மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique 

Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்

தேவைப்படும் ஆவணங்கள்:

கீழ்க்கண்ட ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளவும்,

  1. புகைப்படம்(Profile Photo) – 15KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload)செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png. புகைப்படத்தின் அளவைகுறைத்துகொள்ள http://compressjpeg.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
  2. கையெழத்துபடம் (Signature / Thumb / Other Print )

3KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png.

  1. குடியிருப்புக்கானசான்றிதழ் ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல்அடையாள அட்டை )

10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

  1. சாதிசான்றிதழ் (SC, ST, OBC – BC, MBC )

10KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

  1. மாற்றத்திறனாளிக்கானசான்றிதழ் ( தமிழக அரசால் வழங்கப்பட்டது )

10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்

Compress Tools

கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை கொண்டு உங்களது Image மற்றும்PDFயை Compress செய்து கொள்ள முடியும்.

Image compress – http://compressjpeg.com/

PDF compress – https://online2pdf.com/pdf-reduce-size

Scan App Tools

உங்களது ஆவணங்களை Mobile மூலம் Scan செய்ய கீழ்க்காணும் Appயை பயன்படுத்தலாம்

Android Mobile : Office Lens https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens&hl=en

Apple Mobile : Office Lens https://itunes.apple.com/in/app/office-lens/id975925059?mt=8

Step 1:

http://www.swavlambancard.gov.in/pwd/application  என்ற இணையதள முகவரியைதேர்வு செய்யவும்

Step 2 : தமிழ் மொழியை தேர்வுசெய்யவும்

Step 3: Personal Details

Personal Details-ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழேகுறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  1. விண்ணப்பதாரர்முதல் பெயர் (Applicant First Name *) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்தந்தை பெயர் (Applicant Father’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்தாயின் பெயர் (Applicant Mother’s Name) – தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  4. பிறந்ததேதி (Date of Birth ).
  5. இணம்(Gender).
  6. வகுப்பு(சாதி – Category) – சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ( image size 10 KB to 800 KB allowed ).
  7. புகைப்படம்( image with size 15 KB to 500 KB ).
  8. கையொப்பபுகைப்படம் (image with size 3 KB to 500 KB allowed).
  9. முகவரி1 (Address Line 1 * ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
  10. மாநிலம்.
  11. மாவட்டம்.
  12. மாநகராட்சி.

குறிப்பு : தொடர்புகொள்ள வேண்டிய முகவரியும் நிரந்தர முகவரியும் ஒரே முகவரி என்றால்Same as above என்தை தேர்வு செய்யவும்.

Step 4 : Disability Details

Disability Details – ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாககீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  1. Sr. No. / Registration No. of Certificate *
  2. Date of Issuance of Certificate *
  3. Details of Issuing Authority *
  4. Disability Percentage (%)
  5. Disability Type *

Step 5 : Employment Details

Employment Details- ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

Step 6: Identity Details

  1. Identity Proof (ஆதார்அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாளஅட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்க்கான சான்றிதழை பதிவேற்றம்(upload) செய்ய வேண்டும்)
  2. Enter the code from the image (Case Insensitive)* – (அருகில்உள்ளபுகைப்படத்தில்உள்ள எழத்துகளை சரியாக பதிவு செய்ய வேண்டும்)
  3. I have read and agree to the Terms and Conditions.* (இருதியாகஅருகில்உள்ளசிறிய சதுர பெட்டியை தேர்வு செய்யவும்)

Step 7: Person with Disability Application Preview

இந்தபக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும்தகவல்களை சரிசெய்ய வேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டும்

Step 8: Confirmation

இறுதியாக தங்களது அனைத்து தகவல்களும் இந்திய அரசால் உறுதி செய்யப்பட்ட பின்பு இந்தியஅரசின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

உங்களது விண்ணப்பத்தையும (Application ) அதற்க்கான ரசீதையும்(Receipt) பதிவிறக்கம்செய்து கொள்ள வேண்டும்.

உங்களது email-க்குஅனுப்பபட்டிருக்கம் பதிவு எண்ணை (Enrolment Number) கொண்டுஉங்களது தேசிய அடையாள அட்டையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். – Track Application Status – http://www.swavlambancard.gov.in/pwd/pwdtrack

 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் தங்களது புரிதலுக்காக மட்டுமே..மேலும் தெரிந்துக்கொள்ள http://www.swavlambancard.gov.in/ என்ற இணைய தளத்தைபார்க்கவும்.

