விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! – செங்கோட்டையன் தகவல்

திருச்சியை அடுத்த முசிறி அருகில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளைத்

தொடங்கிவைக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம்திருச்சி வந்தார்பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகுப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது

 

 

அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது.  முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள்குறித்து  15 நாள்கள் பெற்றோர்கள்கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும்இந்தக் கருத்துகளின் அடிப்படையில்அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளைஎதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும்மேலும்அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும்மாணவமாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்அதில் மாணவர்களின் ஆதார் எண்ரத்த வகை குறிப்பிடப்படும்.பள்ளி மாணவர்கள்டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

’எமிஸ்’ இணையதளத்தில் இரட்டை எண்கள்!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்ஒரு மாணவருக்குஇரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால்,எதை ஆவணங்களில்

பின்பற்றுவது என தெரியாமல்தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

 

பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டபள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்உருவாக்கப்பட்டது.இதில், 2012 முதல்தகவல்கள் பதிவேற்றியும்தொழில்நுட்ப குளறுபடிகளால்தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.

 

 

 

கடந்தாண்டில்பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்குநாமினல் ரோல் எனப்படும் பொதுத்தேர்வு எண்எமிஸ்இணையதள தகவல் அடிப்படையிலே வழங்கப்பட்டன.

 

 

இத்தகவல் தொகுப்பை பயன்படுத்திஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட் கார்டு’ வழங்கவும்முடிவுசெய்யப்பட்டுள்ளதுஎனவேபுதிய மேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.

 

 

இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டதுதலைமையாசிரியர்களுக்கு,எமிஸ் இணையதளத்தை பயன்படுத்தும் முறைகுறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதுஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளும்ஒரே நேரத்தில்தகவல்களை உள்ளீடு செய்ததால்இணையதளம் முடங்கியது.

 

 

தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர்வகுப்புமுகவரிரத்த வகை முதற்கொண்டு, 40க்கும்மேற்பட்ட தகவல்களைஎமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்துபிரத்யேக எண் பெறப்பட்டது.

 

 

நடப்பாண்டில்புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமேஎமிஸ் எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களை,புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்த போதுமற்றொரு அடையாள எண் உருவாகியுள்ளதுஇதில் எதைகல்வி ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியவில்லை.

 

 

 

சர்வர் முடங்கியிருப்பதால்வரும் 4ம் தேதிக்கு பின்தகவல்களை இணைக்கலாம் எனமட்டுமேகல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்இரட்டை பதிவு எண் குறித்துதெளிவான விளக்கம் அளிக்கவில்லை’ என்றனர்

பள்ளி மாணவர்களுக்கு “தொடுவானம்” திட்டம் 16ம் தேதி தொடக்கம்

அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித்திட்டத்துக்கு ‘தொடுவானம்

என்று பெயரிடப்பட்டுள்ளதுஇந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

 

 

 மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழக பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில்பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளதுஇவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் வேகமாகநடக்கிறதுமுதற்கட்டமாக 250 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

 

 

இவற்றின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதுஇந்த திட்டம் வரும் 16ம் தேதிதமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளதுஇதற்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில்வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசுபள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில்மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவதுஎன்பது குறித்த கையேட்டினை

ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.

 

 

 

 அடுத்த கல்வியாண்டு முதல்பாடங்கள் நடத்தும்போதுஇந்த கையேட்டின் அடிப்படையில்ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தவேண்டும்இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படிஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும்வரலாறுகணிதம்அறிவியல்ஆங்கிலம்தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.

 

இதுகுறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றனஇந்தபுதிய பாடத்திட்டத்தின் படி இனிஎப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்புதிய பாடத் திட்டங்களுக்குமாணவர்களை எவ்வாறு தயார் செய்வதுபுரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவதுபயிற்சிகளை எவ்வாறு அளிப்பதுஉள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள்அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்த ெதரிவித்தார்.

 

மேலும்ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும்பாடங்கள் வாரியாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம்நடத்தும் கையேடு தரப்படும்இதன் மூலம்அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களைமாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறதுஇந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும்ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.

