ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை 

 

என்று ‘நீட்’ விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

நாமக்கல்லினைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

 

தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடாத திட்டத்தில்மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்ப்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?

 

அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின் படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?

 

நீட் தெரிவினைப்பொறுத்த வரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும்.

 

மாநில பாடத் திட்டத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மானவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

 

நீட் விவகாரத்தை தமிழக அரசின்முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் அழிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடம்

2012-ல் வெளியிடப்பட்ட 4000-கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கான ICT எனப்படும் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் பாடத்திட்டம் தற்போது சுருக்கப்பட்டு 1000 பள்ளிகளுக்கு மட்டும் என வரைவு செய்யப்பட்டுள்ளது…. இதனால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம்  சரிந்துள்ளது என்றே கூறலாம்…

 

 

 தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 90,00,000 மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய நிதிப்பணம் திறமையாகப் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பப்பட்டதுதான் கணினிக்கல்வி மீது நடத்தப்பட்ட பகிரங்க படுகொலை…

 

1992-லிருந்து இன்று வரையில் கணினி அறிவியலின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே சுமார் *_2.5 இலட்சம் கோடி‌.._*  இதுபோன்ற கல்வியை சீரழிக்கும் நிகழ்வு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் அரங்கேறியுள்ளன…

 

  சென்ற ஆட்சிக்காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ₹.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது… ஆனால் அந்த நிதிப்பணமும் மத்திய அரசிற்கே திருப்பி அனுப்பியது தமிழக அரசு…. இப்படி தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதன் விளைவுதான், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட கல்வியில் பின்தங்க நேர்ந்தது…

 

 கணினி ஆய்வகங்கள், கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் என இதற்காக ஆறு முறைக்கு மேல் தனியார் நிறுவனங்களுக்கு *டெண்டர் விடப்பட்டு ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அடையச் செய்கிறது…*

 

 தமிழக வரலாற்றில் ஒரு துறை இத்தனை அமைச்சர்களை சந்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது… சென்ற ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் *_சி.வி.சண்முகம்,  சிவபதி,  அக்ரி.கிருஷ்ணமூர்த்தி,  பழனியப்பன்,  வைகைச்செல்வன்,  வீரமணி_*  என ஆறு அமைச்சர்களும்,  தற்போதைய ஆட்சியில்  *_பெஞ்சமின்,  மா.ஃபா. பாணடியராஜன்,_*  தற்போது *_செங்கோட்டையன்_*  என ஆறு ஆண்டுகளில் ஒன்பது அமைச்சர்களை மாற்றம் செய்தது தமிழகக் கல்வித்துறைக்கு பெரும் பின்னடைவு…

 

 

குறிப்பு:கணினி ஆசியர்கள் சங்க்த்தின் சார்பில் இதுவரை கல்வி அமைச்சர் ,செயலாளர் ,இயக்குனர் ,மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் மனு கொடுத்து கால்கள் தேய்ந்து போயின நாங்கள் எங்கள் அரசு பணிக்காக போராடவில்லை இதில் 90இலட்ச மாணவர்களின் கல்விக்காக போராடுகின்றோம் தற்போது இருக்கும் கல்வி அமைச்சரை இதுவரை 36முறையும் செயலாளர் அவர்களை 15க்கும் மேற்ப்பட்ட முறையும் ,பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் மனு கொடுத்து கொடுத்து மன தோய்வுதான் அடைந்தது எங்கள் மனுக்கு பதில் இல்லை.கொடுத்தது பதில் இணையதளத்தில் முதல்வர் தனிப்பிரிவு மட்டும் தான் பதில் சொன்னது

நிராகரிக்கப்பட்டது என்று.

(முதல்வர் தனிபிரிவில் கணினி கல்வி என்ற வாரத்தைக்கு பொருள் நிராகரிக்கப்பட்டது என அர்த்தம்)அனைத்து மனுக்கும் பதில் கணினி மட்டும் தான் கொடுத்தது தவிர மனிதர்கள் அதையும் தரவில்லை ..

 

தற்போது இருக்கும் கல்வி முதன்மை செயலாளர் ஐயா அவர்களுக்கு மனு அளித்தபோது நான் துறைக்கு புதிது என்று எங்களிடம் கூறினார் ஆனால் மறுதினம் 1000பள்ளிக்கு கையொப்பம் செய்துள்ளார் (அரசாணை எண்:41,42).

 

“கடந்த இரண்டு மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன.இதில், ஆளும் அதிமுகவும் அடக்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39019 பேர் இப்போது பி.எட். படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. மொத்தமாக 39 ஆயிரம் பேரும் வாழ்வாதராத்தை இழந்து நிற்கிறோம்.

