LKG முதல் மேல்நிலைக் கல்வி வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உண்டான உரிய கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேசிய ஆசிரியர் கல்வி குழுவிற்கு (NCTE ) மட்டுமே உண்டு.
மேலும் ஆசிரியர்களின் நேரடி பணி நியமனத்தில் ,
அதற்குரிய கல்வி தகுதியில் தளர்வு (Relaxation) வழங்குவதற்கு உரிய அதிகாரம் NCTE க்கு மட்டுமே உண்டு.
ஆனால் மேற்படி தளர்வு செய்யும் அதிகாரம் ,குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டது.
இந்த தளர்வானது ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும்.
மாறாக ஆசிரியர்களை கீழ்நிலைப்படுத்தி,
பணி மாற்றம் செய்யும் போது ,
மேற்படி பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதியை தளர்த்தும் பொருட்டு, NCTE ஆனது மேற்கணட விதிகளைப் பயன்படுத்த இயலாது.