 

பாடங்களை திட்டமிடல்வரைபடத்துடன் விளக்குதல்வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச்செய்யும் விதத்தில் கையேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்உதாரணமாகஇயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்திவிட்டுசெல்லாமல்அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம் நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்.அவ்வாறு செய்வது எப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.

 

 

2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்பு தயாராகிவிடும்அதன்பின்அனைத்து அரசுபள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவதுதங்களை எப்படி தயார் செய்துகொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும்அப்போது இந்த கையேடுகள்தரப்படும்இந்த கையோடுகள்கல்வித்துறையில் வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால்ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில்மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும்பல்வேறு நவீனபுத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.

வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம்

திருச்சி: ”வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய

பாடத்திட்டம் இருக்கும்,” எனகல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவதுதமிழ் கலாசாரம்பண்பாடு போன்றவற்றைவருங்காலமாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில்பாடங்கள் மாற்றி அமைக்கப்படும்எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில்புதிய பாடத்திட்டம் இருக்கும்.

 

தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின்பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால்நவம்பர், 15ம் தேதி அதற்கான முன் வரைவுவெளியிடப்பட்டு, 15 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்பெற்றோர்கல்வியாளர்களிடம் கருத்துக்கள்கேட்கப்பட்டுஅதன் அடிப்படையில் அடுத்த ஆண்டுபுதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

 

மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிஅளிக்கப்படும்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும், ‘ஸ்மார்ட்‘ வகுப்புகள் துவங்கும் திட்டமும்அடுத்த மாதம் துவங்கி விடும்இவ்வாறு அவர் கூறினார்.

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஇதனால்இந்தமையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லைகோவைநீலகிரிதிருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியபகுதியாகும்இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமேபல்கலையால்அங்கீகாரம் தர முடியும்அதேபோன்றுஇந்த எல்லையில் மட்டுமேதொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

 

ஆனால்பாரதியார் பல்கலை நிர்வாகம்சி.பி..பி., (Centre for Participatory and Online Programme), சி.சி..., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) எனபல்வேறு பெயர்களில், ‘எல்லை மீறி‘ தொலைதுார கல்வி மையங்களைபல ஆண்டுகளாக நடத்தி வருகிறதுஇதைத்தடுப்பதற்குதமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

 

380 கல்வி மையங்கள்

 

இதனால்வெளிமாநிலங்கள்வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க,பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளதுஇந்த மையங்களில்கலைஅறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றிமெடிக்கல்கவுன்சில்பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டுபட்டம் மற்றும்பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

 

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால்முறையாக வகுப்புகள்நடத்தப்படுவதில்லைவாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால்ஏராளமானமாணவர்கள் இதில் சேர்கின்றனர்இவர்களின் விடைத்தாள்களும்பெயரளவில் திருத்தப்பட்டுதேர்ச்சி தரப்பட்டுபாரதியார்பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

 

அதேநேரத்தில்அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில்பணத்தையும்பல ஆண்டுகளையும் செலவழித்துகஷ்டப்பட்டுபடித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லைஇதன் காரணமாககல்லுாரிகளை விடுத்து,இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதுதமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல்படிப்புகளுக்கான பட்டத்துக்குஎந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இதைக் கண்டித்துபல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால்தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல்கல்லுாரிகள் சங்கம் சார்பில்ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதுபாரதியார் பல்கலை பதிவாளர்பல்கலைமானியக்குழு செயலர்தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர்தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர்ஆகியோர்இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவருகிறதுஇந்நிலையில்பல்கலை மானியக் குழு சார்பில்அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக்சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம்பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும்பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும்என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனுபாரதியார் பல்கலை எந்தசட்டத்தையும்விதியையும்சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

 

பேராசிரியர் யஷ்பால்சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்தஉத்தரவின்படிமாநில பல்கலைக்கழகங்கள்தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்விமையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனுபல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

எல்லை மீறல்

 

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலைஅதன் எல்லைக்குட்பட்டகோவைநீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியதுமாவட்டங்களில் தொலைதுார கல்விமையங்களை நடத்தலாம்ஆனால்எல்லையைத் தாண்டிமையங்களை நடத்தி வருகிறது.

