பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில்சிறப்பு கவனம் செலுத்தும்படிஅதிகாரிகளுக்கு,அமைச்சர்

செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்இதையொட்டிபொது தேர்வு எழுத உள்ளவர்களுக்குசனிஞாயிறுகளில்மாலை நேர சிறப்புவகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 1 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற,அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும்அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்குமுன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

‘நீட்’ தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

நீட்‘ தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்குபள்ளிக்கல்வி இயக்குனர்

வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.

 

 

 

 

3,௦௦௦ ஆசிரியர்கள்

 

 

 

நீட்‘ தேர்வால்தமிழக அரசு பள்ளி மாணவர்கள்மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாககல்வியாளர்களும்சமூகஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்இதன் அடிப்படையில்தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்‘ நுழைவு தேர்வுக்கான சிறப்புபயிற்சியைபள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.

இந்தபயிற்சிநவம்பரில் துவங்கப்பட உள்ளதுஇதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள்ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்புஅகாடமியில்சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

 

 

 

வழிகாட்டுதல்கள்

 

 

 

பின்தமிழக மாணவர்களுக்கு, ‘நீட்‘ மற்றும் ஜே..., தேர்வில் தேர்ச்சி பெறசிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில்நுழைவுதேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களைஆன் – லைனில் பதிவு செய்யபுதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்ஒரு வாரத்திற்கு முன்இணையதளத்தை துவக்கினார்இதையடுத்து,பதிவு செய்வதற்கானவழிகாட்டுதல்களைபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள்நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம்தமிழகத்தில்,412மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதுபயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

 

மாணவர்கள்தலைமை ஆசிரியர்கள் வழியாகhttp://tnschools.gov.in என்றஇணையதளத்தில்தங்கள் விபரங்களை பதிவு செய்யவேண்டும்இதற்குமாணவர்களுக்கு வழங்கப்பட்டஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.

 

பதிவுக்கு பின்ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும்வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம்பயிற்சிதுவங்கும் நாள்நேரம் பின் அறிவிக்கப்படும் எனஇயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

இரண்டு அரையாண்டு தேர்வு

 

 

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில்சிறப்பு கவனம் செலுத்தும்படிஅதிகாரிகளுக்கு,அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார்இதையொட்டிபொது தேர்வு எழுத உள்ளவர்களுக்குசனிஞாயிறுகளில்மாலை நேரசிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

 

இந்நிலையில், 10ம் வகுப்புபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்பொது தேர்வுகளில்தனியார் மாணவர்களுக்கு நிகராகமதிப்பெண் பெற,அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர்இதற்காகஅரசு பள்ளி மாணவர்களுக்குடிசம்பரில் நடக்கும்அரையாண்டு தேர்வுக்கு முன்மாதிரி அரையாண்டு தேர்வு நடத்தபள்ளிக்கல்வி இயக்குனர்இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்அதற்குமுன்தேர்வுக்கான பாடங்களை முடித்துமாணவர்களை தயார் செய்யும்படிதலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

NEET – 2018 | ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

Posted: 15 Oct 2017 04:41 PM PDT

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது.

 

 

மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.

மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.

 

தமிழ் கட்டாயம் : இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

பாதி பேர் பெண்கள்.

பள்ளியில் காப்பீடு அமைச்சர் தகவல்

திருச்சி: புதுக்கோட்டையில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார்.

 

 

திருச்சியில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது.

 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தயார்…! மத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள்…

தகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின், திறந்தவெளி படிப்பில் சேர்ந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

 

 

மத்திய,அரசின்,தகுதிப்,படிப்பில்,சேர 15 லட்சம்,ஆசிரியர்கள், தயார்…!

 

மத்திய மற்றும் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2010 ஏப்ரலில் அமலானது. இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தர விடப்பட்டது. இதற்காக,2014 வரை, ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தகுதி பெறவில்லை.

 

இதையடுத்து, ஐந்து ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கி, ‘ஆசிரியராக பணிபுரிவோர்,

 

2019 மார்ச், 31 க்குள், ‘டெட்’ தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது, 1 – 5ம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

 

எட்டாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண் எடுத்திருப்பதுடன், பட்டப்படிப்பு, பி.எட்., முடித்து, ‘டெட்’ தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த கட்டுப்பாடுகளின்படி, பல ஆசிரியர்கள் தகுதி பெறாததால், பெரும்பாலான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசிடம், பல்வேறு அமைப்புகள் மனு அளித்தன.அவற்றை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிசீலித்து, சலுகை திட்டம் ஒன்றை, கடந்த மாதம் அறிவித்தது.

