ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

  1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் – ஜான் ஹோல்ட்
  2. டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி
  3. பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா
  4. வன்முறையில்லா வகுப்பறை – ஆயிஷா நடராசன்
  5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
  6. கல்வி ஓர் அரசியல் – வசந்தி தேவி
  7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க – ஷாஜகான் – வாசல் பதிப்பகம்
  8. முதல் ஆசிரியர் – சிங்கிஸ் அய்மாத்தவ்
  9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி
  10. பாகுபடுத்தும் கல்வி – வசந்தி தேவி
  11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச.குப்புசாமி – விஜயா பதிப்பகம்
  12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
  13. கரும்பலகையில் எழுதாதவை – பழ.புகழேந்தி
  14. ஆயிஷா – ஆயிஷா நடராசன்
  15. தமிழக பள்ளிக் கல்வி – SS.ராஜகோபாலன்
  16. வகுப்பறைக்கு வெளியே – இரா.தட்சணாமூர்த்தி
  17. எனக்குரிய இடம் எங்கே? – சா.மாடசாமி
  18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா – சா.மாடசாமி
  19. தமிழக பள்ளிக் கல்வி – பிரச்சனைகளும் தீர்வுகளும்
  20. பள்ளிகளில் பாகுபாடு – தமிழில் கோச்சடை
  21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் – பெ.தூரன்
  22. ஆசிரிய முகமூடி அகற்றி
  23. கற்க கசடற – பாரதி தம்பி
  24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – ஜோசப் ஜெயராஜ்
  25. தமிழகத்தில் கல்வி – காலச்சுவடு பதிப்பகம்
  26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் – புலம் பதிப்பகம்’
  27. ஆக்கவிய ஆசிரியம் – Rajendran Thamarapura
  28. கிழக்கு வெளியீடு – குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
  29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் – பூம்புகார் பதிப்பகம்

கீழ்க்காணும் நூல்களையும் சேர்த்து வாசிக்கலாம்.

  1. இந்தியக் கல்வி வரலாறு – எஸ். சுப்பிரமணியன்
  2. உலகக் கல்வியாளர்கள் – இரா.நடராசன்
  3. மூன்றாம் உலகின் குரல் – மக்கள் கண்காணிப்பகம்
  4. குழந்தை மொழியும் ஆசிரியரும் – கிருஷ்ண குமார்
  5. மாற்றுக் கல்வி : பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன? – அ.மார்க்ஸ்
  6. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் – தமிழில் கமலாலையன்
  7. சக்தி பிறக்கும் கல்வி – வே. வசந்திதேவி
  8. மீண்டெழும் அரசுப் பள்ளிகள் – பேரா. நா.மணி
  9. போயிட்டு வாங்க சார் – ச.மாடசாமி
  10. ஐந்தாறு வகுப்பறைகளும் பத்துப் பதினைந்து காக்கைகளும் – ஈஸ்வர சந்தான மூர்த்தி
  11. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்
  12. கரும்பலகைக்குப் பின்னால் 1-6 – சவுத் விஷன்
  13. எங்கள் ஐயா

14.சிறகிசைத்த காலம்

  1. விளையாட்டு ஒன்றும் விளையாட்டல்ல – நந்தகுமார்
  2. அன்புள்ள ஆசிரியருக்கு°°° இரா.நடராசன்
  3. வணக்கம் டீச்சர் – விஜயா பதிப்பகம்

18. இருளும் ஒளியும் – ச.தமிழ்ச்செல்வன்

கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது எப்படி?

’இன்ஜி., மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை போல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தி, அதன் பட்டியலை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

ஆறு முதல் 14 வயது வரையிலான ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில், இலவச அட்மிஷன் வழங்க வேண்டும் என்கிறது, கட்டாய கல்வி உரிமைச் சட்டம். 

 

நேர்மையாகவும், ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள வகையிலும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். 

 

அவர் கூறியதாவது

 

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் அளிக்கும் நடைமுறை, இந்த சட்டத்தை நியாயமாக பின்பற்ற வேண்டும் என விரும்பியவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. 

