வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

‘பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்’ என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில், பருவ மழையால் எந்த விபத்தும், பள்ளி வளாகங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்: அனைத்து பள்ளிகளிலும், கட்டடத்தின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும். மழைநீர் ஒழுகும் கட்டடங்களை தவிர்க்க வேண்டும். பாழடைந்த கட்டடங்களை, அனுமதி பெற்று இடிக்க வேண்டும். மின் உபகரணங்களை ஆய்வு செய்து, மின் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். கீழே விழும் நிலையில், மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். பள்ளியில், அவசர தேவைக்கு, முதலுதவி மருந்துகள் வைத்திருப்பது அவசியம்.

பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை, பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் செல்லவோ, அவற்றில் குளிக்கவோ கூடாது என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

‘ஆதார்’ எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, ‘ஆதார்’ எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, ‘ஆன் – லைனில்’ பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.

மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

 

 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது.

பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

 

திருப்பி அனுப்பும்

 

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், ‘மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்’ என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.’பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்’ என, தெரிவித்துள்ளது.

 

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் – லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

 

தேர்வு எழுத வாய்ப்பு

 

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது

ஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குதல்ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தொடங்குதல், 9-ஆம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கணினி மயமாக்குதல் போன்ற திட்டங்களை

செயல்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகுஅனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.

 

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன்தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்பொதுநூலகத் துறை இயக்குநர் எஸ்கண்ணப்பன்சென்னை மாவட்ட மைய நூலகர் இளங்கோ சந்திரகுமார்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்நீட் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய காலம் நீட்டிப்பு தமிழகத்தில் நீட்உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக 442 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

 

பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக கடந்த அக்.16-ஆம் தேதி முதல்வரும் 26-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததுபல பள்ளிகளுக்குபயனாளர் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதுஇது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம்செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர்அப்போது பதிலளித்த அமைச்சர், ‘ அதிக மாணவர்கள்பயன்பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்பயிற்சி வகுப்புகள்தொடங்கப்படவுள்ளன.

 

 

மாணவர்களின் நலன் கருதி பயிற்சி மையத்தில் சேருவதற்கான பதிவு நவம்பர் முதல் வாரம் வரைநீட்டிக்கப்படும்போட்டித் தேர்வு தொடர்பாக 54 பேராசிரியர்கள் ஆந்திர மாநிலம் சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளனர்அந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்குவர்.மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் தொடங்கும்.

அரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்!!

அரசுபள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில்முறைகேடு நடக்காமல்

கண்காணிக்க வேண்டும்‘ எனஅனைவருக்கும் கல்வி இயக்ககமானஎஸ்.எஸ்.., இயக்குனர்,அறிவுறுத்தியுள்ளார்.

 

அனைத்து அரசு பள்ளிகளுக்கும்ஆசிரியர்களின் ஊதியம்அடிப்படை கட்டமைப்பு செலவுகள்தொழில்நுட்பவசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்குமத்திய அரசின் சார்பில்நிதி உதவி வழங்கப்படுகிறதுஇதில்,தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்குமத்திய அரசின்அனைவருக்கும் கல்விஇயக்ககமானஎஸ்.எஸ்.., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறதுஇந்த நிதியையும்அதற்கானதிட்டங்களையும்மாநில எஸ்.எஸ்.., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறதுஇந்நிலையில்எஸ்.எஸ்..,திட்ட இயக்குனர்நந்தகுமார்அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கைஅனைத்து தொடக்க,நடுநிலை பள்ளிகளிலும்மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்இந்தகூட்டத்தில்பள்ளியின் நிர்வாக பணிகள்அதற்காக பெற்ற நிதிசெலவு செய்த விபரங்களை ஆய்வு செய்யவேண்டும்பள்ளி செலவுக்குஅரசிடமும்மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில்எந்த முறைகேடும்இல்லாமல்பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.

 

பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில்பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளைபெற்றோருடன் பேசி,பள்ளிகளில் சேர்க்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் – CEO உத்தரவு!!

மதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும்.

வாரந்தோறும் குடிநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் பதுங்கியிருக்கிறதா ‘ஏடிஸ்’? இங்குதான் உருவாகிறதா ‘டெங்கு!’?

மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வீடுகள், அரசு கட்டடங்கள் என சல்லடை போட்டு, டெங்கு பிறப்பிடத்தை தேடும் மாவட்ட சுகாதாரத்துறை, ஒரு முக்கியமானஇடத்தை சவுகரியமாக மறந்து விட்டது. அந்த இடம்…பள்ளிகள்!