 

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள்தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவதுதொடர்பாகபல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்றுவிரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுஅதைபல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.

பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிபல்கலை வளாகத்திலும்அதன்எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் ‘கோர்ஸ்களை நடத்திபட்டங்களை வழங்கலாம்.

 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால்அதற்கு பல்கலை மானியக்குழுவிடம்முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்றுநாடு முழுவதும் உள்ள மாநிலபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘தங்களதுபல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில்இணைப்புக் கல்லுாரிகள்வளாக மையம்கல்வி மையம் போன்றவற்றைநடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

 

2016 மே 4 அன்றுஅனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவைஅமல்படுத்தும் வகையில்மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்மாநில எல்லையைத்தாண்டிபல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலபல்கலைக்கழகங்கள்தங்களது எல்லையைத் தாண்டிஇத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள்அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில்பல்கலைமானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பேஎந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

 

 

பட்டம் செல்லாது

 

ஆனால்பாரதியார் பல்கலைக்கழகம்பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும்அகில இந்திய தொழில் நுட்பகவுன்சில்இந்திய மெடிக்கல் கவுன்சில்இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்எதிலும் அனுமதி பெறாமலும்பட்டப்படிப்புபட்டயப்படிப்புஇளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை,சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

 

பல்கலையின் பெயர் மற்றும் ‘லோகோவுடன்இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால்பொது மக்கள்,மாணவர்கள்பெற்றோர்கள் எல்லோரும்இந்த மையங்களை நம்புகின்றனர்இந்த மையங்கள் அனைத்தும்சட்டத்துக்குவிரோதமாகவும்பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும்சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும்நடத்தப்படுவதால்இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம்சட்டப்படி செல்லாது.

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமானஎச்சரிக்கைகள்கடிதங்கள்இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல்இந்தமையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

 

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள்தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும்,பணத்தையும் இழந்துள்ளனர்எனவேபல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின்அடிப்படையில்உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறுஅந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலை மானியக்குழுவேபகிரங்கமாக இந்த மையங்களை ‘இல்லீகல்‘ என்று கூறியுள்ளதோடுஇந்த மையங்களில் தரப்படும்பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளதுஇதனால்இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கிவைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளதுஅத்துடன்சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலைநிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால்ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

 

 

எந்தஆண்டு முதல்?

 

கல்வியாளர்கள் கூறுகையில், ‘பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின்,பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது.இதுகுறித்துமானியக்குழுதான்மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்என்றனர்.

 

 

ஏன்எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

 

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள்வேலைக்குச்செல்வோர்உயர் கல்விக்கு விரும்பும் ஏழைமாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போதுஅவற்றை ஏன் மூட வேண்டும் என்றுபலரும் கேள்வி எழுப்புகின்றனர்இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதிகல்லுாரிகள் சங்கம்இதற்குக் கூறும் காரணங்கள்யோசிக்க வைப்பவை.

மாணவர்களிடம் ‘ரெகுலர் கோர்ஸ்‘ என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றனஆனால்இவை தொலைதுாரக் கல்வி என்பதுமட்டுமில்லாதுஇந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.

அரசாணைமுழு நேர ஆசிரியர்கள்ஆய்வுக்கூடம்நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.

கல்வி சார்ந்த அமைப்புகள்இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.

மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாதுபல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவானவருகை இருந்தால்ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.

மையங்களில் நடக்கும் தேர்வுமுறையாகக் கண்காணிக்கப்படாததால்நிறைய முறைகேடுகள் நடக்கின்றனஇதற்கானவிடைத்தாள் திருத்துவதும்மாலை 5:30 மணிக்குப் பின்முறையற்ற பணியாக நடக்கிறது.

கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும்இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரேமாதிரியான பட்டம் தரப்படுகிறதுஅதில்எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.

இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத ‘கோர்ஸ்களையும் இந்த ‘இல்லீகல்‘ மையங்களில் நடத்துகின்றனர்.

