சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் – அரசுக்கு பரிந்துரை

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்

கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’ ஒருங்கிணைப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று (ஆக.,29) நடக்கிறது.

ஒரு மாணவரின் பெயர் உட்பட முழு விபரம் சேகரிக்கும் வகையில் 2005ம் ஆண்டு முதல் கல்வித்துறையில் ’எமிஸ்’ (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) பணிகள் நடந்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இப்பணி நுாறு சதவீதம் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.

குறிப்பாக, பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள மாணவர்கள் பெயர்களை இணைப்பது, கல்வியாண்டு இடையிலேயே வேறு பள்ளி அல்லது வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கையாவது, இடைநிற்றல் மாணவரை கண்டறிவது, அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சில குளறுபடிகள் என பல காரணங்களால், நுாறு சதவீதத்தை எட்ட முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர்.

மேலும் ’எமிஸ்’ பணிகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் பழமையானதாகவும், அதிக விபரங்களை ஏற்று தக்க வைக்கும் திறன் குறைவானதாகவும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இதனால் சிறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும், சென்னை தலைமை தொகுப்பு அலுவலகத்தில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

இதுபோன்ற காரணங்களால் போதிய தகவல்களை தக்க வைக்கும் வகையிலான நவீன மென்பொருள் உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து செயலராக இருந்த உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால், புதிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்து ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்த மென்பொருள் மூலம் ’எமிஸ்’ பணிகளை முடிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் எண்ணிக்கையை விட ’எமிஸ்’ எண்கள் எண்ணிக்கை அதிகரித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து உதயசந்திரன் எடுத்த நடவடிக்கையால், தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே திருத்தம் செய்யும் வசதியும் ஏற்படும். இதன்மூலம் நுாறு சதவீதம் ’எமிஸ்’ பணிகளை எட்ட முடியும். மாணவர்கள் ’ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதும் எளிதாகும், என்றார்.

படிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்…. கல்வி கட்டணம் இனி திரும்ப கிடைக்கும்..!

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த படிப்பு வேண்டாம் என்று வெளியேறும்போது, கட்டிய பணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்பக் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது.

 

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கீழ், இயங்கும் சில கல்வி நிறுவனங்கள், கல்வி ஆண்டு தொடங்கும் முன்னரே தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கின்றனர். அந்த மாணவர்களிடமிருந்து முழு கட்டணத்தையும், பள்ளிச் சான்றிதழையும் வாங்கிக் கொள்கின்றன.

 

 

எனவே, படிப்பு தொடங்கும் முன் ஒரு மாணவர், சேர்க்கையை திரும்பப் பெற்றால் ஆயிரம் ரூபாய் மட்டுமே கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகையைக் கொடுக்க வேண்டும் எனவும் அப்படி கொடுக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் எச்சரித்துள்ளது

சவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்?

இன்று முதல் நிர்வாக பணிகளை துவக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய செயலருக்கு, அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆதிக்கத்தை சமாளிப்பது உட்பட, பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக பள்ளிக்கல்வி செயலராக, மார்ச், ௬ல் உதயசந்திரன் பொறுப்பேற்றார். 

 

 

நிர்ப்பந்தம் காரணம் : அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வியில் பல மாற்றங்களை, அவர் அமல்படுத்தினார். இதற்கு, பெற்றோர், மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, சிலரின் நிர்ப்பந்தம் காரணமாக, பாடத்திட்டத்துக்கான பள்ளிக் கல்வி செயலராக மட்டும், உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.

புதிய பள்ளிக்கல்வி செயலராக, முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், இன்று முதல் அதிகாரபூர்வமாக பணிகளை துவக்க உள்ளார். 

அவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து, அவரது கட்டுப் பாட்டில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உதயசந்திரன் மேற்கொண்ட மாற்றங்களை தொடர்வதில், பிரதீப் யாதவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

 

l ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதிக்கத்தை சமாளித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்

l இட மாற்றம், பதவி உயர்வு, ‘டெண்டர்’ வழங்குவது என, பல பணிகளில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ஆளுங்கட்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் அணிகளை சேர்ந்தவர்களை சமாளிக்க வேண்டும்

l மத்திய அரசின் பல நிதியுதவி திட்டங்களை, அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்று பணிகளுக்கு மாற்ற வேண்டும்

l புதிய பாடத்திட்ட பணி களை சுதந்திரமாக மேற்கொள்ள, செயலர் உதயசந்திரன், பாடத்திட்டக்குழு மற்றும் அதிகாரிகளுக்கு, அனுமதி வழங்க வேண்டும்

l பள்ளிக்கல்வியில் செயல்படும் அதிகாரி களின், ஆளுங்கட்சி செல்வாக்கை சமாளித்து, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்

 

பல்வேறு சவால்கள் : l ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ள போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, பள்ளிக் கல்வி பணி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

l புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள, பிளஸ் ௧ பொது தேர்வை, புதிய விதிகளின்படி, குழப்பமின்றி நடத்த வேண்டும்

l ‘நீட்’ போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும்.

