850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி

”60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது,” என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:மாநில அளவில் 125 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ., க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலை பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையிலும் உள்ளது.

சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.ஆங்கில வழிக் கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவு தலைமை ஆசிரியர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும் பணியில் பாடங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு பட்டியல் விபரத்தை வெளியிட வேண்டும். இக்குழுவில் தகுதி, திறமை, அனுபவமில்லாத ஆசிரியர் சிலர் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்த நிலையிலும் நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும், வெளிப்படையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.பொதுச் செயலர் நடராஜன் உடன் இருந்தார்.

கிராமப்புற பள்ளிகளை சென்றடையாத ஆக்கப்பூர்வ திட்டங்கள் !!

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களும், நகர்புறங்களில் உள்ள, சில முன்மாதிரி அரசுப் பள்ளிகளிலே அமல்படுத்துவதால், கிராமப்புற பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,650 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கற்றல், கற்பித்தல் திட்டங்களுக்கு, பல லட்சங்கள் நிதியாக, ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.’விருட்சுவல் கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புகள் முதல், இலவச கராத்தே பயிற்சி, புதிய வகை விளையாட்டுகள் அறிமுகம் என, பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முன், சோதனை முறையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசுப் பள்ளிகளில் மட்டும், அறிமுகம் செய்யப்படும். இதற்கு,சில அரசுப்பள்ளிகளின் பெயர்களே, எப்போதும் சிபாரிசு செய்வது வழக்கமாகிவிட்டது.இத்திட்டங்கள், பிற பள்ளிகளுக்கு விஸ்தரிக்காமல் சுணங்கிவிடுவதால், குறிப்பிட்ட பள்ளி மாணவர்களே, பயனடையும் நிலை தொடர்கிறது.கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ’கோவையில், கல்வித்துறை முன்மாதிரி திட்டங்கள் அனைத்தும், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு அளிப்பதால், அங்குள்ள மாணவர்கள் மட்டுமே, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுகின்றனர். சிறந்த பள்ளிகளுக்கான விருதையும் தக்கவைத்து கொள்கின்றனர்.

தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புக்கு, கைமாறாக இதுபோன்ற செயல்கள் நடப்பதால், பின்தங்கிய கிராமப்புற பள்ளிகளின் நிலை, படுமோசமாக மாறிவருகிறது.’நகர்புற பள்ளிகளுக்கு இணையாக, கிராமப்புற பள்ளிகளுக்கும், முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தினால் மட்டுமே, மாணவர்களின் தொடர்பு திறனை வளர்த்தெடுக்க முடியும்.எனவே, இனிவரும் காலங்களிலாவது, அரசின் புதிய கல்வித்திட்டங்கள் செயல்படுத்த, கிராமப்புற பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதேபோல்

 

பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும் வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள் கருத்து கூறலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

EMIS – முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?

EMIS – முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய

முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

 

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது

 

SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,

 

  1. Go to School Profile

 

  1. Class-Wise no of Sections .

 

  1. Add class And Section Details

 

  1. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

 

பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.

புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது

1.go to student

  1. create new child list

பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.

 

தேவைப்படும் முக்கிய விவரங்கள் 

 

1.மாணவரின் தொலைபேசி எண்

2.மாணவன் சேர்ந்த தேதி

3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற  முடியாது)

 

4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தர வேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)

5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாக காண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்

  1. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை

7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இரு நபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்

  1. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)
  2. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண், செக்‌ஷன், மீடியம்(பயிற்று மொழி) முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்

STUDY MATERIALS……… வியாழன் தோறும் பள்ளிகளில் ‘டெங்கு’ விழிப்புணர்வுக்கு உத்தரவு Posted: 04 Oct 2017 04:31 PM PDT சென்னை: வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்  டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்  உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்  நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., – தேசிய மாணவர் படையான, என்.சி.சி., – இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்  மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

 

பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 

l பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

l டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்

l டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்

l உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்

l நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., – தேசிய மாணவர் படையான, என்.சி.சி., – இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்

l மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : பள்ளி மாணவர்களுக்கு போட்டி

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ் மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 

விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ – மாணவியர், பள்ளி தலைமை ஆசிரியரிடம், உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று, போட்டி நடக்கும் நாளில், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை அல்லது உதவி இயக்குனரிடம் அளிக்க வேண்டும்.

