நிறுத்தற்குறிகள் அறிவோம்…!!!

நிறுத்தற்குறிகள் அறிவோம்…!!!

1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)
10.இரட்டை மேற்கோள்குறி (” “)
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)

காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

பிளஸ் 2 தேர்வு: புதிய கட்டுப்பாடு – தேர்வுத்துறை அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், இனி, நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய முறையில், ஒவ்வொரு பாடத்திற்கும், தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. பழைய முறையில், கடந்த ஆண்டு வரை, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த செப்டம்பர் தனித்தேர்வு மற்றும் மார்ச்சில் நடக்கும் பொதுதேர்வுகளில் மட்டுமே, பங்கேற்க முடியும். அதன்பின், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர், 24 முதல் அக்டோபர், 4 வரை, துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான விபரம், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், வரும், 27 முதல் செப்., 1 வரை, தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தவறினால், தத்கல் முறையில், செப்., 3 மற்றும், 4ம் தேதிகளில், ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் – தடை கோரி வழக்கு!

திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட் டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது.  இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன. இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கைதமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடாக செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்களால் மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுவதை தடுக்க கல்லூரி கல்வித்துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி அனைத்து மண்டல கல்வித்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அவர்கள் தங்களது எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

அவரது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்யுமாறு முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பேச தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறேன். கல்லூரிகளில் கண்டிப்பாக செல்போனை தடை செய்யவேண்டும். ஏனென்றால் வகுப்பு நேரத்தில் மாணவ-மாணவிகள் செல்போனில் பேசுவதும், வீடியோ எடுப்பதும் சகஜமாக உள்ளது. எனவே படிப்பு பாழ்பட்டுப்போகிறது. மாணவ-மாணவிகள் செல்போனை கல்லூரிகளுக்கு கொண்டு வரலாம். ஆனால் வகுப்பு நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை

வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை

விடுத்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டால் போதாது என்றும் சுற்றறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டித்துள்ளார். நிதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்

சிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா?: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி*

*🔵சென்னை: நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்*

*🔵சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன*

*🔵இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்*

*🔵எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்(மின்னல் கல்விச் செய்தி)*

*🔵இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது*

*🔵இதனையடுத்து என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்தார்*

*🔵அந்தப் பதில் மனுவில், வாழ்க்கைக்குத் தேவையான அறிவைப் போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரக மந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது*

*🔵இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு*

*🔵குழந்தைகளின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. ஒருபோதும் கல்வி அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் குறைந்தபட்ச தூங்கும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும்*

*🔵போதிய தூக்கம் இல்லாமல் போனால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில் கூட கொடுக்கக் கூடாது. மன அழுத்தம் இல்லாமல் உற்சகமான கற்றல் சூழலில் படிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது*

*🔵எனவே, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அதிகமான புத்தகங்களை கொடுக்கக் கூடாது, அவர்கள் பொதி சுமப்பவர்கள் அல்ல*

*🔵இது குறித்து சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பறக்கும் படையை அமைத்து வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்*

*🔵இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மாநில மொழி பாடத் திட்டம், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் பயிலும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*

*🔵இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதன் விவரங்களை மத்திய அரசு 4 வார காலத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்  என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்*

*🔵பின்னர் இந்த வழக்கானது இம்மாத துவக்கத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, நீதிமன்ற உத்தரவின் அமலாக்கம் குறித்து மத்திய அரசு சார்பில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது*

*🔵அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்த சிபிஎஸ்இ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது*

*🔵இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த உத்தரவை வரும் 17-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்*

*🔵இந்நிலையில் நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் தாழ்ந்து விட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்*

*🔵இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஎஸ்சி சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செயப்பட்டது. பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது*

*🔵நடிகர், நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு   நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா? சிபிஎஸ்சிக்கு இத்தகைய கேள்விகள் தேவைதானா?*