 

இதன் தொடர்ச்சியாக, இன்ஜி., மருத்துவ படிப்புகளைப் போல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் நடத்த வேண்டும். சேர்க்கை பட்டியலை அரசே, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

 

வசிப்பிட தொலைவு குறித்து, தெளிவான அறிவிப்பு வழங்க வேண்டும். பள்ளியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் வசிக்கும் மாணவர்களால், மொத்த இலவச இடங்களையும் நிரப்ப முடியாத பட்சத்தில், வசிப்பிட தொலைவை அதிகரித்து, மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

 

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கும், நலிந்த பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதால், வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைவருக்கும், வருமான வரம்பு தேவையில்லை என, அரசு முடிவு செய்திருப்பதாலும், வசதியுள்ள பலர் இலவச இடம் பெறும் வாய்ப்புள்ளது.

 

ஆகவே, துப்புரவுத் தொழிலாளர்கள், ஊனமுற்றோர் போன்ற சிறப்பு பிரிவினரைத் தவிர, மற்ற அனைவருக்கும் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அரசு இணையதளத்தில் அறிவித்துள்ள பட்டியலில், எந்தெந்த பள்ளிகளில் எந்த தேதியில், எத்தனை மணிக்கு, எந்த அதிகாரிகள் முன்னிலையில், குலுக்கல் நடைபெறும் என்பதை, உடனடியாக அறிவிக்க வேண்டும். 

 

தேர்வு செய்த மாணவர்களின் பட்டியல், பள்ளியில் இருந்து அவர்களின் வீடு அமைந்திருக்கும் துாரம், முகவரி, வருமான விபரங்களையும் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும்.

 

சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளிலும், இத்திட்டம் வாயிலாக அரசே சேர்க்கை நடத்தி, பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மே 18 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இன்னும் இருபது நாட்களே உள்ளதால், சேர்க்கை புரிய சேவையான சான்றிதழ்களை தாமதமில்லாமல் வழங்க, தாசில்தார்களுக்கு உத்தரவிடுமாறு, மாவட்ட கலெக்டருக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரவை மீறி விடுப்பில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளி ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செயல்படாது.இது குறித்து ஏற்கெனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகும் இயங்குவதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மேலும் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனுப்பிய சுற்றறிக்கை ஆகியவற்றை மீறி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் மீறி பள்ளிகள் செயல்பட்டால் அது தொர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை காட்டுவதாக இருக்கும். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

+2 தேர்வில் ‘கிரேஸ்’ மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், 1௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்.அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, ‘மாடரேட்’ முறை பின்பற்றப்படுகிறது.

இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், ‘கிரேஸ் மார்க்’ என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது.அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன.பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில், ”தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை.

விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,” என்றார்.சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ”பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, ‘கட் – ஆப்’ மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட,தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,” என்றார்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை அறிமுகம் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது,விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் புதிய முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத் தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட விண் ணப்பத்தை உரிய ஆவணங்க ளுடன் இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பொறியியல் படிப்பில் சேர 2015-ம் ஆண்டு வரை அச்சடிக்கப் பட்ட விண்ணப்பங்களே வழங்கப் பட்டு வந்தன. ஆன்லைனில் விண் ணப்பிக்கும் வசதி இருந்தபோதும் அது மாணவர்களின் விருப்பத் துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப் படுத்தியது. ஆன்லைனில் விண் ணப்பித்தவுடன் அதை பிரின்ட்அவுட் எடுத்து தேவையான ஆவ ணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பத்துக்கு உரிய கட்டணத்தை ஆன்லைனில் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்று இருந்தது. அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் உரிய கட்ட ணத்தை டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் செலுத்தி விடலாம்.இந்நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணத்தை ஆன் லைன் மூலமாக மட்டுமே செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே, பொறியியல் படிப்புக்கு ஆன் லைனில் பதிவுசெய்யும் மாண வர்கள் அதற்கான கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகிறது. எனி னும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்தி ராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) ஆன்லைனில் பதிவுசெய்து வைத் துக் கொள்ளலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங் களைக் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்துவிடலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திராமல்மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.