EMIS : மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்

EMIS தகவல்

👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்

👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன

👉இவை student I’d card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து

சென்னையில் உள்ள பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு முன் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் அறிவித்துள்ளார்.

தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதால் படங்களை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி

அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன.
மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது:அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்கபயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

2018ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்:
01. ஆங்கில புத்தாண்டு – 01.01.18- திங்கள்
02. பொங்கல் – 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் – 15.01.18 – திங்கள்
04. உழவர் திருநாள் – 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் – 26.01.18 – வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி – 29.03.18 – வியாழன்
08 புனித வெள்ளி – 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 – ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் – 14.04.18- சனி
11. மே தினம் – 01.05.18 – செவ்வாய்
12. ரம்ஜான் – 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் – 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி – 13.09.18 – வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி – 02.10.18 – செவ்வாய்
19. ஆயுத பூஜை – 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி – 19.10.18- வெள்ளி
21. தீபாவளி– 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்

15 அரசுப் பள்ளிகளில் ‘நீட்’ பயிற்சி மையம்

கோவை : ‘நீட்‘ தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில் முன்பதிவு செய்த மாணவர்களுக்காக, 15 அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு, 144 ஆசிரியர்கள் கொண்டு, வகுப்பு நடத்தப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வு உட்பட, அனைத்து போட்டித் தேர்வுகளையும், பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கு, மாவட்ட வாரியாக, சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம், நேற்றுமுன்தினம் (அக்., 31ம் தேதி) முடிந்தது. மாவட்டம் முழுக்க, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயிற்சி பெற விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, வட்டார வாரியாக, 15 அரசுப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கணிதம், இயற்பியல், வேதியியல், பயாலஜி உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு, வகுப்பு எடுக்க, வட்டாரத்திற்கு மூன்று பேர் வீதம், திறன் மிகு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டம் முழுக்க, 144 ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இலவச பயிற்சிக்கு, இணையதளத்தில் பதிவு செய்த, அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.

 மாநில பாடத்திட்டத்தை முழுமையாக உள்வாங்கி படித்த பலர், நீட் தேர்வில், கடந்தாண்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். இருப்பினும், போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், பிரத்யேக சிலபஸ் தயாரித்து, மாணவர்களை வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. விரைவில் வகுப்புகள் துவங்கும்‘ என்றனர்.

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்விசார் ஆவணங்களிலும், மாணவர்களின் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. உதவித்தொகை திட்டங்கள், இலவச திட்டங்களுக்கு கூட, மாணவர்களின் அடையாள எண்ணாக, ஆதார் எண் குறிப்பிடப்படுகிறது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), ஆதார் எண் இணைத்தால் மட்டுமே, தகவல்கள் முழுமையடைகின்றன. எனவே, ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களின் ஆதார் எண் பெறுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இயக்குனரின் சுற்றறிக்கை, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடுவோரின் விபரங்களில், ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களின் பெற்றோரிடம் கூறி, விரைவில் பெற்று, ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம்’ என்றனர்.

நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
‘ஹெல்ப் லைன்’மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், கவுன்சிலிங் நடத்தவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் துவங்கும் திட்டம் உள்ளதா என, தெரிவிக்கும்படியும், அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், நீதிபதி கிருபாகரன், பல்வேறு கேள்விகளை, அரசுக்கு எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கில், அரசு சுகாதார துறை செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், ௩௨ மாவட்டங்களிலும், ‘ஹெல்ப் லைன்’ வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தேர்வு முடிவு ெவளியான தேதியில் மட்டும், ௧௦ ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்வு, போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், உளவியல் வல்லுனர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். நீட் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தேர்விலும், நுழைவு தேர்விலும் மாணவர்கள் பங்கு கொள்ள ஏதுவாக, முறையாக பயிற்றுவிக்கப்படும்.ரூ.75 லட்சம்ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், மாணவர்களின் நலன்களுக்காக பயிற்சி மையங்களை, அரசு துவக்க உள்ளது. ௭௨ லட்சம் ரூபாய் செலவில், அனைத்து மாவட்ட மத்திய நுாலகங்களிலும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு அமைப்புகளால், ௧,௪௨௨ போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், அரசியல் கட்சிகள், ௯௩௩ போராட்டங்களையும், மாணவர்கள், ௩௧௩ போராட்டங்களையும் நடத்தினர். நீட் தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவை நிறைவேற்றுவது தவிர, வேறு வழியில்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு விசார ணையை, வரும், ௮ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பொதுத் தேர்வு எழுதும், ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அரசு பொதுத் தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.இதற்காக, ௧௦ முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, இடைத்தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:காலாண்டுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இடைத்தேர்வில் வினாத்தாள் இடம்பெறும். தற்போது, முன் அரையாண்டு தேர்வு நடத்துவதால், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்கவேண்டிய நிலை உள்ளது. அதற்கு, போதிய அவகாசம் இல்லை. எனவே, முன் அரையாண்டு தேர்வை மாற்றி, இடைத்தேர்வு மட்டும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெட்ரிக் பள்ளிகளில் அதிக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். அதே போல், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

 

‘பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்’ என, கூறியுள்ளார்.

 

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்

 

நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் குறித்தும், அதனை இடிப்பது குறித்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

 

 

கட்டிடம் இடிந்து விழுந்து இனியும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை செயலர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.