கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

 

‘பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்’ என, கூறியுள்ளார்.

 

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்

 

நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் குறித்தும், அதனை இடிப்பது குறித்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 

 

கட்டிடம் இடிந்து விழுந்து இனியும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை செயலர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்: வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதிசென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது.ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவுபணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல்.எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம்.இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்’’ என்றார்.

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.

உண்டு உறைவிட பள்ளியான இப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.  இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.  எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இம்மனு விசாரணையின்போது, நவோதயா பள்ளிகள் தரப்பில் ‘நவோதயா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்பில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மைப்  பாடமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும்’ என தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின் இறுதியில்  நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் ‘நவோதயா பள்ளிகள் வந்தால் இந்தி திணிக்கப்படும் என கருதப்பட்டதால், தமிழகத்தில் இப்பள்ளிகளுக்கு அனுமதி  வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக  இருக்கும் என்றும் நவோதயா வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடம் உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து 660 நவோதயா பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு மாணவர்  சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு நவம்பர் மாதம் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் ஒரு மாத காலம் கூட  இல்லாத நிலையில் அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களில் இருந்து மட்டுமே 6 ம் வகுப்பு தகுதியானவர்களை தேர்வு செய்ய பிப்ரவரி மாதம்  நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

ஜவஹர் நவோதயா வித்யாலயா தரப்பில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில்  இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனமாக இருந்து வருவதால் பெற்றோர் மத்தியில் குழப்பமான நிலை உள்ளது.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த குமரி மகாசபா அமைப்பின் தலைவர் ராவின்சன் கூறுகையில், ‘குமரி மகா சபா சார்பில் தமிழகத்தில் நவோதயா  வித்யாலயா தொடங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளோம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால்  இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாமல் போய்விடும். மாவட்டம் தோறும் மாணவர் சேர்க்கைக்கு வசதிகளை ஏற்படுத்தி தற்காலிக  கட்டிட வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு

பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிப்பெண் முறையும், 200லிருந்து, 100 ஆக மாற்றப்பட்டுள்ளது.

 

 

குழப்பம் : பிளஸ் 1 பொது தேர்வில், முக்கிய பாடங்களுக்கு, 20 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், செய்முறை தேர்வு உண்டா; அதன் விதிகள் என்னவென்று, மாணவர்களும், பள்ளிகளும் குழப்பம் அடைந்தன.

இது குறித்து, நமது நாளிதழில், இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டை யன் உத்தரவின்படி, செய்முறை தேர்வுக்கான விதிகள் உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் தேர்வு அட்டவணையை தயாரித்து வருகிறது. தேர்வு அட்டவணைக்கு முன், செய்முறை தேர்வுடன் இணைந்த, அகமதிப்பீட்டு முறையின் விதிகளை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளார்.

 

10 மதிப்பெண்கள் : அதில், செய்முறை தேர்வில், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீடாக வழங்க, நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப் பட்டுள்ளன. அதை பின்பற்றி மதிப்பெண் வழங்குவதை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால், செய்முறை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை, சுற்றறிக்கையில் தேர்வுத்துறை இயக்குனர் குறிப்பிடவில்லை. விரைவில் தேர்வு அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது

பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா

அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்சார்பில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பாக படிக்கும், மீத்திறன் கொண்ட மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில், கல்வி சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு, 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு, இரண்டு நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000 ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் கண்ணன் கூறுகையில், ”அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மாவட்டந்தோறும் பள்ளிக்கு, தலா ஒரு மாணவர் வீதம், 100 பள்ளிகளில் இருந்து, 100 மாணவர்கள் செல்கின்றனர். ’20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம்,ஐந்து பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக உடன் செல்கின்றனர். ”இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சுற்றுலா அழைத்து செல்ல, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைப்பதோடு, அறிவுசார் தேடல் விரிவடையும்,” என்றார்.

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

‘பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்’ என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில், பருவ மழையால் எந்த விபத்தும், பள்ளி வளாகங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்: அனைத்து பள்ளிகளிலும், கட்டடத்தின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும். மழைநீர் ஒழுகும் கட்டடங்களை தவிர்க்க வேண்டும். பாழடைந்த கட்டடங்களை, அனுமதி பெற்று இடிக்க வேண்டும். மின் உபகரணங்களை ஆய்வு செய்து, மின் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். கீழே விழும் நிலையில், மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். பள்ளியில், அவசர தேவைக்கு, முதலுதவி மருந்துகள் வைத்திருப்பது அவசியம்.

பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை, பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் செல்லவோ, அவற்றில் குளிக்கவோ கூடாது என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

‘ஆதார்’ எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, ‘ஆதார்’ எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, ‘ஆன் – லைனில்’ பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.

மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

 

 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.

பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

 

திருப்பி அனுப்பும்

 

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், ‘மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்’ என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.’பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்’ என, தெரிவித்துள்ளது.

 

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் – லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

 

தேர்வு எழுத வாய்ப்பு

 

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது

ஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குதல்ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தொடங்குதல், 9-ஆம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கணினி மயமாக்குதல் போன்ற திட்டங்களை

செயல்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகுஅனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.

 

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன்தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்பொதுநூலகத் துறை இயக்குநர் எஸ்கண்ணப்பன்சென்னை மாவட்ட மைய நூலகர் இளங்கோ சந்திரகுமார்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்நீட் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய காலம் நீட்டிப்பு தமிழகத்தில் நீட்உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக 442 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

 

பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக கடந்த அக்.16-ஆம் தேதி முதல்வரும் 26-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததுபல பள்ளிகளுக்குபயனாளர் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதுஇது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம்செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர்அப்போது பதிலளித்த அமைச்சர், ‘ அதிக மாணவர்கள்பயன்பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்பயிற்சி வகுப்புகள்தொடங்கப்படவுள்ளன.

 

 

மாணவர்களின் நலன் கருதி பயிற்சி மையத்தில் சேருவதற்கான பதிவு நவம்பர் முதல் வாரம் வரைநீட்டிக்கப்படும்போட்டித் தேர்வு தொடர்பாக 54 பேராசிரியர்கள் ஆந்திர மாநிலம் சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளனர்அந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்குவர்.மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் தொடங்கும்.