 

தற்போது இருக்கும் மதிப்புமிகு ஆனால், 6 ஆண்டுகளில் 9 கல்வி அமைச்சர்களை மாற்றிய தமிழக அரசு *திருமதி, சபீதா*  போன்ற அதிகாரிகளை எட்டு வருடங்களாக மாற்றாமல் இருந்தது மிகவும் வேடிக்கையாக உள்ளது…

 

 ஒரு அமைச்சரோ (அ) அதிகாரியோ ஒரு துறையில் புதிதாக நியமனம் செய்த பின்னர் அந்த துறைக்கான முழு செயல்வடிவத்தையும் அறிந்து கொள்ளவே ஆறு மாதங்கள் ஆகின்றன… ஆனால், அவர் தனது செயலை தொடங்கும்போதுதான் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்… இது என்ன கொடுமை…

 

 இறுதிவரையில்… அரசு பள்ளிகளும், அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளும் விளங்காமல் போவதே விலக்கப்படாத விதி என அரசாணைகளில் மாற்றி எழுதிவிட்டார்களோ என ஐயமாகிறது…

 

 இந்த  ICT திட்டத்தில் தகுதியுள்ள கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல்,  ELCOT போன்ற ஒப்பந்த ஊழியர்களை நியமித்து *_பி.எட்., கணினி ஆசிரியர்களின் வயிற்றிலடித்ததுதான் தமிழக அரசின் சாபம்_*

 

  பாடநூல் கழக அதிகாரிகள் ICT திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை எனவும், அதைப்பற்றி இனிமேல்தான் ஆலோசனை செய்யப் போகிறோம் என கூறுவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது…

 

 இதுபற்றி, முன்னால் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் கூறுகையில், முன்னால் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த ICT திட்டம் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது…. பிறகு இது, 110-விதியின் கீழ் 4000 பள்ளிகள் என குறைத்து அறிவிக்கப்பட்டது… தற்போது இது மேலும் குறைக்கப்பட்டு 1000 பள்ளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது… இதுவும் 1000 பள்ளிகளிலாவது செயல்படுமா (அ) 500 என குறையுமா என பொருத்துருந்துதான் பார்க்க வேண்டும் என கூறுகிறார்…

 

 

*தமிழகத்தில்  மட்டும் கணினி கல்விக்கும் கணினி ஆசியர்களுக்கும்  வந்த சோதனை!!!*

 

இவ்வாறாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், அடக்குமுறைகளாலும் மற்ற மாநிலங்களை விட தமிழக கல்விதுறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

Posted: 22 Aug 2017 04:20 PM PDT

சென்னை, ”வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,” என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

 ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:தமிழக பள்ளிகளில்,

இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர்.

தேசிய நுழைவு தேர்வு

அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் போய்விட்டது. மேலும், தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியவில்லை.இதை, மாற்றும் வகையில், தமிழக பள்ளிகளில் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். இந்த வகுப்புகளுக்கு, ஜனவரிக்குள், பாடத்திட்ட

தயாரிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

 

மதிப்பீட்ட முறை

தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும்

மாற்றம் கொண்டு வரப்படும். பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் செலவு திட்டங்கள், தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றுக்கும், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

கருத்தறியும் கூட்டங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறிய கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவற்றையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வர முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

EMIS தற்போதைய தகவல்

அனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே கல்வித் துறையின் முறையாள அறிவிப்பு வந்த பிறகு EMIS பணியினை தொடங்கவும்.

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ- மாணவியர்

பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்துஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், ‘டிவி’க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள்அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடுமுழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின்ஆலோசனையை

மத்திய அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம்அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறதுஇவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

 

 

இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறதுபல்வேறு பள்ளிகள் இதன் காரணமாகமூடப்பட்டுள்ளனமாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லைதரமான கல்வி கிடைப்பது இல்லை என்றபுகார்களும் எழுந்துள்ளனமத்தியமாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவமாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதுமேலும் தேசிய அளவில்மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லைஎன்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது.ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுஇதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளனபுதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள்எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள்ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறதுமொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

 

தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்றபள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையைஅதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள்இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர்மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

சுதந்திர தினத்துக்கு வராத மாணவிகளுக்கு அபராதம்!!!

சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத 10க்கும் மேற்பட்ட 
மாணவிகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தத் தினத்தில் சென்னை டவுட்டன் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சில மாணவிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கு வராத 10 மாணவிகளுக்கு ரூ.2500 அபராதம் விதித்ததோடு, அவர்களை மூன்று நாட்கள் வீதியில் நிற்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஆனால், பெற்றோருக்கு உரிய பதில் அளிக்கப் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவிகளிடம் அபராதமாக வசூலிக்கப்படும் ரூ.2500 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று கூறியதால் பெற்றோர் அபராதம் செலுத்த மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு வராத காரணத்தால் அவர்களை வீதியில் நிற்க வைப்பது, பெரிய தொகையை அபராதம் விதிப்பது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

‘தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்’ என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 

பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை கிடைக்கும், தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவில், நவ., முதல் வாரம் நடக்கிறது. தற்போது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நாளை முதல், செப்., 1க்குள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
 தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும்சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள்பெற்று இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் lசெய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற,எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

  செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.

 செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. 
 பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின்வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.

அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் – லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.