வகுப்புகள் நடத்தாமல்செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

இந்த மையங்களால்பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறதுஅந்த அவப்பெயர்இதன் இணைப்புக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறதுஅவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

 

அனுமதி அளித்தோரே பொறுப்பு!

 

பிரின்ஸ் கஜேந்திரபாபுகல்வியாளர்பாரதியார் பல்கலையு.ஜி.சி., உத்தரவை மீறிஎல்லை தாண்டி தொலைதுார கல்விமையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பதுசட்டப்படி குற்றமாகும்கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால்,பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமேஇதன்மூலம் கிடைத்தகல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால்,இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களேபொறுப்பேற்க வேண்டும்பதவி உயர்வு காரணங்களுக்காகதொலைதுாரகல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போதுதன்னெழுச்சியாக மாணவர்கள்திரண்டு போராடுவது அவசியம்.

 

நிதியை நிறுத்த வேண்டும்!

 

பாலகுருசாமிஅண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்பாரதியார் பல்கலையின்அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த,தமிழக அரசாலும்யு.ஜி.சி.,யாலும் முடியும்பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டியயு.ஜி.சி.,மவுனம் சாதிக்கிறதுதமிழக அரசுக்குதுணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கமுழுஅதிகாரம் உண்டுசிண்டிகேட்கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றினால்துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாதுதொலைதுார கல்வி மையங்களால், ‘கரன்சி‘ கிடைப்பதால்தட்டி கேட்க வேண்டியவர்கள்வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்எதற்கெல்லாமோ போராடும்மாணவ சமுதாயம்தனக்கான கல்வி

வியாபாரமாவதற்கு எதிராகபோராட முன்வர வேண்டும்.

 

அப்பட்டமான சட்டவிரோதம்

 

.எம்.எம்.கலீல்தலைவர்தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்பல்கலை மானியக் குழுவேஇந்த மையங்கள்வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டதுஅதன் பின்னும்இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்தஅனுமதிப்பதில் துளியும் நியாயமில்லைஇது அப்பட்டமான சட்டவிரோதமாகும்மத்திய அரசுசுப்ரீம் கோர்ட் உத்தரவுகள்,பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறிசெல்லாத பட்டத்தைத் தருவதற்குஇந்த மையங்களை பல்கலைநிர்வாகமே நடத்தினால்அந்த பல்கலைக்கும்போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

 

இப்போதுபல்கலை மானியக்குழுவேஇதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்பல்கலைமானியக்குழுவின் முடிவுஎங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்பார்க்கலாம்.இவ்வழக்கில்நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

 

சுண்டல் வியாபாரமானது கல்வி!

 

 

பாடம்‘ நாராயணன்சமூக ஆர்வலர்பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில்மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்குஇதுபோன்ற காரணங்களால் தான்,அவப்பெயர் ஏற்பட்டதுசென்னை அண்ணா பல்கலையேபொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின்,திரும்ப பெற்றதுஏனெனில்தொலைதுார கல்வியில்தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறதுஇதில்வரும் லஞ்சத்தில்துணைவேந்தர்பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டுசுண்டல் வியாபாரம் போலகல்வியைகூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்!
நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ — மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.
தேவை அதிகரிப்பு

நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,

பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

மேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, ‘நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்’ என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், ‘நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

‘தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1,

பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்’ என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நவ., 20க்குள்:

மேலும், ‘மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்’ என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும்
ஆலோசனை நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும் !!

