கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே அடிப்படை வாசிப்பு தகுதியை பெற்றுள்ளனர். அத்துடம் 50% மேற்பட்ட மாணவர்கள் அடிப்படை கணக்குகளான, வகுத்தல் கூட தெரியாதவர்களாக உள்ளனர்.

2008ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டில், சுமார் 12% விகிதம் மாணவர்களின் கல்வித்திறன் குறைந்துள்ளது. 2008ல் 8ஆம் படித்த மாணவர்களில் 84% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 72.8% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.

அத்துடன் கடந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, வயது வாரியாக படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2018ல் 15-16 வயதுகளில் படிப்படை நிறுத்தியவர்களில் 13.5% மாணவிகளும், 12.6% மாணவர்களும் உள்ளனர். அத்துடன் 11-14 வயது மாணவர்களில் 4.1 மாணவிகளும், 3.3% மாணவர்களும் படிப்பை நிறுத்துகின்றனர். இந்த அளவில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 8.9% மாணவர்களின் கல்வித் திறன் குறைந்துள்ளது. 2008ல் 5ஆம் படித்த மாணவர்களில் 53% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 44.2% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 50.2% மாணவர்கள் வகுத்தல் தெரிந்தவர்களாகவும், கழிவறைகள் பயன்படுத்தும் மாணவர்கள் 71.0% ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கல்வித்திரன் அதிகம் கொண்ட மாணவர்களை கொண்ட மாவட்டங்களாக ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை திகழ்கின்றன. தமிழகத்தில் 2ஆம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கும் திறன் கொண்ட 5ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 46.3% ஆகவும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் வகுத்தல் கணக்கு தெரிந்தவர்கள் 27.1% ஆகவும் உள்ளனர். உடற்கல்வி வகுப்புகளை கற்கும் மாணவர்கள் தமிழகத்தில் 82% பேர் உள்ளனர். அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவை பொருத்தவரையில் தமிழக மாணவர்கள் 90% வருகைப் பதிவை பெற்றுள்ளனர்

பிப்., 6 முதல் செய்முறை தேர்வு

பிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இதில், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, செய்முறை தேர்வு பயிற்சிகள் துவங்கியுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி, அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகை பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.அதேபோல், பிப்., 6ல், செய்முறை தேர்வுகளை துவங்க வேண்டும். இந்த தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல், வினாத்தாள் தயாரித்து, முறைகேடின்றி நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கல்வித்துறையில் ஆவணங்கள் (Records) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது!

கல்வித்துறையில் ஆவணங்கள் (ரெக்கார்டு)
தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பள்ளிக் கல்வியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வரவேற்பு இருந்தாலும் ஆசிரியரின் தகுதிக்கான நிலையில் இருந்து அவர்களை கீழ் வகுப்பிற்கு பயிற்றுவிக்க செய்வது, இடைநிலை ஆசிரியரை அங்கன்வாடிக்கு அனுப்பும் உத்தரவு போன்றவற்றால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இதுதவிர பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணி பதிவேடு, மாணவர் பதிவேடு, சம்பள பதிவேடு, தற்செயல் விடுப்பு பதிவேடு என 50 வகை ரெக்கார்டுகளை தினமும் தலைமையாசிரியர் தயாரிக்க வேண்டியுள்ளது. இதற்கும் ஆசிரியரே உதவுகின்றனர்.இது தவிர ‘எமிஸ்’ விவரம், தேர்வு விவரம், இலவச நலத் திட்டங்கள், கல்வி உதவி தொகை, பொது தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்ட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் நிர்வாகிகள் அனந்தராமன், கந்தசாமி, கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறியதாவது:கற்பித்தலைவிட ‘ரெக்கார்டு’ தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு தேவை ‘கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி அதிகரிப்பு’ என்ற ‘புள்ளி விவரம்’ மட்டுமே.அதிகாரி கேட்கும் பள்ளி, ஆசிரியர், மாணவர், நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரத்தை தினமும் அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. இதை தவிர்க்க கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சி.இ.ஓ., அலுவலகங்களில் சிறப்பு தகவல் பிரிவு துவங்கலாம் என்றனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்

தமிழக அரசு பள்ளிகளில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் செய்த முக்கிய மாற்றங்களில் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஒரு விஷயம் என்றால் அது, 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மதிப்பெண்களை, முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்று விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டது தான்.
அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றம், பாடத்திட்டம் மாற்றம், இலவச பேருந்து பயணம், மடிக்கணினி, ஸ்மார்ட் கிளாஸ் என்று பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 – 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.