தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்…

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை. ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்? இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம். இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது. 2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம்.

 

காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 

இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா?

 

இரத்த அழுத்தம் இருக்கிறதா? நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை? பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது?

 

பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே.

 

உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும்.

 

அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள்.

 

இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான்.

 

இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம்.

 

குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு.

 

இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்’ இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.

 

மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது? கஷ்டங்கள் எதில் தான் இல்லை?

 

இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.

 

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வவெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
ரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.

இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு ! தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும் மாணவர்களை கொண்ட வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும். தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்: கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன. தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு !

தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும்  மாணவர்களை கொண்ட  வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்.

தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்:
கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.

தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து  வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்

பள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்நேற்று கூறியதாவது:

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க,பல்வேறு சட்டம், விதிகள் அமலில் உள்ளன. இருப்பினும், நாடு முழுவதும்பல்வேறு இடங்களில், பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்கள்நடப்பது குறித்த புகார்கள் வந்தபடி உள்ளன.எனவே, குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல், தீய தொடுதல் எது என்றபாடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

 

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை தடுக்க, பல அரசு சாராஅமைப்புகளுடனும், சமூக ஆர்வலர் குழுக்களுடனும், பேச்சு நடந்து வருகிறது.பள்ளி மட்டத்தில், பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரங்களை தடுக்க,விரைவில் சிறப்பான திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கைகளை ‘கட்டியதால்’ சாத்தியமில்லை… நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

Posted: 26 Nov 2017 06:10 PM PST

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் ‘வாட்ஸ்-ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் – மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, மாணவர்களை மனம் புண்படும்படி திட்டவோ, அடிக்கவோ கூடாது. இதை, கல்வியாண்டு துவங்கும் போதே, ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில், ஆண்டுதோறும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை கண்டிக்குமாறு, பெற்றோரே ஆசிரியரிடம் முறையிடுவதும் உண்டு. ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.வேலுார், பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர கணிதத்தேர்வில் தோல்வியை தழுவிய காரணத்திற்காக, பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்காக, தலைமையாசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவர்களை எதுவும் கூறாமல் இருந்தால், ஒழுக்கம், கீழ்படிதல் ஆகிய, நற்பண்புகள் எப்படி வளரும், தோல்வியை தழுவிய மாணவிகளின், கற்றல் நிலையை, பெற்றோரிடம் எடுத்து கூற, அழைத்து வரும்படி உத்தரவிட்டது, ஆசிரியரின் கடமையல்லவா, இப்படி எல்லா நிலைகளிலும், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்ட பின், நுாறு சதவீத தேர்ச்சியை எதிர்பார்ப்பது நியாயமா’ என, அடுக்கடுக்கான கேள்விகணைகளை தொடுத்து, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தோல்வியை எதிர்கொள்ளவும், கண்டிப்பை ஏற்கவும் கூட, முடியாத அளவுக்கு, தற்போதைய கல்விமுறை இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

 

இது சார்ந்து, அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பயம்,பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது, தற்கொலை எண்ணங்களை தவிர்க்க, மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுவது அவசியம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:ஆசிரியர்-மாணவர் உறவில், விரிசல் இருப்பதை,உறுதி செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன.

 

இதுபோன்ற தருணங்களில், சம்பவத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின், நடவடிக்கை எடுப்பது அவசியம். மாணவர்களை வழிநடத்தும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு, நடத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை மட்டும் இலக்காக முன்னிறுத்தி, பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி சூழலை ஆரோக்கியமானதாக்க, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதை உருவாக்க வேண்டியது, கல்வித்துறையின் முக்கிய கடமையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உலக தரவரிசை: 264ஆவது இடத்தில் சென்னை ஐஐடி!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 264ஆவது
இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாக்குவேரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds) 2018 உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் (நவம்பர் 23) வெளியிட்டது. அதில் சென்னை ஐஐடி 264ஆவது இடத்தில் உள்ளது. சென்னை ஐஐடி மின் பொறியியல் திட்டப் பாடத்துக்காக 51 – 100க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. மேலும், பிரிக்ஸ் (BRICS) தரவரிசையில் 18ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) அண்ணா பல்கலைக்கழகம் 85ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரசாயன பொறியியல் திட்டத்துக்காக, பிரிக்ஸ் நாடுகளில் 201 – 250க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய பல்கலைக்கழகங்களில், 651 – 700க்கும் இடையேயான தரவரிசையில் இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 105ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகம் பிரிக்ஸ் நாடுகளில் 171 – 180க்கும் இடையேயான தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.

மாணவர்களுக்கான ஆசிரியர்களின் விகிதம், முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் விகிதம் மற்றும் கல்வியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான நிறுவனத்தின் புகழ் உள்ளிட்ட எட்டு வேறுபட்ட அம்சங்களின் அடிப்படையில் பிரிக்ஸ் தரவரிசை பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

உலக நிறுவனங்களில் 190ஆவது இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் உள்ளது

பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம் :

தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.  வானொலி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கேசவன், மணிகண்டன், கவிதா கலந்து கொண்டனர்.

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள் ,: அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை

தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.

பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்

* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை

* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது.

நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது

* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது

* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது

* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்

* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது

* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்

* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்

* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்

* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும்

நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம்.

* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்

* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்

* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது

* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்

* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்

* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்குகிறது.
தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற இந்தத் திட்டத்தின்படி, 4,775 பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். மடிக்கணினிகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வசதிகள் கொண்ட டிஜிட்டல் பள்ளிகளாக இவை மாற்றப்படவுள்ளன. இதற்காக 60,250 மடிக்கணினிகள், 43,750 மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 4775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயனடையும். இதில், 2685 உயர்நிலைப் பள்ளிகள், 1701 மேல்நிலைப் பள்ளிகள், 389 தொழிற்துறை மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறையின் துணைத் தலைவரான அன்வர் சதாத் இது குறித்துக் கூறுகையில், “இத்திட்டம் படிப்படியாக முன்னேறும். முதல் கட்டமாக, ஜனவரி மாதத்துக்குள் 20 ஆயிரம் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்படும். இதற்காக, 43 ஆயிரத்து, 750 மடிக்கணினிகள் வாங்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., – பி.டெக்., – பி.ஆர்க்., – பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.