‘நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்

‘பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, ‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, ௮.௦௫ லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு, 80 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் : கணிதத்தில் ‘சென்டம்’ குறையும்

தேனி: பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

 

நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்து

எஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 – ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் ‘சென்டம்’ எடுப்போர் எண்ணிக்கை குறையும்.

எளிமை – ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது. ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.

சிறிது குழப்பம் – டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் ‘புக்பேக்’ பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா ‘கிரியேட்டிவ்’ ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் ‘ஏ ‘வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.

இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கை குறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை .

தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம்

குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

EMIS Latest News – Check Students AADHAAR Details …

EMIS news:தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறை EMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா என பார்க்கவும்.அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய original ஆதார் அட்டையை எடுத்து வரச்செய்து சரிபார்த்து மீண்டும் பதிவேற்றம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய ‘நேரம்’

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாத்தாளில் தேர்வு எழுதும் ‘நேரம்’ தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் நேற்று குழப்பம் அடைந்தனர். 
இத்தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண் வினாக்கள் ‘அப்ஜெக்டிவ்’ வகையாகவும், 75 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் ‘தியரி’யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்கள் ஒரு மதிப்பெண் வகை. அதற்கான விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும்.

இப்பகுதியை மாணவர்கள் எழுதுவதற்கு கடந் தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.ஆனால் நேற்று நடந்த தேர்வில் ‘ஓ.எம்.ஆர்., ஷீட்’டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு ’75 நிமிடங்கள்’ என குறிப்பிடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.இத்தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அனுப்பிய சுற்றறிக்கையிலும், ‘ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்,’ என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ’75 நிமிடங்கள்’ என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.

சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,’ என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கணினி அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,”இத்தேர்வுக்கு 2015-16ல் ஒரு மதிப்பெண் பகுதிக்கு 75 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு, நேரம் குறைவாகஇருப்பதாக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2016-17ல், இப்பகுதி எழுத 90 நிமிடங்களாக நேரம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ’75 நிமிடங்கள்’ என தவறாக அச்சிடப்பட்டதால்குழப்பம் ஏற்பட்டது. மாணவர்கள் பாதிக்கவில்லை,” என்றார்.

மாணவர்கள் எதிர்பார்ப்பு

மாணவர்கள் கூறுகையில், “ஒரு மதிப்பெண் பகுதியை எழுதி முடித்த 90 நிமிடங்களில், ஓ.எம்.ஆர்., ஷீட்டை அறை கண்காணிப்பாளர் வாங்கிக்கொள்கிறார். இதன்பின் தியரி பகுதி எழுத அனுமதிக்கப்படுகிறது. பிற தேர்வுகளில், அனைத்து வினாக்கள் பகுதியும் எழுதி முடித்த பின், விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பது போல், இத்தேர்விலும் தியரி எழுதி முடிக்கும் வரை ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்கள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்,” என்றனர்.

தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல் – சுகாதாரத் துறை

மீசல்ஸ் ரூபெல்லா’ தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
‘இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்’ என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை.

பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்றுரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.சுகாதாரத் துறையினர் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

‘இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ல் துவக்கம்

சிவகங்கை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல் துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கி மார்ச் 30 வரை நடக்கிறது. பிளஸ் தேர்வு முடிவு மே 12, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியாகிறது.

இதனால் இரு வகுப்புகளுக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரே சமயத்தில் துவங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்.,1 ல் துவங்கி ஏப்., 15 க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், விடைத்தாள் அதிகமாக இருந்தால் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், தற்போது குறித்த நாட்களுக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: வாகனங்களில் அளவுக்கு அதிக மாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை யில் உள்ளன.வாகனங்களில் வேக கட்டுப் பாட்டுக் கருவி பொருத்த வேண் டும். அனுபவம் வாய்ந்த டிரைவர் கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாலம், நீர் நிலைகள் போன்ற இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது.பள்ளிக்கு செல்லும் வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும்.

இதன்படி ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது.இதனையெல்லாம் மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மாணவ மாணவியர் நலன் கருதி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

வேலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

 

 

வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

 

வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை” என்றார். 

எத்தனை பேருக்கு தெரியும்…? Police Station போகாமலேயே, ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு !!

 

பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் . ஆனால் சில பிரச்சனைகளை காவல் நிலையத்தின் மூலமாக தான் தீர்க்க முடியும் . இது போன்ற பிரச்சனையின் போது, காவல் நிலையம் செல்வதற்கே பெரும்பாலான மக்கள் தயக்கம் காண்பிப்பர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே எப்ஐஆர் சேவை பெறலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

விளக்கம் :

தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR) சமீபத்தில் துவங்கியது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்ஐஆர் சேவையை பெறலாம் . இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

எப்படி பயன்படுத்துவது ?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0
District ,Name , Date of Birth, Address, Mobile Number, Email ID உள்ளிட்ட பல தகவல்களை புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்

Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்

Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்

Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்

attach Documents அட்டாச் செய்யவும்

[Max. 4MB (PDF, PNG, JPEG) Files alowed]:

உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.

Security Code:

இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்

Register:

அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும்

தவறான புகார்கள் பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை ..?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்தால் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .