அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு,
பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது. இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ‘எலைட்’ சிறப்பு பயிற்சி திட்டம், ‘பெஸ்ட்’ மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வுஅட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி

நிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது. அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.

தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.

இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12-ம் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில்சிறப்பு கவனம் செலுத்தும்படிஅதிகாரிகளுக்கு,அமைச்சர்

செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்இதையொட்டிபொது தேர்வு எழுத உள்ளவர்களுக்குசனிஞாயிறுகளில்மாலை நேர சிறப்புவகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 1 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற,அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும்அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்குமுன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

‘நீட்’ தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

நீட்‘ தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்குபள்ளிக்கல்வி இயக்குனர்

வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

 

 

 

 

3,௦௦௦ ஆசிரியர்கள்

 

 

 

நீட்‘ தேர்வால்தமிழக அரசு பள்ளி மாணவர்கள்மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாககல்வியாளர்களும்சமூகஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்இதன் அடிப்படையில்தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்‘ நுழைவு தேர்வுக்கான சிறப்புபயிற்சியைபள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.

இந்தபயிற்சிநவம்பரில் துவங்கப்பட உள்ளதுஇதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள்ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்புஅகாடமியில்சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

 

 

 

வழிகாட்டுதல்கள்

 

 

 

பின்தமிழக மாணவர்களுக்கு, ‘நீட்‘ மற்றும் ஜே..., தேர்வில் தேர்ச்சி பெறசிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில்நுழைவுதேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களைஆன் – லைனில் பதிவு செய்யபுதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்ஒரு வாரத்திற்கு முன்இணையதளத்தை துவக்கினார்இதையடுத்து,பதிவு செய்வதற்கானவழிகாட்டுதல்களைபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள்நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம்தமிழகத்தில்,412மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதுபயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

 

மாணவர்கள்தலைமை ஆசிரியர்கள் வழியாகhttp://tnschools.gov.in என்றஇணையதளத்தில்தங்கள் விபரங்களை பதிவு செய்யவேண்டும்இதற்குமாணவர்களுக்கு வழங்கப்பட்டஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.

 

பதிவுக்கு பின்ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்பயிற்சிதுவங்கும் நாள்நேரம் பின் அறிவிக்கப்படும் எனஇயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இரண்டு அரையாண்டு தேர்வு

 

 

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில்சிறப்பு கவனம் செலுத்தும்படிஅதிகாரிகளுக்கு,அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்இதையொட்டிபொது தேர்வு எழுத உள்ளவர்களுக்குசனிஞாயிறுகளில்மாலை நேரசிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

 

இந்நிலையில், 10ம் வகுப்புபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்பொது தேர்வுகளில்தனியார் மாணவர்களுக்கு நிகராகமதிப்பெண் பெற,அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்இதற்காகஅரசு பள்ளி மாணவர்களுக்குடிசம்பரில் நடக்கும்அரையாண்டு தேர்வுக்கு முன்மாதிரி அரையாண்டு தேர்வு நடத்தபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்அதற்குமுன்தேர்வுக்கான பாடங்களை முடித்துமாணவர்களை தயார் செய்யும்படிதலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

NEET – 2018 | ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

Posted: 15 Oct 2017 04:41 PM PDT

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது.

 

 

மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.

மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.

 

தமிழ் கட்டாயம் : இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

பாதி பேர் பெண்கள்.

பள்ளியில் காப்பீடு அமைச்சர் தகவல்

திருச்சி: புதுக்கோட்டையில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார்.

 

 

திருச்சியில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது.

 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தயார்…! மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள்…

தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

 

 

மத்திய,அரசின்,தகுதிப்,படிப்பில்,சேர 15 லட்சம்,ஆசிரியர்கள், தயார்…!

 

மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.

 

இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கி, ‘ஆசிரியராக பணிபுரிவோர்,

 

2019 மார்ச், 31 க்குள், ‘டெட்’ தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது, 1 – 5ம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

 

எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பதுடன், பட்டப்படிப்பு, பி.எட்., முடித்து, ‘டெட்’ தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த கட்டுப்பாடுகளின்படி, பல ஆசிரியர்கள் தகுதி பெறாததால், பெரும்பாலான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசிடம், பல்வேறு அமைப்புகள் மனு அளித்தன.அவற்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிசீலித்து, சலுகை திட்டம் ஒன்றை, கடந்த மாதம் அறிவித்தது.

 

அதன்படி, ‘பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண்ணும் எடுக்காமல், ‘டெட்’ தேர்விலும் தேர்ச்சி பெறாத வர்கள், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசியதிறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு, டிப்ளமா கல்வியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்’ என, சலுகை வழங்கப்பட்டது.ஆனால், ‘சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்’ என்றும், மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, கடந்த மாதம், ‘ஆன் – லைன்’ பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக, பீஹாரில், 2.85 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

ம.பி., 1.90 லட்சம்; உ.பி., 1.95 லட்சம்; மேற்கு வங்கம், 1.69 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளனர். ஆந்திரா, 8000; தெலுங்கானா, 17 ஆயிரத்து, 8௦௦ மற்றும் கேரளாவில், 831 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.