 

போட்டிக்கான தலைப்பு, போட்டி துவங்கும் போது அறிவிக்கப்படும். போட்டி முடிவுகளும், அன்றே அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

90 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சம் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையால், விரைவில், மருத்துவ விபத்து காப்பீடு வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், விபத்து மற்றும் இயற்கை பேரிடர்நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது, உரிய சிகிச்சை கிடைப்பது சிக்கலாக உள்ளது. பலர், ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.

எனவே, மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், 9௦ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை, இலவசமாக மருத்துவ விபத்து காப்பீடு வழங்கவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, விபத்து காப்பீடு பதிவு செய்யப்பட உள்ளது.இதற்கான பணிகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் துவங்கி உள்ளது. இரு மாதங்களில், விபத்து காப்பீடுக்கான தனியார் நிறுவனத்தை இறுதி செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! – செங்கோட்டையன் தகவல்

திருச்சியை அடுத்த முசிறி அருகில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளைத்

தொடங்கிவைக்க தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம்திருச்சி வந்தார்பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகுப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது

 

 

அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது.  முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள்குறித்து  15 நாள்கள் பெற்றோர்கள்கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும்இந்தக் கருத்துகளின் அடிப்படையில்அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளைஎதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும்மேலும்அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும்மாணவமாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்அதில் மாணவர்களின் ஆதார் எண்ரத்த வகை குறிப்பிடப்படும்.பள்ளி மாணவர்கள்டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

’எமிஸ்’ இணையதளத்தில் இரட்டை எண்கள்!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில்ஒரு மாணவருக்குஇரு பதிவு எண்கள், ’அப்டேட்’ ஆகியிருப்பதால்,எதை ஆவணங்களில்

பின்பற்றுவது என தெரியாமல்தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

 

பள்ளி மாணவர்களின் தகவல்கள் திரட்டபள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்உருவாக்கப்பட்டது.இதில், 2012 முதல்தகவல்கள் பதிவேற்றியும்தொழில்நுட்ப குளறுபடிகளால்தொகுப்பதில் சிக்கல் நீடித்தது.

 

 

 

கடந்தாண்டில்பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்குநாமினல் ரோல் எனப்படும் பொதுத்தேர்வு எண்எமிஸ்இணையதள தகவல் அடிப்படையிலே வழங்கப்பட்டன.

 

 

இத்தகவல் தொகுப்பை பயன்படுத்திஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ’ஸ்மார்ட் கார்டு’ வழங்கவும்முடிவுசெய்யப்பட்டுள்ளதுஎனவேபுதிய மேம்படுத்தப்பட்ட இணையப் பக்கம் உருவாக்கும் பணிகள் சமீபத்தில் நடந்தன.

 

 

இதுகுறித்து அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும்சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டதுதலைமையாசிரியர்களுக்கு,எமிஸ் இணையதளத்தை பயன்படுத்தும் முறைகுறித்து தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டதுஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளும்ஒரே நேரத்தில்தகவல்களை உள்ளீடு செய்ததால்இணையதளம் முடங்கியது.

 

 

தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ’மாணவர்களின் பெயர்வகுப்புமுகவரிரத்த வகை முதற்கொண்டு, 40க்கும்மேற்பட்ட தகவல்களைஎமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்துபிரத்யேக எண் பெறப்பட்டது.

 

 

நடப்பாண்டில்புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமேஎமிஸ் எண் உருவாக்க வேண்டும். ’இத்தகவல்களை,புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் உள்ளீடு செய்த போதுமற்றொரு அடையாள எண் உருவாகியுள்ளதுஇதில் எதைகல்வி ஆவணங்களில் பின்பற்றுவது என தெரியவில்லை.

 

 

 

சர்வர் முடங்கியிருப்பதால்வரும் 4ம் தேதிக்கு பின்தகவல்களை இணைக்கலாம் எனமட்டுமேகல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்இரட்டை பதிவு எண் குறித்துதெளிவான விளக்கம் அளிக்கவில்லை’ என்றனர்

பள்ளி மாணவர்களுக்கு “தொடுவானம்” திட்டம் 16ம் தேதி தொடக்கம்

அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித்திட்டத்துக்கு ‘தொடுவானம்

என்று பெயரிடப்பட்டுள்ளதுஇந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

 

 

 மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழக பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில்பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளதுஇவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் வேகமாகநடக்கிறதுமுதற்கட்டமாக 250 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

 

 

இவற்றின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதுஇந்த திட்டம் வரும் 16ம் தேதிதமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளதுஇதற்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில்வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்