|
ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் விடுமுறையின்றி தொடர்ந்து 15 நாள்களுக்கு இந்தத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார். |
பிளஸ் 2 தேர்வு துவங்க, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ‘முறைகேடுகளில் ஈடுபடுவோர், மூன்று ஆண்டுகள்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்’ என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* தேர்வு அறையில் புத்தகம், விடைகள் அடங்கிய, ‘பிட்’ காகிதம் வைத்திருந்து, அதை பார்த்து எழுதும் முன், கண்காணிப்பாளரிடம் மாணவர் தானாக ஒப்படைத்தால், விளக்ககடிதம் எழுதி வாங்கி எச்சரிக்கப்படுவார்; மறுநாள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்
* காப்பியடிக்க புத்தகம், பிட் பேப்பர் வைத்திருந்ததை,கண்காணிப்பாளர் கண்டுபிடித்து, மாணவர் அதை பார்த்து எழுதாமல் இருந்தால், அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும். மீண்டும் அடுத்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். குறிப்பிட்ட பாடத்திற்கான தேர்வை, ஓராண்டுக்கு எழுத முடியாது
* மற்றொரு மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். அடுத்த பாட தேர்வுகளை எழுதலாம். ஆனால், பிரச்னைக்குரிய பாடத்தில்தேர்வு எழுத, ஓர் ஆண்டு தடை விதிக்கப்படும்
* காப்பியடித்தது நிரூபிக்கப்பட்டால், மதிப்பெண் நிறுத்தி வைக்கப்படும்; இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது
* தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு பரிசு கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட முயன்றால், குறிப்பிட்ட காலத்துக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்
* ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்
* அதிக மதிப்பெண் தரக்கோரியோ, அறை கண்காணிப்பாளரை வசைபாடியோ, விடைத்தாளில் வார்த்தைகள் இடம் பெற்றாலோ, கடிதம் எழுதினாலோ, மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்
* அறை கண்காணிப்பாளர், அதிகாரிகளை தாக்கும் விதமாக, மாணவர் செயல்பட்டால், அறையிலிருந்து வெளியேற்றப்படுவார். மற்ற பாட தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்
* விடைத்தாளை வழங்காமல் வெளியே கொண்டு வந்தால், தேர்வு ரத்து செய்யப்படும்
* வினாத்தாளை, ‘லீக்’ செய்தால், மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்
* விடைத்தாளில் பெயர், இனிஷியல், வேறு சில சிறப்பு குறியீடுகள் எழுதினால், வினாத்தாளில் பதில் எழுதி, அதைமற்ற மாணவருக்கு அனுப்பினால், தேர்வு ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள பிறமொழி மாணவர்கள் தாய்மொழியிலேயே 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. இதனால், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் பிறமொழி மாணவ மாணவிகள் அவரவர் தாய்மொழியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக் கேட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர், பிறமொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பிறமொழி மாணவர்கள் 30 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique
Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்
தேவைப்படும் ஆவணங்கள்:
கீழ்க்கண்ட ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளவும்,
- புகைப்படம்(Profile Photo) – 15KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload)செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png. புகைப்படத்தின் அளவைகுறைத்துகொள்ள http://compressjpeg.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
- கையெழத்துபடம் (Signature / Thumb / Other Print )
3KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png.
- குடியிருப்புக்கானசான்றிதழ் ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல்அடையாள அட்டை )
10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
- சாதிசான்றிதழ் (SC, ST, OBC – BC, MBC )
10KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
- மாற்றத்திறனாளிக்கானசான்றிதழ் ( தமிழக அரசால் வழங்கப்பட்டது )
10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்
Compress Tools
கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை கொண்டு உங்களது Image மற்றும்PDFயை Compress செய்து கொள்ள முடியும்.
Image compress – http://compressjpeg.com/
PDF compress – https://online2pdf.com/pdf-reduce-size
Scan App Tools
உங்களது ஆவணங்களை Mobile மூலம் Scan செய்ய கீழ்க்காணும் Appயை பயன்படுத்தலாம்
Android Mobile : Office Lens https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens&hl=en
Apple Mobile : Office Lens https://itunes.apple.com/in/app/office-lens/id975925059?mt=8
Step 1:
http://www.swavlambancard.gov.in/pwd/application – என்ற இணையதள முகவரியைதேர்வு செய்யவும்
Step 2 : தமிழ் மொழியை தேர்வுசெய்யவும்
Step 3: Personal Details
Personal Details-ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழேகுறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்முதல் பெயர் (Applicant First Name *) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்தந்தை பெயர் (Applicant Father’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்தாயின் பெயர் (Applicant Mother’s Name) – தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பிறந்ததேதி (Date of Birth ).
- இணம்(Gender).
- வகுப்பு(சாதி – Category) – சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ( image size 10 KB to 800 KB allowed ).
- புகைப்படம்( image with size 15 KB to 500 KB ).
- கையொப்பபுகைப்படம் (image with size 3 KB to 500 KB allowed).
- முகவரி1 (Address Line 1 * ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- மாநிலம்.
- மாவட்டம்.
- மாநகராட்சி.
குறிப்பு : தொடர்புகொள்ள வேண்டிய முகவரியும் நிரந்தர முகவரியும் ஒரே முகவரி என்றால்Same as above என்தை தேர்வு செய்யவும்.
Step 4 : Disability Details
Disability Details – ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாககீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- Sr. No. / Registration No. of Certificate *
- Date of Issuance of Certificate *
- Details of Issuing Authority *
- Disability Percentage (%)
- Disability Type *
Step 5 : Employment Details
Employment Details- ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.
Step 6: Identity Details
- Identity Proof (ஆதார்அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாளஅட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்க்கான சான்றிதழை பதிவேற்றம்(upload) செய்ய வேண்டும்)
- Enter the code from the image (Case Insensitive)* – (அருகில்உள்ளபுகைப்படத்தில்உள்ள எழத்துகளை சரியாக பதிவு செய்ய வேண்டும்)
- I have read and agree to the Terms and Conditions.* (இருதியாகஅருகில்உள்ளசிறிய சதுர பெட்டியை தேர்வு செய்யவும்)
Step 7: Person with Disability Application Preview
இந்தபக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும்தகவல்களை சரிசெய்ய வேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டும்
Step 8: Confirmation
இறுதியாக தங்களது அனைத்து தகவல்களும் இந்திய அரசால் உறுதி செய்யப்பட்ட பின்பு இந்தியஅரசின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்களது விண்ணப்பத்தையும (Application ) அதற்க்கான ரசீதையும்(Receipt) பதிவிறக்கம்செய்து கொள்ள வேண்டும்.
உங்களது email-க்குஅனுப்பபட்டிருக்கம் பதிவு எண்ணை (Enrolment Number) கொண்டுஉங்களது தேசிய அடையாள அட்டையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். – Track Application Status – http://www.swavlambancard.gov.in/pwd/pwdtrack
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் தங்களது புரிதலுக்காக மட்டுமே..மேலும் தெரிந்துக்கொள்ள http://www.swavlambancard.gov.in/ என்ற இணைய தளத்தைபார்க்கவும்.
EMIS ONLINE ENTRY IN JPG FORMAT…EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை !!
1.முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்
( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.
முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S
4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.
4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.
4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.
4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.
4a, செக்சன் இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A
4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே ——– என குறிக்கவும்.
4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை, இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால் வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.
4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் ——— என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் ( DATA CAPTURE FORM ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).
4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.
4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.
4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.


4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் —— எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது — எனப்பதியவும்)
4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.
4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)
4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.
4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)
4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில் எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.
4c, STUDENT STATUS இதில் மூன்று விபரம் இருக்கும் (——— இட தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல் இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)
4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.
4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.
4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)
4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.
4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் ——— அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).
4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.
4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.