  1. Anthropology – மானுடவியல்/ மானிடவியல்

    2. Archaeology – தொல்பொருளியல்

    3. Astrology – சோதிடவியல் (சோதிடம்)

    4. Astrology – வான்குறியியல்

    5. Bacteriology பற்றுயிரியல்

    6. Biology – உயிரியல்

    7. Biotechnology – உயிரித்தொழில்நுட்பவியல்

    6. Climatology – காலநிலையியல்

    7. Cosmology – பிரபஞ்சவியல்

    8. Criminology – குற்றவியல்

    9. Cytology – உயிரணுவியல்/ குழியவியல்

    10. Dendrology – மரவியல்

    11. Desmology – என்பிழையவியல்

    12. Dermatology – தோலியல்

    13. Ecology – உயிர்ச்சூழலியல்

    14. Embryology – முளையவியல்

    15. Entomology – பூச்சியியல்

    16. Epistemology – அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

    17. Eschatology – இறுதியியல்

    18. Ethnology – இனவியல்

    19. Ethology – விலங்கு நடத்தையியல்

    20. Etiology/ aetiology – நோயேதியல்

    21. Etymology – சொற்பிறப்பியல்

    22. Futurology – எதிர்காலவியல்

    23. Geochronology – புவிக்காலவியல்

    24. Glaciology – பனியாற்றியியல்/ பனியியல்

    25. Geology – புவியமைப்பியல்/ நிலவியல்

    26. Geomorphology – புவிப்புறவுருவியல்

    27. Graphology – கையெழுத்தியல்

    28. Genealogy – குடிமரபியல்

    29. Gynaecology – பெண்ணோயியல்

    30. Haematology – குருதியியல்

    31. Herpetology – ஊர்வனவியல்

    32. Hippology – பரியியல்

    33. Histrology – இழையவியல்

    34. Hydrology – நீரியல்

    35. Ichthyology – மீனியியல்

    36. Ideology – கருத்தியல்

    37. Information Technology – தகவல் தொழில்நுட்பவியல்

    38. Lexicology – சொல்லியல்

    39. Linguistic typology – மொழியியற் குறியீட்டியல்

    40. Lithology – பாறையுருவியல்

    41. Mammology – பாலூட்டியல்

    42. Meteorology – வளிமண்டலவியல்

    43. Metrology – அளவியல்

    44. Microbiology – நுண்ணுயிரியல்

    45. Minerology – கனிமவியல்

    46. Morphology – உருவியல்

    47. Mycology – காளாம்பியியல்

    48. Mineralogy – தாதியியல்

    49. Myrmecology – எறும்பியல்

    50. Mythology – தொன்மவியல்

    51. Nephrology – முகிலியல்

    52. Neurology – நரம்பியல்

    53. Odontology – பல்லியல்

    54. Ontology – உளமையியல்

    55. Ophthalmology – விழியியல்

    56. Ornithology – பறவையியல்

    57. Osteology – என்பியல்

    58. Otology – செவியியல்

    59. Pathology – நொயியல்

    60. Pedology – மண்ணியல்

    61. Petrology – பாறையியல்

    62. Pharmacology – மருந்தியக்கவியல்

    63. Penology – தண்டனைவியல்

    64. Personality Psychology – ஆளுமை உளவியல்

    65. Philology – மொழிவரலாற்றியல்

    66. Phonology – ஒலியியல்

    67. Psychology – உளவியல்

    68. Physiology – உடற்றொழியியல்

    69. Radiology – கதிரியல்

    70. Seismology – பூகம்பவியல்

    71. Semiology – குறியீட்டியல்

    72. Sociology – சமூகவியல்

    73. Speleology – குகையியல்

    74. Sciencology – விஞ்ஞானவியல் (அறிவியல்)

    75. Technology – தொழில்நுட்பவியல்

    76. Thanatology – இறப்பியல்

    77. Theology – இறையியல்

    78. Toxicology – நஞ்சியல்

    79. Virology – நச்சுநுண்மவியல்

    80. Volcanology – எரிமலையியல்

    81. Zoology – விலங்கியல்

விஜயதசமி ‘அட்மிஷன் ஜோர்’ கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.

தரமான தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வழங்கப்படாததால் திறமை குறைவு காரணமாக பட்டப்படிப்பு படித்தும் நிறைய பேர் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தரமான கல்வியை வழங்காதது என்பது மாணவர்களின் வளர்ச்சியை தடைபடுத்துகிறது. தரமற்ற கல்வி என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

இவ்வாறு உலக வங்கியின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து நல்ல புரிதலோடு மாணவர்களை உருவாக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கியின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தியாவின் கல்வித்தரம் இந்த அளவில்தான் உள்ளது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இனியாவது பள்ளி கல்வி தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்..