 

போதிய பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் பள்ளிகளில் உருவாகும் ‘ஏடிஸ்’ கொசுக்கள், வகுப்பறைகளில் உள்ள மேஜை, இருக்கைகளை மறைவிடமாக கொண்டு, குழந்தைகளுக்கு நோயை பரப்பி வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவல் சேகரிப்பில், பள்ளியில் இருந்தே பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலுடன் வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ‘டெங்கு’ பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களில் திரண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள், கோவை மண்டலத்தில் அதிகமாக உள்ளது.கடந்த நான்கு மாதங்களில், வைரஸ் காய்ச்சலுக்கு, 15 ஆயிரம் பேரும், டெங்கு காய்ச்சலுக்கு, 7,500 பேரும், பன்றி காய்ச்சலுக்கு, 27 பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த காய்ச்சல்களால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால், நோய் தாக்குதல் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே, டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தி சூழலை, உருவாக்குபவர்களுக்கு சுகாதாரத் துறை அபராதம் விதித்து வருகிறது.பெரும்பாலும், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளே, எளிதில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

அதிலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்கு காய்ச்சல் இருப்பது, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பல பள்ளிகளில் பயன்படுத்தாத பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை, வகுப்பறையின் ஓர் பகுதியிலோ, அல்லது பள்ளியின் வெளியே அமைந்துள்ள காலியிடங்களிலோ போட்டு வைக்கின்றனர். இருட்டான இந்த அறைகள், கொசுக்களின் இருப்பிடமாக மாறி விடுகிறது.

பள்ளியின் வெளியே குவிக்கப்பட்டுள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில், மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியிடமாக மாறி விடுகிறது.மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள், பெரும்பாலும் வெளிச்சமின்றி காணப்படுவதால், டெங்கு கொசுக்கள் மாணவர்களின் கை, கால்களில் கடித்து நோயை பரப்புகின்றன. பள்ளி நிர்வாகங்களின் போதிய பராமரிப்பின்மையும், அலட்சியமும் நோய் காரணிகளாக அமைகின்றன. கொசுக்கடி வாங்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் தீவிரமடைகிறது.

இப்படி, நோய் தாக்குதல் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களோ, நிர்வாகிகளோ கண்டுகொள்ளாமலே உள்ளனர்.

இது போன்ற கல்வி நிறுவனங்களால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. எனவே, வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தும் சுகாதாரத் துறையினர் பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும்.

பள்ளிகளுக்கு உத்தரவிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், டெங்கு கொசு உற்பத்திக்கு சாதகமான சூழல் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கவும் கல்வி அதிகாரிகள் தயங்கக்கூடாது. அப்போதுதான் குழந்தைகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வீடுகளில், ஆய்வு நடத்தி வருகிறோம். இதில், பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போதே, குழந்தைகள் காய்ச்சலுடன் வந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது, வீடு, நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், கல்வி நிறுவனங்களில் ஆய்வில் இறங்குவோம்’ என்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில்,”பள்ளிகளில் பயன்படுத்தாத கழிவறைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்களிடம் வலியுறுத்துவதுடன், பள்ளிகளுக்கு ‘மெயிலும்’ அனுப்பி வருகிறோம். ஒவ்வொரு, புதன், வியாழக்கிழமைகளில் இப்பணிகள் நடந்து வருகிறது. ”வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியர்கள், இது குறித்து அறிக்கையும் அனுப்பி வருகின்றனர். தொடர்ச்சியாக பள்ளிகளில் ஆய்வும் நடத்தி வருகிறோம்,” என்றார்.

இருண்ட பள்ளிகளில்வெளிச்சம் பரவட்டும்!டில்லி போன்ற வட மாநிலங்களில், மழை மற்றும் நோய் பரவும் காலங்களில் பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டையும், ஸ்கர்ட், டிரவுசர் அணிபவர்கள், பேன்ட்டும் அணிந்து கொள்வர். இதனால், கொசுக்கடி பாதிப்பு தடுக்கப்படுகிறது.

இதுபோன்ற பாதுகாப்பு முறைகளை, தமிழகத்திலும் கொண்டு வந்தால், குழந்தைகள் மரணத்தை கட்டுப்படுத்தலாம். பெற்றோர் இதில் கவனமாக செயல்பட வேண்டும். இதே போல், அனைத்து வகுப்பறைகளிலும் மின் இணைப்பு ஏற்படுத்தி, விளக்குகள் அமைத்தும், கொசுக்கள் கூடாரமிடுவதை தடுக்கலாம்.

அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு,
பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது. இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ‘எலைட்’ சிறப்பு பயிற்சி திட்டம், ‘பெஸ்ட்’ மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வுஅட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!!!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி

நிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது. அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.

தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.

இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10,12-ம் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ முறையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் உத்தரவு அமலுக்கு வரும் என அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ சுற்றிக்கை அனுப்பியுள்ளது

மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆதார் இல்லாதவர்கள் ஆதார் அட்டை எடுக்க விண்ணப்பித்த எண்ணை ஆன்லைனில் பதிவேற்றலாம்.