 

EMIS ONLINE ENTRY – STEP BY STEP PROCEDURE…

EMIS ONLINE ENTRY IN JPG FORMAT…EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை !!

 

 

1.முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்

இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.

எ.கா : MAHALINGAM . S

 

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.

 

  4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.

எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே ——– என குறிக்கவும்.

             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.

குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் ——— என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.

4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் —— எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது — எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (——— இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.

4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.

அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.

4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)

4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.

4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் ——— அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).

4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.

4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.

4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)

4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)

4e, அகடமிக் இயர் 2014 – 2015 என பதிவிடவும்.

4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)

நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

 

சில டிப்ஸ்

 

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

              முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)

பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

 

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR  MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும்

Internal Server Error

  வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!

இப்பதிவு நீண்ட கட்டுரையாக தெரிந்தாலும் நேரடியாக 10 மாணவர்கள் விபரம் பதிவு செய்து விட்டால் நமக்கே எளிதாகிவிடும்.

                        இதில் மாற்றங்கள் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அவ்வப்போது திருத்தி வெளியிடப்படும்.மேலே குறிப்பிடப்பட்ட   படங்களைப்பார்த்து புரிந்து கொள்ளவும்.

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் : ஆர்.டி.ஓ. விசாரணை!

சமீப காலமாக, பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடலூரில் பள்ளி மாணவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வெய்யலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிதம்பரத்தைச் சேர்ந்த அம்பேத்கார் பணியாற்றி வருகிறார். அவரோடு மேலும் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என சிலரை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, மாணவர்களும் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பின்னர், இந்த தகவல், கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் வெய்யலூர் அரசுப் பள்ளிக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக் கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களே வகுப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் கழிவறை வசதியும் இல்லாததால், அவர்களே இதுபோன்ற பணிகளைச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் இழந்த செயல்வழி கற்பித்தல்! பயிற்சி அளிக்க கோரிக்கை!!!

மத்திய அரசின், அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டப்படி, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான, கல்விசார் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில், ’ஷால ஷித்தி’ திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகும்.

இதற்காக, கல்வியாண்டு துவக்கத்தில், ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதற்கு பின், எவ்வித பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. செய்வழி கற்பித்தலை ஊக்குவிக்க துவங்கப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ’ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடவாரியாக எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கி கற்பிக்க, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக கொண்டு வரப்பட்ட ஷாலஷித்தி திட்டத்தை, ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

’இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், மனப்பாடம் செய்து கற்கும் முறைக்கு முடிவு கட்டலாம். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, செயல்வழியில் கற்பித்தால், மாணவர்கள் படித்தது மறக்க வாய்ப்பிருக்காது’ என்றார்

EMIS சார்பான தகவல்கள்…

1.புதிய புகைப்படம் EMISல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

 

2.அனைத்து பதிவுகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

 

3.இதில் பிறந்தநாள், சேர்க்கை எண், பெற்றோர்கள் பெயர், ஆதார் எண், உடன்பிறந்தவர்கள் குறிப்பு போன்ற அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.

 

4.ஏதேனும் பதிவுகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ளவும் ஏனெனில் தற்போது சில கலங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

 

5.இவை அனைத்தையும் 28.2.2017 க்குள் முடித்துக்கொள்ளவும், ஏனெனில் அதற்குமேல் எடிட் வசதி அகற்றப்பட்டுவிடும்.

 

6.வகுப்பு 1 முதல் 8ஆம் வகுப்புவரை புதிய மாணவர்கள் சேர்க்கை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏதேனும் மாணாக்கர்கள் தங்கள் பள்ளியில் பயின்றும் EMIS COMMON POOLல் இல்லாமல் இருந்தாலோ அல்லது நேரடிச் சேர்க்கை ( RTE) செய்து இருந்தாலோ அவை அனைத்தையும் இப்பொழுது புதிய பதிவுகளாக சேர்த்துக்கொள்ளலாம்.

 

7.கண்டிப்பாக தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து 28.2.2017 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.

‘ஆதார்’ எண் வழங்கிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ‘ஆதார்’ எண் இருந்தால் மட்டுமே ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க முடியும்.

