ASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி… தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்!!

ASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின்ன் ஆய்வறிக்கையின் படி…

தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்.

அரசுப்பள்ளி-27.1%

தனியார் ஆங்கில வழிப்பள்ளி-22.2%

தமிழகத்தில் 8 ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்.

அரசுப்பள்ளி-49.6%

தனியார் ஆங்கில வழிப்பள்ளி-51.3%

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே அடிப்படை வாசிப்பு தகுதியை பெற்றுள்ளனர். அத்துடம் 50% மேற்பட்ட மாணவர்கள் அடிப்படை கணக்குகளான, வகுத்தல் கூட தெரியாதவர்களாக உள்ளனர்.

2008ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டில், சுமார் 12% விகிதம் மாணவர்களின் கல்வித்திறன் குறைந்துள்ளது. 2008ல் 8ஆம் படித்த மாணவர்களில் 84% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 72.8% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.

அத்துடன் கடந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, வயது வாரியாக படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2018ல் 15-16 வயதுகளில் படிப்படை நிறுத்தியவர்களில் 13.5% மாணவிகளும், 12.6% மாணவர்களும் உள்ளனர். அத்துடன் 11-14 வயது மாணவர்களில் 4.1 மாணவிகளும், 3.3% மாணவர்களும் படிப்பை நிறுத்துகின்றனர். இந்த அளவில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 8.9% மாணவர்களின் கல்வித் திறன் குறைந்துள்ளது. 2008ல் 5ஆம் படித்த மாணவர்களில் 53% பேர் 2ஆம் வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் திறன் கொண்டிருந்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டில் 44.2% மாணவர்கள் மட்டுமே 2ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்கும் கல்வித்திறனுடன் உள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 50.2% மாணவர்கள் வகுத்தல் தெரிந்தவர்களாகவும், கழிவறைகள் பயன்படுத்தும் மாணவர்கள் 71.0% ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கல்வித்திரன் அதிகம் கொண்ட மாணவர்களை கொண்ட மாவட்டங்களாக ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை திகழ்கின்றன. தமிழகத்தில் 2ஆம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கும் திறன் கொண்ட 5ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 46.3% ஆகவும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் வகுத்தல் கணக்கு தெரிந்தவர்கள் 27.1% ஆகவும் உள்ளனர். உடற்கல்வி வகுப்புகளை கற்கும் மாணவர்கள் தமிழகத்தில் 82% பேர் உள்ளனர். அத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவை பொருத்தவரையில் தமிழக மாணவர்கள் 90% வருகைப் பதிவை பெற்றுள்ளனர்

பிப்., 6 முதல் செய்முறை தேர்வு

பிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இதில், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, செய்முறை தேர்வு பயிற்சிகள் துவங்கியுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி, அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகை பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.அதேபோல், பிப்., 6ல், செய்முறை தேர்வுகளை துவங்க வேண்டும். இந்த தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல், வினாத்தாள் தயாரித்து, முறைகேடின்றி நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கல்வித்துறையில் ஆவணங்கள் (Records) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது!

கல்வித்துறையில் ஆவணங்கள் (ரெக்கார்டு)
தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பள்ளிக் கல்வியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வரவேற்பு இருந்தாலும் ஆசிரியரின் தகுதிக்கான நிலையில் இருந்து அவர்களை கீழ் வகுப்பிற்கு பயிற்றுவிக்க செய்வது, இடைநிலை ஆசிரியரை அங்கன்வாடிக்கு அனுப்பும் உத்தரவு போன்றவற்றால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இதுதவிர பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணி பதிவேடு, மாணவர் பதிவேடு, சம்பள பதிவேடு, தற்செயல் விடுப்பு பதிவேடு என 50 வகை ரெக்கார்டுகளை தினமும் தலைமையாசிரியர் தயாரிக்க வேண்டியுள்ளது. இதற்கும் ஆசிரியரே உதவுகின்றனர்.இது தவிர ‘எமிஸ்’ விவரம், தேர்வு விவரம், இலவச நலத் திட்டங்கள், கல்வி உதவி தொகை, பொது தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்ட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் நிர்வாகிகள் அனந்தராமன், கந்தசாமி, கிறிஸ்டோபர் ஜெயசீலன் கூறியதாவது:கற்பித்தலைவிட ‘ரெக்கார்டு’ தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு தேவை ‘கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி அதிகரிப்பு’ என்ற ‘புள்ளி விவரம்’ மட்டுமே.அதிகாரி கேட்கும் பள்ளி, ஆசிரியர், மாணவர், நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரத்தை தினமும் அனுப்புவது பெரும் சவாலாக உள்ளது. இதை தவிர்க்க கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சி.இ.ஓ., அலுவலகங்களில் சிறப்பு தகவல் பிரிவு துவங்கலாம் என்றனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்

தமிழக அரசு பள்ளிகளில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் செய்த முக்கிய மாற்றங்களில் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஒரு விஷயம் என்றால் அது, 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மதிப்பெண்களை, முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்று விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டது தான்.
அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றம், பாடத்திட்டம் மாற்றம், இலவச பேருந்து பயணம், மடிக்கணினி, ஸ்மார்ட் கிளாஸ் என்று பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 – 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் பீதி!