இப்படி பல்வேறு சவால்கள், புதிய முதன்மை செயலருக்கு காத்திருக்கின்றன

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்! –

குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.

 

 

அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு மதிப்பு சார்ந்ததாக இருந்த காலத்தில், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஆசிரியர், மாணவருக்கு இடையிலான உறவு எல்லாமே நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதை வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் இதுவல்ல. இன்று மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

 

ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசினார் உளவியல் ஆலோசகர் பாபுரங்கராஜன்

‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாட்டைக் களைய ஆசிரியர்கள் சில விஷயங்களின் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.

 

இன்று நடத்தும் பாடத்தை நாளை படித்து வர வேண்டும் என்பது பொதுவான விதி. அதையே ஆசிரியர்கள் கடுமையான கட்டளையாக சொல்லக்கூடாது. படிக்காமல் வந்தால் 10 முறை இம்போசிஷன் எழுத வைப்பேன் எனப் பயமுறுத்துவது போன்ற பாணியில் படிக்க வைக்க முயல்வது தவறு. இது, அந்தப் பாடத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஒருவித வெறுப்பினை உண்டாக்கும். அதேபோல் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது காரணம் இல்லாமல் வெறுப்பினைக் காட்டுவது, முதல் நாள் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யச் சொல்லிவிட்டு மறுநாள் வேறு ஒன்றை வலியுறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள் இடுவது,  போன்றவை மாணவர்களைக் குழப்புவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். இது ஆசிரியர்- மாணவர் இருவருக்குமான இணக்கத்தை  கெடுத்துவிடும். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

ஒரு நாளில் என்ன வேலைகளையெல்லாம் மாணவனால் செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் மனப்பாடம் செய், எழுது என்று செய்ய இயலாத அளவுக்கு வேலைகளை வாங்கும்போது, மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகிச் செல்ல நேரிடும். எந்த மாணவரிடமிருந்து எப்படிப்பட்ட திறனை எதிர்பார்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை வாங்கினால் ரிசல்ட் திருப்திகரமாக இருக்கும்.

 

இன்றைய குழந்தைகள் சுயமரியாதையை அதிகம் எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருந்தால்கூட மற்றவர் முன்னிலையில்தான் திட்டுவாங்குவதை அவர்கள் விரும்புவதில்லை.  அதையும் மீறி திட்டினால் அதைப் பெருத்த அவமானமாக நினைத்து விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாராட்டுவதை எல்லோர் முன்னிலையிலும், திட்டுவதை தனியாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எஜமானர்கள் போலவும், மாணவர்கள் தொழிலாளிகள் போலவும் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

 

 

ஆசிரியர்கள், தாங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் வேண்டாம். தவறு மனித இயல்பு. தவறு செய்வதை புரியும்படி திருத்தினாலே அவை மீண்டும் நிகழாது. இன்றைய குழந்தைகள் அதிகநேரம் இருப்பது வகுப்பறையில்தான். எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொண்டாலே போதுமானது. நன்கு படிப்பவர்களே அறிவாளிகள் என்கிற சிந்தனையை ஆசிரியர்கள் தங்கள் மனங்களில் இருந்து நீக்கினாலே போதும். மாணவர்கள் மிளிர்வார்கள்.

திறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் – முழு தொகுப்பு

8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 

 

10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 

 

இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா ? 

 

இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள் 

அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் . 

 

என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு. 

 

மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE ) என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது . 

 

தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 

 

Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 

7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

 

தேர்வுக்கட்டணம் ரூ. 50 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

ü மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

இடைவேளை – 20 நிமிடங்கள் 

ü பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . 

(தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்). 

மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். 

நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம் வகுப்பு மாணவர்கள் 

 

Ø தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 

8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

ஜூலை அல்லது செப்டமப்ர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

தேர்வுக்கட்டணம் ரூ. 10 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

மனத்திறன் தேர்வு (MAT) – MENTAL ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

இடைவேளை – 20 நிமிடங்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர் 

வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். 

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும். 

தேசிய திறனாய்வுத்தேர்வு 

( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE 

 

Ø தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 

NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும் 

 

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : 

ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். 

www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . 

தேர்வுக்கட்டணம் ரூ. 50 

 

Ø தேர்வு நடைமுறை: 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

 

Ø தேர்ச்சி முறை: 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். 

ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.) 

 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

NTSE – STAGE – 2 – 

 

மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும் 

தேர்வுக்கட்டணம்¸கிடையாது. 

முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 

 

ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல் 

(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். 

 

வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 

மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST 

 

50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள் 

ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 

 

50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள் 

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 

 

100 வினாக்கள் – 100 மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் 

தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும். 

 

Ø தேர்ச்சி முறை: 

MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்). 

ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது. 