தற்போது, தாலுகா அலுவலகங்களில் ‘ஆதார்’ அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டைக்கு படம் எடுக்கும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், ‘ரேஷன் கடைகளில் குழந்தைகளின் பிறப்பு சான்று வழங்கினால் போதும்’ என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளுக்கு ‘ஆதார்’ அட்டை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி பதிவு செய்த போது ஸ்கேனர் கருவி வேலை செய்யவில்லை. இக்குறையை களைந்து குழந்தைகளுக்கு மட்டும் ‘ஆதார்’ பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது; தாலுகா அலுவலகங்களில் இப்பணி நடக்கும்’ என்றனர்.

C.B.S.E பாடத்திட்டத்தில் 1 – 8-ம் வகுப்புக்கு N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு…

சென்னை: சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் ( N.C.E.R.T-யின் ) பாடப்புத்தகங்கள் மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. N.C.E.R.T-யின் பாடப் புத்தகங்களை பயன்படுத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

 

 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்புடையவை இல்லை என்றும் சில கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேறுபட்ட சமூக பண்பாட்டு சூழல் உள்ளதால், ஒரே பாடப்புத்தகம் என்ற முறை தேவையற்றது என்று கூறியுள்ளனர். மேலும் காலஅவகாசம் கூட அளிக்காமல் திடீரென மாற்றம் செய்வது பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை வெகுவாக பாதிக்கும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். CBSE பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதால் பெற்றோர்களுக்கு கூடுதுல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். CBSE பாடப்புத்தகங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வாங்கி பயன்படுத்துவதால் செலவு அதிகம் என கருதப்படுகிறது. இதனால் N.C.E.R.T பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry  பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.

 

 

அனைத்து மாணவர்களின் விவரங்களையும் update செய்து முடிக்கவும்

விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 2,500 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை,

மே முதல் வாரத்தில் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்பின், பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, பிப்., 2 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை, 1,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கைக்கு, தனியார் பள்ளிகள் தற்போதே விண்ணப்பங்கள் வழங்குவது விதிகளை மீறிய செயல்என, பள்ளிக் கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு, பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க, விதிமீறிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

நல்லா படிக்கணுமா? அப்போ இதைப் படிங்க..!

‘படிக்கணும். எல்லாத்தையும் படிக்கணும்; எல்லா யூனிட்டையும், ஒரு டாபிக் விடாம படிக்கணும்; ஆனா, எக்ஸாமுக்கு முந்துன நாள் மட்டும் படிக்கணும்; அதுக்கு என்ன பண்ணலாம்னு நம்ம ஃப்ரண்ட்ஸ்கிட்ட அறிவுரை கேட்க, அதுக்கு அவன் ‘நீ இண்டெக்ஸ் பேஜ்தான் படிக்கணும்’னு கிண்டல் பண்ணுவான். இது தேர்வுக்கு முந்தைய நாள்களில் நடக்கும் வழக்கமான உரையாடல். தேர்வு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படுகிறதா? உங்களுக்குத்தான்

இந்தக் கட்டுரை.

 

என்னதான் பரிட்சைக்கு முந்தினநாள் படிக்கணும்னு நினைச்சாலும் இந்த ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நம்மை சும்மா விடாது. ‘நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்னு கூடவே வரும். அதையும் தாண்டி உட்கார்ந்தா, எங்கயோ கேட்குற பாட்டு, கிச்சன்ல இருந்து வர்ற வாசம் உங்க நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்கும். இல்லையா? அப்போ, உங்களுக்கு கவனச்சிதறல் இருக்கு. இதனால, அமெரிக்காவுல 2005-ல் பல பில்லியன் டாலர் நஷ்டமாயிடுச்சாம். அடடா! ‘இது என்னடா… புது வியாதின்னு நினைக்கிறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்.  இந்த நோயைக் குணப்படுத்தி உங்க வேலையை சரியாகச் செய்வதற்கான வழிமுறைகள். இதோ…

 

  1. லிஸ்ட் போட்டு வேலை பாக்கணும்:

லிஸ்ட் போட இதென்ன மளிகைக்கடை பொருளான்னு நீங்க கேக்குறது புரியுது. இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நண்பா.  இந்த விஷயத்தை இந்த டைம்ல பண்ணி முடிக்கணும்னு நோட் பண்ணி வச்சுக்கணும். அப்டி நோட் பண்ணுனா, சரி ஆகிடுமா? உடனே ஆகாது. இந்த மாதிரி நோட் பண்ணி வைக்கிறப்போ,  நாம எவ்ளோ வொர்க் பண்ணாம விட்டு இருக்கோம்னு நமக்கு தெரியும். அப்போ நமக்குள்ளயே ஒரு பயம் வரும். அந்த பயம் எப்படியோ அடுத்த தடவை அந்த வேலையை முடிக்க வச்சுடும்.

 

  1. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்க :

எப்படி படிக்கிறோம் என்பது மட்டும் அல்ல, எங்கே படிக்கிறோம் என்பதும் முக்கியம். படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான்னு சொல்வாங்க. அதெல்லாம் படிக்கிற பையனுக்கு. நமக்கு? அதுக்குத்தான் சரியான விடையைத் தேர்ந்தெடு மாதிரி, சரியான இடத்தை தேர்ந்தெடுக்கணும். முதல்ல நம்மல சுத்தி டிவி, செல்போன், கம்யூட்டர், கதை புத்தகம் போன்ற அபாயகரமான பொருட்கள் இருக்கான்னு பார்க்கணும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்க. தீவிரமா வாசிக்கும்போது சின்னச்சின்ன சத்தம் கூட கடுப்பு ஏத்தும், அதுனால கொஞ்சம் வாய்விட்டு படிச்சா அந்த சத்தமெல்லாம் கேட்காது. மைண்டும் வேற எங்கும் போகாது.

 

  1. எலக்ட்ரானிக் பொருட்களை கொஞ்ச நேரம் மறந்துடுங்களேன் :

 

 

‘இது என்ன புதுசா இருக்குனு யோசிக்காதீங்க ப்ரோ. வீட்ல எப்பவும் திட்டுவாங்களே… ‘எருமை எப்ப பார்த்தாலும் போனையும் லேப்டாப்பையும் பார்த்துட்டே இருக்கு. வேற எந்த வேலையும் பாக்க மாட்டேங்குது’ன்னு ( என்னை எப்பவும் இப்டிதான் திட்டுவாங்க). அதுதான் எலக்ட்ரானிக் டிவைஸ் இந்த டிவி, போன், சிஸ்டம் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி வச்சிடணும். ஏன்னா… நம்ம படிக்கணும்னு நினைச்சு புக்கை எடுத்தாலும், நம்ம தளபதிகள் போன் பண்ணி, ‘மச்சான் எவ்ளோ படிச்சிருக்க? நான் இவ்ளோதாண்டா முடிச்சிருக்கேன்’னு நம்மள ‘டிஸ்டர்ப் பண்ணிடுவாங்க, ஸோ… அதுக்கு முன்னாடியே போனை ஆஃப் பண்ணி வச்சிடுறது நல்லது. என்னைக்கும் இல்லாம அன்னைக்குத்தான் டிவி-ல நல்ல ‘ப்ரோகிராம்போடுவாங்க. நல்ல புது கேம் லேப்டாப்ல ஏத்தி வச்சு இருப்போம். அதைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு படிக்கலாம்னு அடம்பிடிக்கிற மனசையும் இந்த எலக்ட்ரானிக் பொருள்களையும்  நாம ஆஃப் பண்ணி வச்சு, அதை மறந்துடணும்.

 

  1. தேவையான பொருட்கள் :

 

தேவையான பாடபுத்தகங்கள், பேனா, பென்சில், குறிப்பு எடுக்க நோட்டுகள் போன்றவற்றை முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்னா… படிக்க ஆரம்பிச்ச அப்புறம் அடுத்து அடுத்து படிக்க வேண்டிய புக் நோட்ஸ் எல்லாம், முன்னாடியே இருந்தாதான் சரியா படிக்க முடியும். இல்லைன்னா, அடுத்து படிக்க நினைக்கிற புத்தகத்தை நாம தேடணும். அப்படி தேடும்போது அது கிடைக்காம போச்சுனா, டென்ஷ்ன் ஏறும்.  எல்லாம் மறந்துடும்.

 

  1. விண்டோஸ்ஸை க்ளோஸ் பண்ணனும் :

 

இது நம்ம வீட்டுல இருக்க விண்டோஸ் இல்லை.  நம்ம ப்ரவுசர்ல விண்டோஸ். நீங்க நினைக்கலாம்… அதான் எலக்ட்ரானிக் டிவைஸ் எல்லாம் ஆஃப் பண்ண சொல்லியாச்சே…  ஏன்னா நம்ம பயலுவ என்னைக்கும் இல்லாம இன்னைக்குத்தான் ஏதும் டவுட்டு வந்தா, கூகுள்ல செக் பண்ணலாம்னு நினைப்பான். ஆனா கூகுள் போனா, நாம மறுபடியும் உலகத்தை நோக்கிய பயணத்துக்காக எல்லாத்தையும் (கண்டிப்பாக விளையாட்டு, சமூக வலைதளம் அப்போ ட்ரெண்டிங்ல இருக்க விஷயங்கள் ரொம்ப ஈர்க்கும்) தேட ஆரம்பிப்போம். அதனால வீட்டில் இருக்கும் விண்டோவையும் சிஸ்டத்தில் இருக்கும் விண்டோஸ்சையும் அணைத்துவிடுங்கள்.

 

  1. ரிமைண்டர் செட் பண்ணுங்க :

 

ஒரு வேலை செய்யும்போது நேரம் போகிறதே தெரியாது. அதே மாதிரிதான் படிக்கும்போதும் ஒரே கேள்வியைப் படிச்சுகிட்டே இருப்போம். நம்ம படிக்க ஆரம்பிச்ச அப்புறம், நேரம் ரொம்ப போயிருக்கும். அதுனால மத்த கேள்வியெல்லாம் படிக்க முடியாது ( நாம படிக்கறதே ரெண்டு கேள்வியோ மூணு கேள்வியோ அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுல) அதனால அலாரம் கடிகாரத்துல இந்த வேலையை, இந்த நேரத்துல முடிக்கணும்னு செட் பண்ணிக்கோங்க.

 

  1. முடியாதுன்னு எதுவும் கிடையாது :

 

அனைத்து தடைகளையும் நாம தாண்டி படிக்கும் போதும், நமக்கு சில விஷயங்கள், பாடங்கள் புரியாமா போகும். அச்சோ! இதைப் படிக்க முடியாதோன்னு நமக்கு தோணலாம். இது அவ்ளோதான் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு தோணும். அதெல்லாம் சும்மா… நம்ம மனவிஸ்கி. படிச்சதையே திருப்பித்திருப்பி நாலு தடவை படிச்சுப் பார்த்தா கண்டிப்பா ‘இன்ஜினியரிங்ல இருக்கிற எம்- 3’ பேப்பரே புரிஞ்சுடும். மத்த சப்ஜெக்ட் புரியாதா என்ன? நம்மளால முடியாதது ஒன்னும் இல்லைனு நினைச்சுட்டு படிக்கணும்..

 

  1. அதிகமாக படிக்க, அளவாக படிங்க :

 

 

இதுஎன்ன புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? நாம நிறையபடிக்கணும் அப்போதான் மேக்சிமம் எழுத முடியும். அதுக்குபடிக்சுட்டே இருந்தா எக்ஸாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்தவிடைன்னு தெரியாம போய்டும். சராசரியா 45 – 50 நிமிஷம்வரைக்கும்தான் ஒரு மனிதனோட கவனிக்கும் திறன் இருக்கும். (அதனாலதான் வகுப்புகள் எல்லாம் 45 – 50 நிமிஷம்வெச்சிருக்காங்க) அதுக்குமேல ஒரே விஷயத்தை கவனிக்கமுடியாது. ஸோ படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவைஒரு 5 நிமிஷம் ரிலாக்ஸ் ப்ளீஸ். ( வாக்கிங் இல்ல அமைதியாஉக்கார்ந்து இருக்கணும் அதைவிட்டுட்டு வாட்ஸப் மெசெஞ்சர்லாம்செக் பண்ணக்கூடாது)..

 

  1. இலக்கைத்தீர்மானியுங்கள் :

 

நம்முடைய குறிக்கோள் என்ன? எதுக்காக படிக்கிறோம்? இப்படிஉங்களைப் பத்தி நீங்க யோசிக்கணும்னு சிந்தனை சிற்பி வால்டேர்சொல்கிறார் உலகத்திலே மிக கடினமான விஷயம் உன்னையே நீஅறிந்து கொள்வது தான்“.  சரி அதை எப்படி தெரிஞ்சுக்கிறது?கண்ணை மூடி உட்கார்ந்து நாம எங்க இருந்து