தமிழகத்தில் எழும் வேதனை குரல்கள்

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

பள்ளிகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் தயக்கம் காட்டும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 260 நடுநிலைப்பள்ளிகள், 3,044 உயர்நிலைப்பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 959 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் 64 ஆயிரத்து 855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50 ஆயிரத்து 508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27 ஆயிரத்து 891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73 ஆயிரத்து 616 ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளிகளில் 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளிகளில் 25 லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24 லட்சத்து 67 ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் 42 லட்சத்து 86 ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதில் ஆண், பெண் ஆசிரியர்கள் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் பள்ளியில் பாகுபாடின்றி காலிபணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் பணியாற்ற மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியர்களிடம் அதேபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாணவர்களின் எல்லைமீறலை வெளியே சொல்ல முடியாமல் ஆசிரியைகள் பிரச்னைக்குரிய பள்ளிகளை விட்டு வெளியேறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதேபோல் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியைகளுக்கு நேரடியாகவே மாணவர்கள் மிரட்டல்கள் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிப்படியாக இருக்கும் ஆசிரியைகள் இப்படிப்பட்ட பல இன்னல்களை சந்திப்பதாக வேதனை குரல் எழுப்புகின்றனர்.

ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் பாதுகாப்பற்ற சூழலிலேயே பணியாற்றி வருகின்றனர். ஆண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறுவது போல் பெண் ஆசிரியைகள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதால் இதனை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்ற தோன்றுகிறது

பெண் ஆசிரியைகள் கூறுகையில், ‘அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை குறைகூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கமற்று நடந்து கொள்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

ஆனால் சில மாணவர்கள் அத்துமீறல் பேச்சை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்றலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுடன் தொடர்பு வேண்டும்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடம் நல்லமுறையில் கற்பிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள். ஆனால் தங்களது பிள்ளைகள் பள்ளியில் என்ன படிக்கிறார்கள்?, பள்ளிக்கு வருகிறார்களா? இல்லையா என்று பள்ளிக்கு வந்து பார்ப்பதே இல்லை.

பெற்றோர்களுக்கான கூட்டம் நடத்தினாலும் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தில் எட்டிக்கூட பார்ப்பதில்லை. பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் நிலை அறிய பள்ளிகளில் அடிக்கடி சென்று கூட்டத்தில் கலந்து கொண்டால் பிள்ளைகள் தீய வழியில் செல்வதை தடுக்க முடியும். இதனால் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுடனான தொடர்பு மிக முக்கியம் என்கிறார்கள் ஆசிரியைகள்.

ஏழை மாணவர்களுக்கு கேள்விக்குறியாகும் இடஒதுக்கீடு !

* கல்வியாளர்கள் அதிர்ச்சி

* நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆயத்தம்

சேலம்: பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வரும் புதிய ஆணையத்தால் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி சீரழியும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி), இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டம் தயாரித்தல், நிதி ஆதாரம் வழங்குதல் போன்ற முக்கிய பணியினை மேற்கொண்டு வருகிறது.

தேசிய அளவில் ஒரே அமைப்பாக இருந்தாலும், அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக, புதிய உயர்கல்வி ஆணையம் ஒன்றை தொடங்க, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் அம்சங்களுக்கு நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஆணையம் அமைக்கப்பட்டால், நாட்டின் உயர்கல்வித்துறை சீரழிந்து விடும் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் பசுபதி கூறியதாவது: அனைத்து அதிகாரங்களும் பெதற்போது, உயர்கல்வியில் புரட்சி என்ற பெயரில், புதிய ஆணையம் அமைக்க முடிவு செய்திருப்பது தேவையற்றது. ஒரு அமைப்பில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர, அவற்றை புதிதாக கட்டமைப்பது பாதகமானது. இந்த ஆணையத்தின் 12 பேர் ெகாண்ட குழுவினர் தான், தேசிய அளவில் உயர்கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக இருப்பர்.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் தொடங்கி, ஒரு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வது வரை அனைத்தும் அவர்களது விருப்பம் போலத்தான் நடக்கும். முக்கியமாக, பாடத்திட்டம் என்பது தேசிய அளவில் ஒரே மாதிரியாக இருக்கும். இதில், அந்தந்த மாநிலம் மற்றும் வட்டாரத்தின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்து மாற்றங்கள் செய்ய முடியாது. இவற்றிலிருந்து பெறப்படும் நிதி, கடன் வாங்குவதை போல தான் இருக்கும். ஆணையத்திற்கு வேண்டியர்களுக்கும் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

அதே சமயம், மாணவர்கள் நலன் சார்ந்த எந்தவொரு திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தாலும், ஆணையத்தை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லா கல்வி, ஏழை மாணவர்களுக்கான சலுகைகள், இடஒதுக்கீடு போன்றவை தொடர்பாக, புதிய ஆணைய மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கல்வி புரட்சி என்ற பெயரில், இந்த விவகாரத்தை மேலோட்டமாக பார்க்க கூடாது.

