப்பவும் திட்டுவாங்களே… ‘எருமை எப்ப பார்த்தாலும் போனையும் லேப்டாப்பையும் பார்த்துட்டே இருக்கு. வேற எந்த வேலையும் பாக்க மாட்டேங்குது’ன்னு ( என்னை எப்பவும் இப்டிதான் திட்டுவாங்க). அதுதான் எலக்ட்ரானிக் டிவைஸ் இந்த டிவி, போன், சிஸ்டம் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி வச்சிடணும். ஏன்னா… நம்ம படிக்கணும்னு நினைச்சு புக்கை எடுத்தாலும், நம்ம தளபதிகள் போன் பண்ணி, ‘மச்சான் எவ்ளோ படிச்சிருக்க? நான் இவ்ளோதாண்டா முடிச்சிருக்கேன்’னு நம்மள ‘டிஸ்டர்ப் பண்ணிடுவாங்க, ஸோ… அதுக்கு முன்னாடியே போனை ஆஃப் பண்ணி வச்சிடுறது நல்லது. என்னைக்கும் இல்லாம அன்னைக்குத்தான் டிவி-ல நல்ல ‘ப்ரோகிராம்போடுவாங்க. நல்ல புது கேம் லேப்டாப்ல ஏத்தி வச்சு இருப்போம். அதைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு படிக்கலாம்னு அடம்பிடிக்கிற மனசையும் இந்த எலக்ட்ரானிக் பொருள்களையும்  நாம ஆஃப் பண்ணி வச்சு, அதை மறந்துடணும்.

 

  1. தேவையான பொருட்கள் :

 

தேவையான பாடபுத்தகங்கள், பேனா, பென்சில், குறிப்பு எடுக்க நோட்டுகள் போன்றவற்றை முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்னா… படிக்க ஆரம்பிச்ச அப்புறம் அடுத்து அடுத்து படிக்க வேண்டிய புக் நோட்ஸ் எல்லாம், முன்னாடியே இருந்தாதான் சரியா படிக்க முடியும். இல்லைன்னா, அடுத்து படிக்க நினைக்கிற புத்தகத்தை நாம தேடணும். அப்படி தேடும்போது அது கிடைக்காம போச்சுனா, டென்ஷ்ன் ஏறும்.  எல்லாம் மறந்துடும்.

 

  1. விண்டோஸ்ஸை க்ளோஸ் பண்ணனும் :

 

இது நம்ம வீட்டுல இருக்க விண்டோஸ் இல்லை.  நம்ம ப்ரவுசர்ல விண்டோஸ். நீங்க நினைக்கலாம்… அதான் எலக்ட்ரானிக் டிவைஸ் எல்லாம் ஆஃப் பண்ண சொல்லியாச்சே…  ஏன்னா நம்ம பயலுவ என்னைக்கும் இல்லாம இன்னைக்குத்தான் ஏதும் டவுட்டு வந்தா, கூகுள்ல செக் பண்ணலாம்னு நினைப்பான். ஆனா கூகுள் போனா, நாம மறுபடியும் உலகத்தை நோக்கிய பயணத்துக்காக எல்லாத்தையும் (கண்டிப்பாக விளையாட்டு, சமூக வலைதளம் அப்போ ட்ரெண்டிங்ல இருக்க விஷயங்கள் ரொம்ப ஈர்க்கும்) தேட ஆரம்பிப்போம். அதனால வீட்டில் இருக்கும் விண்டோவையும் சிஸ்டத்தில் இருக்கும் விண்டோஸ்சையும் அணைத்துவிடுங்கள்.

 

  1. ரிமைண்டர் செட் பண்ணுங்க :

 

ஒரு வேலை செய்யும்போது நேரம் போகிறதே தெரியாது. அதே மாதிரிதான் படிக்கும்போதும் ஒரே கேள்வியைப் படிச்சுகிட்டே இருப்போம். நம்ம படிக்க ஆரம்பிச்ச அப்புறம், நேரம் ரொம்ப போயிருக்கும். அதுனால மத்த கேள்வியெல்லாம் படிக்க முடியாது ( நாம படிக்கறதே ரெண்டு கேள்வியோ மூணு கேள்வியோ அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுல) அதனால அலாரம் கடிகாரத்துல இந்த வேலையை, இந்த நேரத்துல முடிக்கணும்னு செட் பண்ணிக்கோங்க.