*🔶ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. என்ற உத்தரவை எப்படி அமல் படுத்தப் போகிறீர்கள்? வெறுமே சுற்றறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது? இது தொடர்பாக போதுமான அளவில் விளம்பரம் செய்யபட வேண்டும்*

பிரபலமான தேசிய மற்றும் மாநில நாழிதழ்களில் விளமபரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.மூன்று வாரத்துக்குள் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும்*

*🔵அதே சமயம் நீதிமன்ற உத்தரவை சரியாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

‘ப்ளூ பிரின்ட்’ இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை

வினாத்தாள் கட்டமைப்பு என்ற, ‘ப்ளூ பிரின்ட்’ இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, ‘மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்’ என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக பள்ளி கல்வித்துறையில், புதிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழக பாடத்திட்ட மாற்றம், தனியார் பள்ளிகளுக்கான நிர்வாக மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என, புதிய மாற்றங்கள் அமலாகிஉள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வுகளிலும் மாற்றங்கள் அமலுக்கு வந்து உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மாணவர்களுக்கு, ‘ப்ளூ பிரின்ட்’ என்ற, வினாத்தாள் கட்டமைப்பு இல்லாமல், புதிய கேள்விகள் வடிவமைக்கப் பட்டன. மேலும், மாதிரி வினாத்தாள் அல்லது வினாத் தாளின் அமைப்பு குறித்த, முன் அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இதனால், பிளஸ் 1 தேர்வில், மதிப்பெண் பெறுவதில், மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிஉள்ளது. பிளஸ் 2க்கு, இந்த ஆண்டுடன் பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வருகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், இந்த ஆண்டு, ப்ளூ பிரின்ட் இன்றி, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய, தேர்வுத்துறை அறிவுறுத்திஉள்ளது.

இந்நிலையில், ப்ளூ பிரின்ட் இல்லாமல், தேர்வு நடக்க உள்ளதால், எந்த மாதிரியான வினாக்கள் இடம் பெறும். வினாக்களின் வகை என்ன; சிந்தனை திறன் கேள்விகள் எப்படி இருக்கும்; ஒரு மதிப்பெண் கேள்விகள் எந்த மாதிரி இருக்கும் என்பதை, மாதிரி வினாத்தாளாக வெளியிட, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கு முன் மாதிரியாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, மாதிரி வினாத்தாள்களை வெளியிடுகிறது

பிளஸ் 1 மறுகூட்டல் கூடுதல் அவகாசம்

பிளஸ் 1 துணை தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணை தேர்வில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 16 மற்றும் 17ல் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப் பட்டிருந்தது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக, 17ல், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே, பிளஸ் 1 தேர்வர்கள், விடைத்தாள் நகல் பெறுவது மற்றும் மறுகூட்டலுக்கு, நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்

“புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்,” என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:

தமிழக கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் அதில் உள்ள குறைகள் குறித்து தமிழகம்முழுவதும் கருத்துக்களும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்படுகின்றன.பல ஆலோசனைகள் கிடைத்துள்ளன. விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும். குறிப்பாக, பிளஸ் 1 தாவரவியல், விலங்கியல் பாடப் புத்தகங்களில் அதிக பக்கங்கள் உள்ளதாகவும், முழுமையாக நடத்த முடியவில்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை பாடங்களாக ஆசிரியர்கள் பார்க்காமல் மாணவர்கள் எதிர்கால நலன்சார்ந்ததாக கருதி அர்ப்பணிப்புடன் கற்பிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தின் வெற்றி ஆசிரியர்கள் கைகளில் தான் உள்ளது என்றார். இணை இயக்குனர் பொன்குமார், முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உடனிருந்தனர்.

அனைவருக்கும் பாஸ் திட்டம்” ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்வில்  பெயில் செய்ய முடியாது. ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க  தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 

இதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் மாணவர்களை பெயில் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்வில்  தோல்வியடையும் மாணவன் 2 மாத பயிற்சி பெற்று உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது