வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: வாகனங்களில் அளவுக்கு அதிக மாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை யில் உள்ளன.வாகனங்களில் வேக கட்டுப் பாட்டுக் கருவி பொருத்த வேண் டும். அனுபவம் வாய்ந்த டிரைவர் கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாலம், நீர் நிலைகள் போன்ற இடங்களில் பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட் டுள்ளது.பள்ளிக்கு செல்லும் வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும்.

இதன்படி ஆட்டோக்களில் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி உண்டு.இதுதவிர, மாதக் கட்டணத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார்கள், ஆம்னி வேன்கள், மேக்ஸிகேப் போன்ற சுற்றுலா வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. இது போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானது.இதனையெல்லாம் மீறி அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் ஏற்றி செல்லப்படுகின்றனர். மாணவ மாணவியர் நலன் கருதி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஆங்கிலம் முதல்தாள் வினாக்களில் குளறுபடி

வேலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆங்கிலம் முதல்தாளில் 3 மதிப்பெண் வினாக்களில் குளறுபடி இருந்ததால் விடை எழுத முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதில் எளிமையான கேள்விகளை மாணவர்கள் முதலில் எழுத தொடங்கினர். கேட்கப்பட்ட கேள்விகளில் வினாத்தாளில் 8வது பக்கம் (B) read the following sets lines and answer the questions given below என்ற பிரிவில் கேள்வி எண் 61, 62, 63 என்ற ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

 

 

வழக்கமாக இந்த கேள்விகளுக்கு விடை எழுத போயம் லைன் கொடுத்துவிட்டு, அதற்கான பதிலை எழுத சொல்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான வினாத்தாளில் 61வது கேள்விக்கு மட்டுமே போயம் லைன் கொடுத்துள்ளனர். 62வது கேள்விக்கு தரவில்லை. இதனால் மாணவர்கள் விடை எழுத முடியாமல் குழப்பமடைந்தனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியரிடம் கேட்டபோது, `61வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. 62வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கவில்லை. இதையடுத்து 63வது கேள்விக்கு போயம் லைன் கொடுக்கப்பட்டது. இந்த போயம் லைன் 62வது கேள்விக்கா அல்லது 63வது கேள்விக்கா என தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

 

வழக்கமாக இந்த இலக்கியத்திற்கான கேள்விகள் எளிமையாக இருக்கும். இதற்கு மாணவர்கள் விடை எழுதி முழுமையாக 3 மதிப்பெண்களை பெற்றுவிடுவர். இந்த ஆண்டு இந்த கேள்விகளில் குளறுபடி உள்ளது. இதற்கு தேர்வுத்துறை மதிப்பெண் அளிக்குமா என்று தெரியவில்லை” என்றார். 

எத்தனை பேருக்கு தெரியும்…? Police Station போகாமலேயே, ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு !!

 

பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் . ஆனால் சில பிரச்சனைகளை காவல் நிலையத்தின் மூலமாக தான் தீர்க்க முடியும் . இது போன்ற பிரச்சனையின் போது, காவல் நிலையம் செல்வதற்கே பெரும்பாலான மக்கள் தயக்கம் காண்பிப்பர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே எப்ஐஆர் சேவை பெறலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

விளக்கம் :

தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR) சமீபத்தில் துவங்கியது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்ஐஆர் சேவையை பெறலாம் . இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

எப்படி பயன்படுத்துவது ?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0
District ,Name , Date of Birth, Address, Mobile Number, Email ID உள்ளிட்ட பல தகவல்களை புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்

Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்

Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்

Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்

attach Documents அட்டாச் செய்யவும்

[Max. 4MB (PDF, PNG, JPEG) Files alowed]:

உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.

Security Code:

இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்

Register:

அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும்

தவறான புகார்கள் பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை ..?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்தால் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் .

தமிழக அரசு அறிவித்துள்ள பணியிட மாற்ற அறிக்கையின் படி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து செயலாளர் சபிதா மாற்றம் செய்யப்பட்டு தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பதிலாக உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட காலமாக பள்ளிக் கல்வித் துறையில் இருந்த சபிதா மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பள்ளிகளை மூடிய செயலர்
இவர் கல்வித் துறைக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பல மூடப்பட்டன என்றும், அரசு பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை வைத்தன. என்றாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக சபிதா கல்வித்துறையில் விளங்கி வந்தார்.
  
மாற்றுத்திறனாளிகள் வயிற்றில்…
விரிவுரையாளர் பணிக்கு பார்வையற்றோரை நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய வரலாறுக்கு சொந்தக்காரரும் இவர்தான். ஆசிரியர்கள் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக 6-10-2009 அன்று விளம்பரம் வெளியிட்டது. அதில் பார்வையிழந்த, காதுகேளாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  
நிபந்தனையற்ற மன்னிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், பார்வையற்றோருக்கான இடஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றுவதாக கோர்ட்டில் உறுதி அளித்த பெருமை மிக்கவர் சபிதா.
  
தப்பியது கல்வி
இவர் மீது இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் இவர் மீது எடுக்கவில்லை. தற்போது இந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன…!!

Danger -அபாயம்
Death-    மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction – அழிவு
Debt – கடன்

Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression – சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு
     மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன்(Go-போ) தான் இறைவன் (God). எனவே இறைவனை அனுதினமும்
வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்

8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்: தகவல் அறியும் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் !!

கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தை சார்ந்த சமூக ஆர்வலர் தே. ராஜு. இவர் கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017 கல்வியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிர்யணிக்கப்பட்ட 
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் எத்தனை? இதில் சேர்க்கை பயனுற்ற அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை? குறித்த தகவல்களை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரியுடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்படி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் பொதுத் தகவல் அதிகாரி அளித்த தகவல் விவரம் வருமாறு,

கடந்த 2009-2010 கல்வியாண்டு முதல் 2016-2017ம் கல்வியாண்டு வரையிலுமான 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை மொத்தம் 29,225 ஆகும். , இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் 213 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 மாணவர்கள் என மொத்தம் 278 அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜு கூறும்போது, “தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர்.

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது. இதனடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் 29,225 சேர்க்கப்பட்ட எம்.பி.பி.எஸ் மாணவர்களில் வெறும் 278 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களாக உள்ளனர். அதாவது வெறும் 1 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள். இதில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 99 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்” என்றார்.

 

கல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற்றோர்

தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. 
இவற்றில்,எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. புதிய மாணவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது.’எந்த பள்ளியும் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என, கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளிகளில், பல்வேறு பெயர்களில் நன்கொடை பெறப்படுகிறது. அத்துடன், வரும் கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில், முதல் பருவத்திற்கான தொகையும் வசூலிக்கப்படுகிறது. இது, பல பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, பல மடங்கு அதிகமாக உள்ளது.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் வரைமுறை இன்றி, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு அமைத்த கல்வி கட்டண கமிட்டியும் விசாரிக்கவில்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் கண்டு கொள்ளவில்லை. அதனால், பள்ளிகளின் நெருக்கடிக்கு பயந்து, கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி, கல்வி கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

மேலும் 15 நாள்களுக்கு ரூபல்லா தடுப்பூசி முகாம் நீட்டிப்பு

ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது. 
9 மாதம் நிறைவடைந்த குழந்தை முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்களுக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையங்கள், அரசு-அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடுமுறையின்றி… இந்த நிலையில், முகாம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் விடுமுறையின்றி தொடர்ந்து 15 நாள்களுக்கு இந்தத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார்.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? தண்டனை என்ன ?

பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ‘முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* தேர்வு அறையில் புத்தகம், விடைகள் அடங்கிய, ‘பிட்’ காகிதம் வைத்திருந்து, அதை பார்த்து எழுதும் முன், கண்காணிப்பாளரிடம் மாணவர் தானாக ஒப்படைத்தால், விளக்ககடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கப்படுவார்; மறுநாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்

* காப்பியடிக்க புத்தகம், பிட் பேப்பர் வைத்திருந்ததை,கண்காணிப்பாளர் கண்டுபிடித்து, மாணவர் அதை பார்த்து எழுதாமல் இருந்தால், அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும். மீண்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். குறிப்பிட்ட பாடத்திற்கான தேர்வை, ஓராண்டுக்கு எழுத முடியாது

* மற்றொரு மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். அடுத்த பாட தேர்வுகளை எழுதலாம். ஆனால், பிரச்னைக்குரிய பாடத்தில்தேர்வு எழுத, ஓர் ஆண்டு தடை விதிக்கப்படும்

* காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால், மதிப்பெண் நிறுத்தி வைக்கப்படும்; இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

* தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு பரிசு கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட முயன்றால், குறிப்பிட்ட காலத்துக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* அதிக மதிப்பெண் தரக்கோரியோ, அறை கண்காணிப்பாளரை வசைபாடியோ, விடைத்தாளில் வார்த்தைகள் இடம் பெற்றாலோ, கடிதம் எழுதினாலோ, மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்

* அறை கண்காணிப்பாளர், அதிகாரிகளை தாக்கும் விதமாக, மாணவர் செயல்பட்டால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். மற்ற பாட தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்

* விடைத்தாளை வழங்காமல் வெளியே கொண்டு வந்தால், தேர்வு ரத்து செய்யப்படும்

* வினாத்தாளை, ‘லீக்’ செய்தால், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* விடைத்தாளில் பெயர், இனிஷியல், வேறு சில சிறப்பு குறியீடுகள் எழுதினால், வினாத்தாளில் பதில் எழுதி, அதைமற்ற மாணவருக்கு அனுப்பினால், தேர்வு ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே இனி தேர்வு எழுதலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் பிறமொழி மாணவ மாணவிகள் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக் கேட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பிறமொழி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது