”தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளின் தகுதிக்கேற்ப, அனைத்து பள்ளிகளுக்கும், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படி, பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில், ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் படி, சேர்க்கைக்கு அனுமதிக்கவில்லை என, கவனத்துக்கு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, அதன் மூலம், 3,000 பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
* ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களை குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு (ஸ்டென்சில் மார்க்கிங்) அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.
கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்ைதகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும் கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும் இருக்க கூடாது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:
விடைத்தாள் திருத்தும் பணியை கோடைகால விடுமுறையில் நீட்டிக்கக் கூடாது எனவும், கோடைகால விடுமுறையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுதொடர்பாக தேர்வுத்துறையை அணுகியபோது விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.11ல் தொடங்கி மே20 வரை நீடிக்கும். இந்த கால அட்டவணையில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர்.
எனவே மே 1ம் தேதிக்கு மேல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் என்ற எங்கள் நிலையை தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது மே 1ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்த மாட்டோம் என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் குறித்த காலத்தில் பிளஸ்2 முடிவுகள் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்
புதுச்சேரி, ‘ஜிப்மர்’மருத்துவ கல்லுாரியில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு, ‘ஆன்லைன்’ பதிவு, நாளை துவங்குகிறது. மருத்துவ படிப்பில் சேர, மத்திய அரசின்
சி.பி.எஸ்.இ., நடத்தும், ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களில், மருத்துவ படிப்பில் சேர, தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வில் பங்கேற்க, நேற்றுடன் ஆன்லைன் பதிவு முடிந்தது. புதுச்சேரி, ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க, ஜூன், 3ல் நுழைவு தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, நாளை துவங்குகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், முடித்தவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்கலாம். www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 13 வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்த நிலையில், தொடர்ந்து ஆங்கிலம் மற்ற பிற பாடத் தேர்வுகள் நடக்க உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவர்கள் எழுதி வருகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித்தேர்வர்கள் இந்த பொதுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் வழியில்பயின்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 771 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
பறக்கும்படைகள் தீவிரம்
தேர்வுப்பணியில் 75 ஆயிரம் பேர்இதற்காகத் தேர்வு மையங்கள் அரசுப் பள்ளிகள் தவிர, பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளில் மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் மட்டும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ மாணவிகளுக்கு விதிகள் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடு
மாணவ மாணவிகள் தேர்வு அறைக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது, காலணிகளைத் தேர்வு எழுதும் அறைக்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும்,ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் நடவடிக்கை பள்ளிகளிக்கு தீவிர கட்டுப்பாடுமேலும் பள்ளிகளுக்கு, தேர்வு தொடங்கும் முன்னர் காலை 8.30 மணிக்குள் அந்த பள்ளியைச் சேர்ந்த பணியாளர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறி விட வேண்டும். விடைத்தாள் கட்டுகள் பள்ளியில் இருந்து சென்ற பின்னரே அவர்கள் மதியம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தேர்வு நேரத்தில் பள்ளி வாளகத்தில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும்
துறை ரீதியான நடவடிக்கைபள்ளியில் தேர்வு எழுதும் தங்கள் மாணவர்களுக்கு உதவ முற்பட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து மாவட்ட பள்ளி கல்விதுறை பரிந்துரைக்கும். தேர்வு அறையில் துண்டு சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வு கண்காணிப்பு அறை அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள்,
மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு மற்றும்அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது