நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்… சி.பி.எஸ்.இ அறிவிப்பு!!!

டெல்லி: தேசிய தகுதித் தேர்வு எழுத வயது
வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றவும், ஜூனியர் ஆய்வு மாணவராக சேரவும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ அமைப்பு இந்த தேர்வை கண்காணித்து வருகிறது.

இந்த தேர்வு முறையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதுவோருக்கும் வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் நெட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதே போல் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என ஜவடேகர் உறுதி

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுவதற்கு விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடப்பாண்டு 2018 நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இது மாநில பாடத்திட்டத்தின் கீழ்பயின்ற பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.இந்த சூழலில் நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில்  கடந்தாண்டு பாடத்திட்டத்தின்படியே, நடப்பாண்டிலும் நீட் தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அரசியல் கட்சிகள் தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நாடு முழுவதும்ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்து உள்ளார் என மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிஉள்ளார்.

நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்து உள்ளார் எனவும்  தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: முதல்வர் பெருமிதம்

”தமிழகத்தில், மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20சதவீதமாக உயர்ந்துள்ளது,” என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை, சி.கந்தசாமி நாயுடு கல்லுாரி வளாகத்தில், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், ‘அம்மா அரங்கம்’ கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, அறக்கட்டளை தலைவர், ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. அரங்கத்தை திறந்து வைத்து, 21 ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், சிதம்பரம் ஆகிய இடங்களில், ஆறு கல்லுாரிகளும், ஆறு உயர்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. அவர்களின் கல்விப் பணியை பாராட்டுகிறேன். ஒரு நாடு சிறந்து விளங்க, கல்வியும், சுகாதாரமும் அவசியம். எனவே, அறக்கட்டளையின் கல்விப் பணி தொடர வாழ்த்துகிறேன். பள்ளிக் கல்வித் துறைக்கு, தமிழக அரசு, ஆறு ஆண்டுகளில், 1.37 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.ஏழு ஆண்டுகளில், 1,599 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்விநிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக் கல்வியில், 99.20சதவீதமாக உயர்ந்துள்ளது.ஜெ., வழியில், தமிழக அரசு, எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், மூன்று பல்கலை உறுப்பு கல்லுாரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியையும் நிறுவியுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்

Flash News : “கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது” – பள்ளி கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது – பள்ளி கல்வித் துறை

“கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது”

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

 

Flash News : NEET Exam Date Announced

NEET Exam – மே 6 ந்தேதி நடைபெறும் – CBSC இணை ஆணையர் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018 ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6 ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

EMIS – செய்தி துளிகள்

* 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

* மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.*

* அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.*

* அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.*

* மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான்.*

* பிறகு நாம் Admit செய்து கொள்ளலாம்.*

* 25.1.18 க்கு பிறகு EMIS Browser முடக்கப்படும் என்ற தகவல் Video conference மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

* இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

* ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் EMIS பதிவையும் சரிபார்த்து கொள்ளவும்.*

* Double entry இருந்தால் Delete or Transfer செய்து விடுங்கள்.*

ஆங்கில பாட புத்தகத்தில் அப்துல் கலாம் சுயசரிதை

பள்ளிகளில், ஆங்கில பாட புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் மாநில கல்வி துறைகளில், பாட புத்தகங்கள் குறித்து ஆலோசனை வழங்கும், சி.ஏ.பி.இ., எனப்படும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், இரண்டு நாள் கூட்டம், டில்லியில், இன்று துவங்குகிறது.இது பற்றி வாரிய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மத்திய மற்றும் மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியங்களின் ஆங்கில பாட புத்தகங்களில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க, ௨௦௧௭ம் ஆண்டிலேயே ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.மேலும், மருத்துவ அறிவியல் தொடர்பாக, குறுகிய கால சான்றிதழ் படிப்பு துவக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதலுதவி, மருத்துவமனை மேலாண்மை, வார்டு மேலாண்மை, ஆகியவற்றை, இந்த சான்றிதழ் படிப்பில் சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தை விரிவுப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

தரம் உயர்த்தப்பட்ட பாடத் திட்டம்: பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்’

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடத் திட்டம் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர் என்.ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் மாணவர்களைவிட பெற்றோரே இன்றைக்கு அதிக குழப்பத்திலும், கலக்கத்திலும் உள்ளனர். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி விட்டது.

தங்கள் பிள்ளைகள் உயர்தொழில்நுட்பக் கல்வி பெற பள்ளித் தேர்வில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துள்ளனர்.

தமிழக அரசும் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பள்ளிக் கல்வியில் வியக்கத்தக்க மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

வரும் கல்வி ஆண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை ஒற்றை இலக்க வகுப்புகளில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய பாடத் திட்டம் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்துக்கு நிகராக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அவர்களை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை ஆசிரியர்கள் சவாலாக ஏற்று சிறப்பாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.

 

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி ஆலோசனை குழுவின் 65-வது  கூட்டம்  மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. அதில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் 2009–ல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், பிள்ளைகளை சரியாக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனைவழங்கும் வகையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்புவரைஇலவசமாக கல்வி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண் குழந்தைகளுக்கென சிறப்பு நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் தொடக்கப்பள்ளி பயிலும் அனைத்து மணவர்களும் மேல்நிலை கல்வி வரை தொடர்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதாகவும், குறிப்பாக பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு, மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறப்பு ஒதுக்கீடுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஆலோசனை குழு வலியுறுத்தியுள்ளது.

படிப்பை தொடர இயலாத மாணவர்களுக்கென தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு, வேலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல மதிய உணவு திட்டத்தை 9-12 வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய கல்வி ஆலோசனை குழு பரிந்துரைத்துள்ளது

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்

20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

 

 

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உத்தரவிடக் கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்தியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

வாதத்தின் போது, 1997ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வகுத்த விதிகளின்படி, அந்தப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட சில காரணங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள், 20 ஆண்டுகளில் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர். அத்தியூர் திருக்கை கிராம உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.