 

  1. முடியாதுன்னு எதுவும் கிடையாது :

 

அனைத்து தடைகளையும் நாம தாண்டி படிக்கும் போதும், நமக்கு சில விஷயங்கள், பாடங்கள் புரியாமா போகும். அச்சோ! இதைப் படிக்க முடியாதோன்னு நமக்கு தோணலாம். இது அவ்ளோதான் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு தோணும். அதெல்லாம் சும்மா… நம்ம மனவிஸ்கி. படிச்சதையே திருப்பித்திருப்பி நாலு தடவை படிச்சுப் பார்த்தா கண்டிப்பா ‘இன்ஜினியரிங்ல இருக்கிற எம்- 3’ பேப்பரே புரிஞ்சுடும். மத்த சப்ஜெக்ட் புரியாதா என்ன? நம்மளால முடியாதது ஒன்னும் இல்லைனு நினைச்சுட்டு படிக்கணும்..

 

  1. அதிகமாக படிக்க, அளவாக படிங்க :

 

 

இதுஎன்ன புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? நாம நிறையபடிக்கணும் அப்போதான் மேக்சிமம் எழுத முடியும். அதுக்குபடிக்சுட்டே இருந்தா எக்ஸாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்தவிடைன்னு தெரியாம போய்டும். சராசரியா 45 – 50 நிமிஷம்வரைக்கும்தான் ஒரு மனிதனோட கவனிக்கும் திறன் இருக்கும். (அதனாலதான் வகுப்புகள் எல்லாம் 45 – 50 நிமிஷம்வெச்சிருக்காங்க) அதுக்குமேல ஒரே விஷயத்தை கவனிக்கமுடியாது. ஸோ படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவைஒரு 5 நிமிஷம் ரிலாக்ஸ் ப்ளீஸ். ( வாக்கிங் இல்ல அமைதியாஉக்கார்ந்து இருக்கணும் அதைவிட்டுட்டு வாட்ஸப் மெசெஞ்சர்லாம்செக் பண்ணக்கூடாது)..

 

  1. இலக்கைத்தீர்மானியுங்கள் :

 

நம்முடைய குறிக்கோள் என்ன? எதுக்காக படிக்கிறோம்? இப்படிஉங்களைப் பத்தி நீங்க யோசிக்கணும்னு சிந்தனை சிற்பி வால்டேர்சொல்கிறார் உலகத்திலே மிக கடினமான விஷயம் உன்னையே நீஅறிந்து கொள்வது தான்“.  சரி அதை எப்படி தெரிஞ்சுக்கிறது?கண்ணை மூடி உட்கார்ந்து நாம எங்க இருந்து

*ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்

  1. *பசிஎன்றுகுழந்தைசொன்னால், உடனே உணவு கொடுங்கள்.*அரட்டையிலோ,சோம்பலிலோ, வேறுவேலையிலோ குழந்தையின்

குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோகுழந்தைகள்உங்களுக்கு குழந்தையாய்தெரியலாம். *எல்லோருக்கும்அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள*.