 

அதன்படி, ‘பிளஸ் 2 வில், 50 சதவீத மதிப்பெண்ணும் எடுக்காமல், ‘டெட்’ தேர்விலும் தேர்ச்சி பெறாத வர்கள், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசியதிறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு, டிப்ளமா கல்வியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்’ என, சலுகை வழங்கப்பட்டது.ஆனால், ‘சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்’ என்றும், மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, கடந்த மாதம், ‘ஆன் – லைன்’ பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக, பீஹாரில், 2.85 லட்சம் ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

ம.பி., 1.90 லட்சம்; உ.பி., 1.95 லட்சம்; மேற்கு வங்கம், 1.69 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசின் படிப்பில் சேர விண்ணப்பித்து உள்ளனர். ஆந்திரா, 8000; தெலுங்கானா, 17 ஆயிரத்து, 8௦௦ மற்றும் கேரளாவில், 831 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அனைத்து பள்ளியிலும் இணையதள சேவை சாத்தியமாகுமா அமைச்சரின் அறிவிப்பு?

கோவை: அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என்ற, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு, சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில்,

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும், தலா மூன்று கம்ப்யூட்டர்கள்வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 80 சதவீத கம்ப்யூட்டர்கள் பழுதாகியிருப்பதால், இ-வேஸ்ட்டாக மாற்றும் பணிகள்நடக்கின்றன. இப்பள்ளிகளுக்கு, அலுவலக பயன்பாட்டுக்கு கூட கம்ப்யூட்டர்கள் இல்லை. தொடக்கப் பள்ளிகளுக்கு, அரசால்இதுவரை கம்ப்யூட்டர்களே வினியோகிக்கப்படவில்லை. தன்னார்வ அமைப்புகளின் உதவியால், இவ்வசதி சில பள்ளிகளில்மட்டுமே ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.மலை கிராம பள்ளிகளுக்கு, லேண்ட்லைன் இணைப்பு இல்லாததால், தனியார் பிரவுசிங்சென்டர்களில் தான், கல்விசார் கோப்புகள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. எந்த மாவட்டத்திலும், அனைத்துபள்ளிகளுக்கும் முழுமையாக கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்படவில்லை.இந்நிலையில், ‘இம்மாத இறுதிக்குள், அனைத்துஅரசுப்பள்ளிகளுக்கும் இணையதள சேவை வசதி ஏற்படுத்தி தரப்படும்’ என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.நடைமுறையில் சாத்தியப்படாத இதுபோன்ற பல திட்டங்கள், வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்படுவதாக,ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘பள்ளிக் கல்வித் துறை சார்பில்அறிவிக்கப்படும் பல திட்டங்கள், சில பள்ளிகளோடு முடங்கிவிடுகின்றன. மாவட்டத்திற்கு தலா, 10 பள்ளிகளை தேர்வுசெய்து, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இது, கிராம, மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்குவிரிவடையாததால், அனைத்து மாணவர்களும் பலனடைய முடிவதில்லை.’தற்போது, அனைத்து பள்ளிகளுக்கும் இணையதளசேவை ஏற்படுத்தி தரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அலுவலக பயன்பாட்டுக்கு, தரமான கம்ப்யூட்டர்கள் அளித்தபின், இவ்வசதியை ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

மௌலானா கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மவுலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற அழைப்பு பெற மாணவரர்களு தர்மபுரி கலெகடர் அறிவித்துள்ளார்.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்களுக்கான மௌனா ஆஷாத் கல்வி

உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . இவ்வாண்டுக்கான கல்வி உதவித்தொகையை விண்ணப்பித்துபெறலாம் . ஒனபது , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பது முதல் 10ஆம் வகுப்பு வரை குறைந்த பட்சம் 55%மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும் . பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் .

 

மௌலானா ஆஷாத் கல்வி உதவித்தொகையை பெற தகுதியுடைய மாணவியர்அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க இணையதள முகவரியை இணைத்துள்ளோம்.  இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் கையெப்பம் பெற்றிருக்க வேண்டும் .

 

மேலும் இக்கல்வித்தொகையை பெற குடும்ப வருமாணம் இரண்டு லட்சதுக்குள் இருக்க வேண்டும். வருமான சான்றிதழில் தாசில்தார் கையெப்பம் அத்துடன் இருப்பிட சான்றிதழ் மேலும் பள்ளியில் தலைமையாசிரியர் அல்லது முதல்வரின் கையெழுத்து பெற்று புகைப்படம் அத்துடன் சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழ் இணைத்து வங்கிகணக்கு விவரம் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 10,000 தொகை பெறலாம் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூபாய் 12000 தொகை இரு தவணையாக அளிக்கப்படும்.

 

விண்ணப்பத்துடன் உரிய தகவலை இணைத்து  மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து நிரப்பியவற்றை அனுப்ப வேண்டிய முகவரி மௌலானா ஆஷாத் கல்வி அறக்கட்டளை, மௌலானா ஆஷாத வளாகம், செம்ஸ்போர்டு சாலை, ரயில்வே முன்பதிவு மையம் எதிரில் . புதுடெல்லி 110055 என்ற முகவரி அனுப்ப வேண்டும் குறைந்தபட்சம் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைந்து இருக்க வேண்டும்.

தூய்மை பள்ளி ! விருதுக்கு விண்ணப்பிக்க தயக்கம்

துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தினர் தயங்குகின்றனர்.மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு முதல், பள்ளிகளுக்கு ‘துாய்மை பள்ளி’ விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

இதில், துவக்கம் முதல், மேல்நிலை வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சுற்றுப்புற துாய்மை, அங்கு படிக்கும் குழந்தைகளின் சுய சுத்தம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரித்தல், தரமான வகையில் உணவுகளை தயாரித்தல், குப்பைகளை அப்புறப்படுத்துதல், வளர் இளம் பருவ குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் ஆய்வு செய்து, அதில் தரமுள்ள பள்ளிக்கு துாய்மை பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டிலும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்கள்

நடப்பாண்டில், கூடுதலாக, குழந்தைகள், கழிப்பறைகளை பயன்படுத்திவிட்டு கை,கால் கழுவுதல், அங்கு பயன்படுத்துவதற்கான தண்ணீர் குழாய்களிலிருந்து வருகிறதா அல்லது, தேக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும், புகைப்படங்கள் எடுத்து அனுப்ப, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், துாய்மை பள்ளியை தேர்ந்தெடுப்பதில், இதுபோல் கூடுதல் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஆனால், இவை அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளில், பராமரிப்பு பதிவுக்கான கண்துடைப்பாக மட்டுமே உள்ளது. பல கிராமப்புற பள்ளிகளில், அதிலும், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், துப்புரவு பணியாளர் என ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்களாவர்.

திட்டம் துவக்கப்பட்டு, இரண்டாண்டுகளாகியும், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. குறைந்தபட்சமாக, 750 முதல் அதிக பட்சமாக 2,500 ரூபாய் வரை மட்டுமே துவக்கம் முதல் மேல்நிலை வரை, தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. துவக்கத்தில், மாதந்தோறும் பணிசெய்த பணியாளர்கள் இப்போது, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, சில நாட்களில் ஒரு வாரத்துக்கு மேலாகியும் வராமல் போவது என உள்ளனர்.

தயக்கம் தீரவில்லை

மேலும், போதியளவு ஊதியம் இல்லாததால், கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இடையூறு செய்கின்றனர். இப்பிரச்னையால், இன்றைய நிலையில், பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில் சுற்றுப்புற துாய்மை ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், இப்போது விருதுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இருக்கும் உண்மை நிலையை பதிவு செய்ய தயங்குகின்றனர். இம்முறை, விருதுக்கான ஆன்-லைன் பதிவில், நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என நன்று, பரவாயில்லை, மோசம், மிகமோசம் என நான்கு நிலைகளை, பதிவிடப்படும் விபரங்களைக்கொண்டு, கணிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறங்களைக்கொண்டு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் உள்ள குழு பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தவும் தயாராக உள்ளன. பல பள்ளிகளில் பதிவுக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகள், உண்மை நிலைக்கு நேர்மாறாய் உள்ளது. இருப்பினும், வேறுவழியின்றி, விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் பதிவிட்டுள்ளன.

எந்த பலனுமில்லை

ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,

‘ துப்புரவு பணியாளர்களுக்கு, ஊதியம் கூடுதலாக வழங்கினால் மட்டுமே, முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியும். ஆசிரியர்களின் முயற்சியால், தற்காலிக பணியாளர்களை நியமித்தாலும், அவர்களும் தொடர்ந்து வருவதில்லை. இந்நிலையில், பள்ளி நிர்வாகங்கள் என்ன செய்ய முடியும். முடிந்தவரை, துாய்மைக்கான வழிகளை மேற்கொண்டுதான் இருக்கிறோம். துப்புரவு பணிகளுக்கான வசதிகளை செய்யாமல், துாய்மை குறித்து பதிவுகளை கேட்பதில் எந்த பலனுமில்லை,’ என்றார்.