முழுவதுமாக ஆராய்ந்து பார்க்கும் போது, புதிய உயர்கல்வி ஆணையம் சீரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனவே தான், இதனை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்த ‘ஐபெக்டோ’ சார்பில், டெல்லி உள்பட பல இடங்களில் ஊர்வலம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதனையும் கடந்து புதிய ஆணையம் அமைந்தால், நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு பசுபதி தெரிவித்தார்

நீட்’ பயிற்சிக்கு வராமல், ‘டிமிக்கி’ : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர்.

சவால் : அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 – 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது. இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்.

சஸ்பெண்ட் : எனவே, முதல் கட்டமாக, நீட் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால், டிமிக்கி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ‘சஸ்பெண்ட்’ செய்யவும், சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

‘புதிய ஆசிரியர்கள்?’ : ‘நீட்’ பயிற்சியை புறக்கணிப்பது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, புதிய முறையில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்து, பொது தேர்வுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது.இந்த நேரத்தில், நீட் பயிற்சியில், ஆசிரியர்களால் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால், நீட் பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை, அரசு நியமிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

செப் 1 முதல் செப் 15 வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தூய்மை நிகழ்வுகள்-செயல்பாடுகள்

  • 01.092018 முதல்நாள் அன்று காலை பள்ளிபிரார்த்தனையில் தூய்மை சார்ந்த விவரங்களை மாணவர்கள்

பேசுதல்.

  • பள்ளி வகுப்பறையில், ஒவ்வொரு குழந்தையும் தன்கத்தம்/பள்ளி சுத்தம்/சமூக கத்தம் / வீட்டுச் சுத்தம்

சார்ந்து ஒரு செயல்பாட்டில் கவனம் செலுத்திநடைமுறையில் செயல்படுத்தவேண்டும்.

  • மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயலாளர்கள்,மாவட்ட ஆட்சியர்கள்,மாவட்டக் கல்வி

அலுவலர்கள்,பள்ளி ஆய்வாளர்கள்அனைவரும்பள்ளிமாணவர்களுக்குதூய்மைசார்ந்த விழிப்புணர்வுக்

குறிப்புகளை வழங்குதல்.

  • துறை/நிறுவனங்கள் /பள்ளிகளின் வலைதளங்களில் தூய்மைசார்ந்த விழிப்புணர்வுவாசகங்களை

வெளியிடுதல், முதல்நாள் உறுதிமொழி ஏற்கும்(Swachta Shapath Day)நிகழ்ச்சியினை நடத்தி

அனைத்துப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்/அலுவலர்கள் பங்கேற்கச் செய்தல்.

  • மாவட்டம்வாரியாக உறுதிமொழிஏற்றமொத்தமாணவர்களின் எண்ணிக்கையினையும்புகைப்படம்,

வீடியோமற்றும் விளம்பரவாசகங்களையும் மாநிலத்திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும். (காலை

12.00 மணிக்குள்ளாக)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

*02.09.2018 முதல் ஞாயிற்றுக்கிழமை 04.09.2018 வரை செவ்வாய்க்கிழமை வரை*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

  • பள்ளி மேலாண்மைக் குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தி, ஆசிரியர் மற்றும்

பெற்றோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும்,

மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் வீட்டில் இப்பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில்

ஊக்குவித்தல்.

  • பள்ளியில்உள்ளஒவ்வொருபகுதியையும் ஆசிரியர்கள் ஆய்வுசெய்து அதனைகத்தம்செய்திடத்

தேவையான முன்மொழிவுகளையும்,திட்டங்களையும் தயார் செய்தல்.

  • கழிவறைகள், சமையலறை, வகுப்பறைகள், மின் விசிறி, புதர்கள் ஆகியவற்றைச்ச சுத்தம் செய்யத்

தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்திட

உரிய நடவடிக்கை எடுத்தல்.

  • மாவட்டம் வாரியாக பங்கேற்ற மொத்த பள்ளிகயின் எண்ணிக்கையினையும் புகைப்படம், வீடியோ மற்றும்

விளம்பர வாசகங்களையும் மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். (மாலை 4.00

மணிக்குள்ளாக)

பூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

 

தோல்வி

தோல்வியில் முடிந்தது

கடந்த டிசம்பர் 7, 1995ல் நாசா கலிலியோ என்ற சோதனை சாதனத்தை விண்ணுக்கு அனுப்பியது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கி 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது. ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பது எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரிய சிகப்பு புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.

 

 

 

கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்துள்ளனர்

 

இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது. இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.

 

 

 

சிவப்பு புள்ளி

சிவப்பு புள்ளியில் உள்ளது

 

அதன்படி, வியாழனில், பெரிய அளவில் செந்நிற புள்ளி ஒன்றுள்ளது. இதன் அளவு ஆசிய கண்டத்தை விட பெரிதாக இருக்கும். இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் இதை கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

தண்ணீர்

எவ்வளவு தண்ணீர்

 

தற்போது, வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர். மேலும், மொத்தமாக அந்த கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.