  1. ஒருபோதும்ச்சீ வாயை மூடு“, “தொணதொணன்னுகேள்விகேட்காதே என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, *அவர்களின்ஆர்வத்தை குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்!*
  2. பள்ளிக்குஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ,பிறகுழந்தைகளுடனோஅனுப்பினால், அந்த *வாகன ஓட்டுனரின்முழு விவரமும்தெரிந்து கொள்ளுங்கள், அவர்வீட்டு முகவரிஉட்பட.*
  3. வாகனஓட்டுனரின் *நடத்தையிலும், பழக்கவழக்கத்திலும்ஐயமின்றிதெளிவுறுங்கள்!*
  4. பெரும்பாலானவாகன ஓட்டுனர்கள், *மூட்டைகளைபோல்குழந்தைகளை அடைத்து,மரியாதையின்றி பேசுவதும், தொடக்கூடாத இடங்களைதொடுவதும் சில இடங்களில் நடக்கிறது.*
  5. யார்அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்கவேண்டும் என்று *குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள்.*
  6. *குழந்தைகள்,வீட்டின்முகவரி,பெற்றோரின் தொலைபேசிஎண்கள் அறிந்திருத்தல் நலம்*.
  7. வீட்டில்ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், *ஒருபோதும் ஒருவருடன்மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயதுவித்தியாசம் எப்படிஇருந்தாலும்!*
  8. ஒருகட்டத்திற்கு மேல், *உங்கள்விருப்பங்களைகுழந்தையின்மேல் திணிக்காதீர்கள்.*
  9. வீட்டில்குழந்தைகள் இருக்கும்போது *வன்முறை, காதல்,கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திரைக்காட்சிக ளையோ,நிகழ்ச்சிகளையோபார்க்காதீர்கள்!*
  10. பெரியவர்கள்,பெண்கள் எப்போதும் சீரியல்களில்மூழ்கிஇருக்காமல், *குழந்தைகளுக்குபிடித்தாற்போலோ,அல்லதுஅவர்களுக்கு பொது அறிவு பெருகும்வகையிலானநிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.*
  11. குழந்தைகளிடம்தினமும் நேரம்செலவிடுங்கள். *ஒருதோழமையுடன் அவர்கள்சொல்வதை காது கொடுத்துகேளுங்கள்.*
  12. *தவறுகளைதன்மையுடன்திருத்துங்கள்.*தண்டிக்கநினைக்காதீர்கள்!
  13. ஒருமுறைநீர் ஊற்றியவுடன்,விதை மரமாகிவிடாது. *நீங்கள்ஒருமுறை சொன்னவுடன்குழந்தைகள் உங்கள் விருப்பப்படிமாறிவிட மாட்டார்கள்.உங்களுக்கு பொறுமைஅவசியம்.*
  14. பள்ளிவிட்டு வரும் குழந்தைகளை அன்புடன்அரவணைத்து,வேண்டியது செய்ய *அம்மாவோ,பெரியவர்களோ வீட்டில்இருத்தல்வேண்டும்!*
  15. *குழந்தைகளின்எதிரில்புறம் பேசாதீர்கள்.* பின்னாளில்அவர்கள்உங்களைப் பற்றி பேசலாம்.
  16. உங்கள்பெற்றோரை நடத்தும்விதம், *உங்கள் பிள்ளைகளால்கவனிக்கப்படுகிறது.* நாளை உங்களுக்கும் அதுவே நடக்கலாம்!
  17. படிப்புஎன்பது அடிப்படை. அதையும் தாண்டி*குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.*
  18. *ஓடிஆடிவிளையாடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குஅவசியம்.* விளையாட்டிற்குதடை போடாதீர்கள். “All work and noplay makes Jack a dull boy”.
  19. குழந்தைகள்கேள்வி கேட்கட்டும். *அவர்களின் வயதுக்கேற்பபுரியும்படி பதில ்சொல்லுங்கள்!* பொது அறிவு கேள்விகள்கேட்கப்படும்போது *தெரிந்தால் சொல்லுங்கள்,தெரியாவிட்டால்பிறகு சொல்கிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடிகேள்விக்கான பதிலை அறிந்துகொண்டு, மறக்காமல்அவர்களிடம்சொல்வது அவசியம்.*
  20. குழந்தைகளைதனியே கடைக்கு அனுப்பும் போது கவனம்தேவை. *நெடு நேரம் குழந்தை நிற்கவைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோவழங்கப்பட்டாலோ கவனம் தேவை.*
  21. ஆணோ,பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், *”Good touch, “Bad touch” எதுஎன்பதை பெற்றோர்கள்சொல்லிக் கொடுங்கள்.*
  22. ஒருபோதும், உங்கள் குழந்தைகளின் எதிரே *சண்டைஇடாதீர்கள்!*
  23. ஒவ்வொருகுழந்தையும் இறைவனின்வரம். அவர்கள், *ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள்அல்ல!*

 

தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை: மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்.

தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார் பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படும். மாத்திரைகளை பள்ளிகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் வழங்குவார்கள். அதேபோன்று தட்டம்மை நோய்த் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இதற்கான தடுப்பூசிகளை பள்ளிகளுக்கு சென்று சுகாதாரத்துறையினர் போட்டனர்.ஆனால் இந்த இரு திட்டங்களிலும் தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளிகள் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. சில பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால், அவர்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மாத்திரைகளையோ தர அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய அரசின் தேசிய சுகாதாரதிட்டம் செயல்படுத்துவதில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் காட்டும் ஆர்வம்:சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் உள்ளேயே அனுமதிக்க வில்லை. மாறாக அரசு பள்ளிகளில் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டது. குடற்புழு மாத்திரைகள் தரப்பட்டது.

 

தேசிய சுகாதார திட்டம் அரசு பள்ளிகளில் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்படவில்லை. இதனால் அரசின் இலக்கு எட்டப்படவில்லை’ என்றனர். தேசிய சுகாதார திட்டத்தின் சார்பில் போடப்படும் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

10, பிளஸ்-2 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க 104 சேவை*

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகனை தமிழக அரசின் 104 சேவை வழங்குகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நெருங்குவதைத் தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்குத் தேவையான ஆலோசனை 104 சேவையில் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 104 சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின் போது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும்.
மேலும் உணவு முறை, மன அழுத்தத்தைப் போக்குவது, நினைவாற்றலை பெருக்குது, தேர்வு பயத்தைப் போக்குவது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது, தவறான முடிவுகளைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்