4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)
4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)
4e, அகடமிக் இயர் 2014 – 2015 என பதிவிடவும்.
4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)
நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..
சில டிப்ஸ்
1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)
பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)
2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும்
Internal Server Error
வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!
இப்பதிவு நீண்ட கட்டுரையாக தெரிந்தாலும் நேரடியாக 10 மாணவர்கள் விபரம் பதிவு செய்து விட்டால் நமக்கே எளிதாகிவிடும்.
இதில் மாற்றங்கள் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அவ்வப்போது திருத்தி வெளியிடப்படும்.மேலே குறிப்பிடப்பட்ட படங்களைப்பார்த்து புரிந்து கொள்ளவும்.
சமீப காலமாக, பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடலூரில் பள்ளி மாணவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வெய்யலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிதம்பரத்தைச் சேர்ந்த அம்பேத்கார் பணியாற்றி வருகிறார். அவரோடு மேலும் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என சிலரை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, மாணவர்களும் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
பின்னர், இந்த தகவல், கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் வெய்யலூர் அரசுப் பள்ளிக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக் கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களே வகுப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் கழிவறை வசதியும் இல்லாததால், அவர்களே இதுபோன்ற பணிகளைச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின், அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டப்படி, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான, கல்விசார் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில், ’ஷால ஷித்தி’ திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகும்.
இதற்காக, கல்வியாண்டு துவக்கத்தில், ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதற்கு பின், எவ்வித பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. செய்வழி கற்பித்தலை ஊக்குவிக்க துவங்கப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ’ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடவாரியாக எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கி கற்பிக்க, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்காக கொண்டு வரப்பட்ட ஷாலஷித்தி திட்டத்தை, ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
’இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், மனப்பாடம் செய்து கற்கும் முறைக்கு முடிவு கட்டலாம். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, செயல்வழியில் கற்பித்தால், மாணவர்கள் படித்தது மறக்க வாய்ப்பிருக்காது’ என்றார்
1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.
4.ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
5.இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும், ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்.
6.வகுப்பு 1 முதல் 8ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏதேனும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் EMIS COMMON POOLல் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை ( RTE) செய்து இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது புதிய பதிவுகளாக சேர்த்துக்கொள்ளலாம்.
7.கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள் முடிக்கப்பட வேண்டும்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.
‘ஆதார்’ எண் வழங்கிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘ஆதார்’ எண் இருந்தால் மட்டுமே ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க முடியும்.
தற்போது, தாலுகா அலுவலகங்களில் ‘ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டைக்கு படம் எடுக்கும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், ‘ரேஷன் கடைகளில் குழந்தைகளின் பிறப்பு சான்று வழங்கினால் போதும்’ என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி பதிவு செய்த போது ஸ்கேனர் கருவி வேலை செய்யவில்லை. இக்குறையை களைந்து குழந்தைகளுக்கு மட்டும் ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது; தாலுகா அலுவலகங்களில் இப்பணி நடக்கும்’ என்றனர்.
C.B.S.E பாடத்திட்டத்தில் 1 – 8-ம் வகுப்புக்கு N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு…
சென்னை: சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் ( N.C.E.R.T-யின் ) பாடப்புத்தகங்கள் மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. N.C.E.R.T-யின் பாடப் புத்தகங்களை பயன்படுத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்புடையவை இல்லை என்றும் சில கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேறுபட்ட சமூக பண்பாட்டு சூழல் உள்ளதால், ஒரே பாடப்புத்தகம் என்ற முறை தேவையற்றது என்று கூறியுள்ளனர். மேலும் காலஅவகாசம் கூட அளிக்காமல் திடீரென மாற்றம் செய்வது பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை வெகுவாக பாதிக்கும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். CBSE பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதால் பெற்றோர்களுக்கு கூடுதுல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். CBSE பாடப்புத்தகங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வாங்கி பயன்படுத்துவதால் செலவு அதிகம் என கருதப்படுகிறது. இதனால் N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.