 

மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். 

 

தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 

  • 15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்
  • 7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்
  • 3% மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.

ü 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும் 

ü இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது மாதந்தோறும் ரூ. 2000வீதமும் 

 

ü முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 

 

திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் : 

மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும் உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும். 

 

படிப்பறிவுத்திறன் (SAT) தேர்வில் 

அறிவியல் 

கணிதம் 

சமுக அறிவியல் 

ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 

 

மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். 

 

Ø பகுத்தாயும் திறன் 

Ø காரணம் அறியும் திறன் 

Ø சிந்திக்கும் திறன் 

Ø முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன் 

Ø முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன் 

போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும். 

 

மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும். 

 

மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும். 

 

எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள் 

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

 

 

வேகமெடுக்கிறது ,பாடத்திட்ட,மாற்றம்,ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

 

தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்; ஏழு ஆண்டு கள் பழமையான, 1 – 10ம் வகுப்பு வரையிலான, பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. 

 

இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட் டையன் தலைமையில், உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணை 

 

வேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்டத்துக்கான கலைத்திட்டக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.

 

 

கருத்துக் கேட்பு:

 

 

இந்த குழு, புதிய பாடத்திட்ட தயாரிப்புகளில் ஈடு பட்டுள்ளது. தற்போது,மண்டல வாரியாக கருத் துக் கேட்பு கூட்டம் நடத் தப்படுகிறது. 

 

இந்நிலையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மட்டுமின்றி, மாணவர் களுக்கான ஆய்வகம் அமைத்தல், நுாலகம் அமைத் தல், அதில் இடம் பெற வேண்டிய புத்தகங்கள் குறித்த விதிகள் என, உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும், கல்வியாளர் கள் குழு, வழிகாட்டுதலை வழங்க உள்ளது.

 

அதே போல், புதிய பாடத்திட்டப்படி, மாணவர்களுக் கான புத்தகம் தயாரிப்பதுடன், அதை கற்பிக்கும் முறைக்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி என, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. புதிய திட்டத்திலான பாடங்களை, எந்த விதமாக கற்றுத் தர வேண்டும் என விளக்கும், கற்பித்தல் வழிமுறை புத்தகமும் தயாரிக்க, பள்ளிக்கல்வித் 

 

துறை முடிவு செய்துள்ளாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

முழு வேகம்:

 

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் பொறுப்பு வகிப்பார் என, அரசு அறிவித்துள்ள நிலையில், இத்துறையின் செயலராக இருந்த உதய சந்திரன், தற்போது, புதிய பாடத்திட்டத்திற்கான செயலராக மட்டும் பணியாற்றுவார். உதய சந் திரன் வருகையில்,புதிய பாடதிட்ட பணி, முழு வேகம் எடுக்கும் என, எதிர்பார்க்கபடுகிறது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் -உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். இந்தநிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை? – தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றின் தகுதி சான்றிதழ் முடிவு பெற்று விட்டதால், அதனை புதுப்பிக்கஅரசிடன் விண்ணப்பித்துள்ளது. ஆனால், தற்போது வரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. 
இது தொடா்பாக சென்னை ஐகோர்ட்டில் அந்த பள்ளியின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
பள்ளியை மூடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அரசு சான்றிதழ் தர மறுக்கின்றனது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பள்ளிக்கு சான்றிதழ் வழங்குவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தொரிவிக்கப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தொடா்ந்து 9 வருடங்களாக சான்றிதழ் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் அரசின் நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒரு பள்ளியை மட்டும் வைத்து தீா்ப்பு கூற முடியாது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் நிலை குறித்தும் அறியப்பட வேண்டியது அவசியம் என்றார்.‘தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எத்தனை பள்ளிகள் செயல்படுகின்றன?, அங்கீகாரம் பெற்ற பிறகுதான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறதா?, மாணவா் சோ்க்கை குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா?, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் உண்டா?’உள்ளிட்ட 13 முக்கிய கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இந்த கேள்விகள் அனைத்திற்கும் வருகிற 30ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு! கல்வியாளர்கள் அதிர்ச்சி

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. 
 நீதிமன்றம் தடை உத்தரவு காரணமாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாடத்திட்டங்கள் தயாரிப்புக் குழுவில் மட்டுமே பணியை மட்டும் ஒதுக்கி இருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயச்சந்திரன் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். கீழ் செயல்பட வேண்டும். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றியிருப்பது கல்வியாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் உதயச்சந்திரன் பள்ளிக்கல்வி துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் எதிர்பார்ப்புக்கு அசைந்துக்கொடுக்கவில்லை என்பதால், உதயச்சந்திரனை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயச்சந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும்வரை, மாற்றி அமைக்கக் கூடாது என்று மாற்றத்துக்குத் தடை விதித்தது. தற்போது அவரைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து கீழிறக்கி பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழுவில் மட்டும் செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு.