பள்ளி மாணவர்களுக்கு “தொடுவானம்” திட்டம் 16ம் தேதி தொடக்கம்

அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சித்திட்டத்துக்கு ‘தொடுவானம்’

என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி திட்டம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

 

 

 மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழக பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையில்பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் வேகமாகநடக்கிறது. முதற்கட்டமாக 250 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

 

 

இவற்றின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் 16ம் தேதிதமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. இதற்கு ‘தொடுவானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில், வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசுபள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவதுஎன்பது குறித்த கையேட்டினை

ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.

 

 

 

 அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தவேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.

 

இதுகுறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்தபுதிய பாடத்திட்டத்தின் படி இனிஎப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். புதிய பாடத் திட்டங்களுக்குமாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பதுஉள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்த ெதரிவித்தார்.

 

மேலும், ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும், பாடங்கள் வாரியாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம்நடத்தும் கையேடு தரப்படும். இதன் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களைமாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறது. இந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும்ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.

 

பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச்செய்யும் விதத்தில் கையேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்திவிட்டுசெல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம் நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்.அவ்வாறு செய்வது எப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.

 

 

2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்பு தயாராகிவிடும். அதன்பின், அனைத்து அரசுபள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவது, தங்களை எப்படி தயார் செய்துகொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும். அப்போது இந்த கையேடுகள்தரப்படும். இந்த கையோடுகள்கல்வித்துறையில் வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில்மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும், பல்வேறு நவீன, புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.

வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம்

திருச்சி: ”வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய

பாடத்திட்டம் இருக்கும்,” என, கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை, வருங்காலமாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும். எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும்.

 

தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின், பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால், நவம்பர், 15ம் தேதி அதற்கான முன் வரைவுவெளியிடப்பட்டு, 15 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துக்கள்கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

 

மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிஅளிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும், ‘ஸ்மார்ட்‘ வகுப்புகள் துவங்கும் திட்டமும்அடுத்த மாதம் துவங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

தொலைதூர கல்வி மையங்கள் தரும் பட்டம் செல்லாது!

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி மையங்களில் தரப்படும் பட்டம் எதுவும் செல்லாது என்று,ஐகோர்ட்டில்பல்கலை மானியக்குழு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; இதனால், இந்தமையங்களில் படித்துள்ள

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தின் எல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியபகுதியாகும். இப்பகுதிகளில் உள்ள உறுப்புக் கல்லுாரிகள் மற்றும் இணைப்புக் கல்லுாரிகளுக்கு மட்டுமே, பல்கலையால்அங்கீகாரம் தர முடியும். அதேபோன்று, இந்த எல்லையில் மட்டுமே, தொலைதுார கல்வி மையங்களை நடத்த வேண்டும்.

 

ஆனால், பாரதியார் பல்கலை நிர்வாகம், சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) எனபல்வேறு பெயர்களில், ‘எல்லை மீறி‘ தொலைதுார கல்வி மையங்களை, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதைத்தடுப்பதற்கு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

 

380 கல்வி மையங்கள்

 

இதனால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களைத் துவக்க,பாரதியார் பல்கலை அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டுமின்றி, மெடிக்கல்கவுன்சில், பார்மசி கவுன்சில் மட்டுமே அனுமதி தரக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு, பட்டம் மற்றும்பட்டயங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

 

வெறும் பத்துக்குப் பத்தடி அளவிலுள்ள கட்டடங்களில் செயல்படும் இந்த மையங்களால், முறையாக வகுப்புகள்நடத்தப்படுவதில்லை; வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே வந்தால் போதுமென்று விளம்பரம் தரப்படுவதால், ஏராளமானமாணவர்கள் இதில் சேர்கின்றனர். இவர்களின் விடைத்தாள்களும், பெயரளவில் திருத்தப்பட்டு, தேர்ச்சி தரப்பட்டு, பாரதியார்பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன.

 

அதேநேரத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பணத்தையும், பல ஆண்டுகளையும் செலவழித்து, கஷ்டப்பட்டுபடித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இதன் காரணமாக, கல்லுாரிகளை விடுத்து,இந்த மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் பெறப்படும் கலை அறிவியல்படிப்புகளுக்கான பட்டத்துக்கு, எந்த மதிப்புமே இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது.

 

இதைக் கண்டித்து, பல முறை மனுப்போர் நடத்தியும் பலனில்லாமல் போனதால், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல்கல்லுாரிகள் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாரதியார் பல்கலை பதிவாளர், பல்கலைமானியக்குழு செயலர், தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர்ஆகியோர், இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

தொலைதுார கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரும் இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், பல்கலை மானியக் குழு சார்பில், அதன் கல்வி அலுவலர் மேகா கவுசிக், சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரம், பாரதியார் பல்கலையின் அத்தனை அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலை மானியக்குழுவின் விதிகளின் படியே செயல்பட வேண்டும்என்பதற்கான பல்வேறு சட்டப்பூர்வமான தரவுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த மனு. பாரதியார் பல்கலை எந்தசட்டத்தையும், விதியையும், சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மதிக்கவே இல்லை என்பதையும் பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது.

 

பேராசிரியர் யஷ்பால், சட்டீஸ்கர் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் மீது, 2005ல் சுப்ரீம் கோர்ட் அளித்தஉத்தரவின்படி, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மையங்களுடன் இணைந்து உரிமம் அடிப்படையில் தொலைதுார கல்விமையங்களை நடத்தக்கூடாது என்பதை பாரதியார் பல்கலைமீறியுள்ளதை இந்த மனு, பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

 

 

எல்லை மீறல்

 

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில முக்கிய அம்சங்கள்:கோவை பாரதியார் பல்கலை, அதன் எல்லைக்குட்பட்டகோவை, நீலகிரி மற்றும் ஈரோடு (திருப்பூர் மாவட்டத்தையும் உள்ளடக்கியது) மாவட்டங்களில் தொலைதுார கல்விமையங்களை நடத்தலாம். ஆனால், எல்லையைத் தாண்டி, மையங்களை நடத்தி வருகிறது.

 

பல்கலைக்கழகங்களுக்கான எல்லைகள், தனியார் மையங்களுடன் இணைந்து தொலைதுாரக் கல்வி மையங்களை நடத்துவதுதொடர்பாக, பல்கலை மானியக்குழு சார்பில் 2001 ஆக.,9 அன்று, விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதைபல்கலை நிர்வாகம் மதிக்கவே இல்லை.

பல்கலை மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பல்கலை வளாகத்திலும், அதன்எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளிலும் ‘கோர்ஸ்‘களை நடத்தி, பட்டங்களை வழங்கலாம்.

 

வேறுதனியார் மையங்களுடன் இணைந்து,கல்வி மையங்களை நடத்துவதாக இருந்தால், அதற்கு பல்கலை மானியக்குழுவிடம்முன் அனுமதி பெறுவது அவசியம்.பல்கலை மானியக்குழு சார்பில், 2009 ஜூன் 15 அன்று, நாடு முழுவதும் உள்ள மாநிலபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, ‘தங்களதுபல்கலை எல்லையைத் தாண்டிய பகுதியில், இணைப்புக் கல்லுாரிகள், வளாக மையம், கல்வி மையம் போன்றவற்றைநடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.

 

2016 மே 4 அன்று, அனைத்து மாநில உயர் கல்வித்துறை செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவைஅமல்படுத்தும் வகையில், மாநில அரசின் சட்டங்களில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; மாநில எல்லையைத்தாண்டி, பல்கலைகள் நடத்தும் கல்வி மையங்களை உடனே நிறுத்த வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிலபல்கலைக்கழகங்கள், தங்களது எல்லையைத் தாண்டி, இத்தகைய மையங்களை நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், அந்தந்த பல்கலைச் சட்ட விதிகள் அனுமதித்த பகுதிகளில், பல்கலைமானியக்குழுவின் முன் அனுமதி பெற்ற பின்பே, எந்த பாடப்பிரிவையும் நடத்த வேண்டும்.

 

 

பட்டம் செல்லாது

 

ஆனால், பாரதியார் பல்கலைக்கழகம், பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாகவும், அகில இந்திய தொழில் நுட்பகவுன்சில், இந்திய மெடிக்கல் கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் உள்ளிட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அமைப்புகள்எதிலும் அனுமதி பெறாமலும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை,சட்டவிரோதமாக தொலைதுார கல்வி மையங்களால் நடத்தப்படுகிறது.

 

பல்கலையின் பெயர் மற்றும் ‘லோகோ‘வுடன், இந்த மையங்கள் விளம்பரங்கள் வெளியிடுவதால், பொது மக்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும், இந்த மையங்களை நம்புகின்றனர். இந்த மையங்கள் அனைத்தும், சட்டத்துக்குவிரோதமாகவும், பல்கலை மானியக்குழு விதிகளை மீறியும், சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் அனுமதியின்றியும்நடத்தப்படுவதால், இந்த மையங்களில் படித்து வாங்கிய பட்டம், சட்டப்படி செல்லாது.

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள், பல்கலை மானியக்குழு மற்றும் சட்டப்பூர்வ அங்கீகார அமைப்புகளின் பலவிதமானஎச்சரிக்கைகள், கடிதங்கள், இணையங்களில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல், இந்தமையங்களை பாரதியார் பல்கலை நடத்தி வருகிறது.

 

இத்தகைய சட்டவிரோத மையங்களில் படித்துள்ள ஏராளமான மாணவர்கள், தங்கள் வாழ்க்கையின் பல ஆண்டுகளையும்,பணத்தையும் இழந்துள்ளனர். எனவே, பல்கலை மானியக்குழு சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துக்களின்அடிப்படையில், உரிய உத்தரவை வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்கலை மானியக்குழுவே, பகிரங்கமாக இந்த மையங்களை ‘இல்லீகல்‘ என்று கூறியுள்ளதோடு, இந்த மையங்களில் தரப்படும்பட்டங்கள் செல்லாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்த மையங்களில் படித்து பல ஆயிரம் மாணவர்கள் வாங்கிவைத்துள்ள பட்டத்திற்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பாரதியார் பல்கலைநிர்வாகம் மீறியுள்ளதாகவும் கூறியுள்ளதால், ஐகோர்ட் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

 

 

எந்தஆண்டு முதல்?

 

கல்வியாளர்கள் கூறுகையில், ‘பல்கலை மானியக்குழுவின் சுற்றறிக்கையின்படி பார்த்தால் கடந்த, 2001ம் ஆண்டுக்குப்பின்,பாரதியார் பல்கலையின் தொலை துாரக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லாது என்றே தெரிகிறது.இதுகுறித்து, மானியக்குழுதான், மாணவர்களின் நலன்கருதி வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட வேண்டும்‘என்றனர்.

 

 

ஏன்எதிர்க்கிறது சுயநிதி கல்லுாரிகள் சங்கம்?

 

கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க இயலாத கிராமத்து இளைஞர்கள், வேலைக்குச்செல்வோர், உயர் கல்விக்கு விரும்பும் ஏழைமாணவர்கள் என பல தரப்பினருக்கும் தொலைதுார கல்வி மையங்கள் உதவும்போது, அவற்றை ஏன் மூட வேண்டும் என்றுபலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மையங்களை அனுமதிக்கக்கூடாது என்று சட்டரீதியாகப் போராடும் தமிழ்நாடு சுயநிதிகல்லுாரிகள் சங்கம், இதற்குக் கூறும் காரணங்கள், யோசிக்க வைப்பவை.

* மாணவர்களிடம் ‘ரெகுலர் கோர்ஸ்‘ என்று இந்த மையங்கள் ஏமாற்றுகின்றன. ஆனால், இவை தொலைதுாரக் கல்வி என்பதுமட்டுமில்லாது, இந்த மையங்களுக்கு பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரமே கிடையாது.

* அரசாணை, முழு நேர ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், நுாலகம் உள்ளிட்ட கட்டமைப்பு எதுவும் இந்த மையங்களுக்கு இல்லை.

* கல்வி சார்ந்த அமைப்புகள், இந்த மையங்களை நடத்துவதில்லை என்பதால் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிறது.

* மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாது; பல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், 75 சதவீதத்துக்குக் குறைவானவருகை இருந்தால், ஒரு மாணவன் தேர்வு எழுத முடியாது.

* மையங்களில் நடக்கும் தேர்வு, முறையாகக் கண்காணிக்கப்படாததால், நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கானவிடைத்தாள் திருத்துவதும், மாலை 5:30 மணிக்குப் பின், முறையற்ற பணியாக நடக்கிறது.

* கஷ்டப்பட்டு கல்லுாரிக்குச்சென்று படிக்கும் மாணவனுக்கும், இத்தகைய மையங்களில் படிக்கும் மாணவனுக்கும் ஒரேமாதிரியான பட்டம் தரப்படுகிறது; அதில், எந்தவிதமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.

* இணைப்புக் கல்லுாரிகள் தராத அல்லது தர முடியாத ‘கோர்ஸ்‘களையும் இந்த ‘இல்லீகல்‘ மையங்களில் நடத்துகின்றனர்.

* வகுப்புகள் நடத்தாமல், செயல்முறைப் பயிற்சி அளிக்காமலே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர்.

* இந்த மையங்களால், பாரதியார் பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது; அந்த அவப்பெயர், இதன் இணைப்புக்கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கிறது; அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

 

அனுமதி அளித்தோரே பொறுப்பு!

 

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்: பாரதியார் பல்கலை, யு.ஜி.சி., உத்தரவை மீறி, எல்லை தாண்டி தொலைதுார கல்விமையங்கள் அமைத்து செயல்படுத்தி கொண்டிருப்பது, சட்டப்படி குற்றமாகும். கல்வியை வியாபாரமாக்கும் இம்முயற்சியால்,பாதிக்கப்படுவது மாணவ சமுதாயம் மட்டுமே. இதன்மூலம் கிடைத்த, கல்விச்சான்று செல்லாது என்ற நிலை வந்தால்,இம்மையங்களுக்கு அனுமதி அளித்தவர்களே, பொறுப்பேற்க வேண்டும். பதவி உயர்வு காரணங்களுக்காக, தொலைதுாரகல்வி முறையில் படித்தவர்களின் கல்விச்சான்றிதழ் செல்லாது என அறிவிக்கும் போது, தன்னெழுச்சியாக மாணவர்கள்திரண்டு போராடுவது அவசியம்.

 

நிதியை நிறுத்த வேண்டும்!

 

பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்: பாரதியார் பல்கலையின், அத்துமீறல் செயலை கட்டுப்படுத்த,தமிழக அரசாலும், யு.ஜி.சி.,யாலும் முடியும். பல்கலைக்கான நிதியை நிறுத்தி கண்டிப்பை வெளிப்படுத்த வேண்டிய, யு.ஜி.சி.,மவுனம் சாதிக்கிறது. தமிழக அரசுக்கு, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க, முழுஅதிகாரம் உண்டு. சிண்டிகேட்கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றினால், துணைவேந்தரால் எதுவும் செய்ய முடியாது. தொலைதுார கல்வி மையங்களால், ‘கரன்சி‘ கிடைப்பதால், தட்டி கேட்க வேண்டியவர்கள், வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர். எதற்கெல்லாமோ போராடும்மாணவ சமுதாயம், தனக்கான கல்வி

வியாபாரமாவதற்கு எதிராக, போராட முன்வர வேண்டும்.

 

அப்பட்டமான சட்டவிரோதம்

 

ஏ.எம்.எம்.கலீல், தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்: பல்கலை மானியக் குழுவே, இந்த மையங்கள்வேண்டாமென்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டது; அதன் பின்னும், இந்த மையங்களை பல்கலை நிர்வாகம் நடத்தஅனுமதிப்பதில் துளியும் நியாயமில்லை. இது அப்பட்டமான சட்டவிரோதமாகும். மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள்,பல்கலை மானியக்குழுவின் எச்சரிக்கை அத்தனையையும் மீறி, செல்லாத பட்டத்தைத் தருவதற்கு, இந்த மையங்களை பல்கலைநிர்வாகமே நடத்தினால், அந்த பல்கலைக்கும், போலி கல்வி நிறுவனத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

 

இப்போது, பல்கலை மானியக்குழுவே, இதை பகிரங்கமாகத் தெரிவித்திருப்பது, வரவேற்கத்தக்க விஷயம். பல்கலைமானியக்குழுவின் முடிவு, எங்களைக் கட்டுப்படுத்தாது என்று பாரதியார் பல்கலை நிர்வாகம் அறிவிக்கட்டும்; பார்க்கலாம்.இவ்வழக்கில், நீதி மன்றத்தில் நியாயமான முடிவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

 

சுண்டல் வியாபாரமானது கல்வி!

 

 

‘பாடம்‘ நாராயணன், சமூக ஆர்வலர்: பல ஆண்டுகளாக தொலைதுார கல்வி மையங்களில், மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழங்களுக்கு, இதுபோன்ற காரணங்களால் தான்,அவப்பெயர் ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலையே, பொறியியல் படிப்பை தொலைதுார கல்வியாக அறிவித்து பின்,திரும்ப பெற்றது. ஏனெனில், தொலைதுார கல்வியில், தனியார் பயிற்சி மையங்களோடு சேர்ந்து கூட்டு சதி நடக்கிறது. இதில்வரும் லஞ்சத்தில், துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பங்குண்டு. சுண்டல் வியாபாரம் போல, கல்வியைகூவி விற்பதாக இச்செயல்பாடு அமைந்துள்ளது.

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

30 ஆண்டுக்கு பின், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள், பிரகாசம்!
நாட்டின் பிரதமராக, ராஜிவ் இருந்த போது, 1986ல், தேசிய கல்வி கொள்கை உருவாக்க பட்டது. அனைத்து மாநிலங் களிலும், ஏழை, பழங்குடியின மாணவ — மாணவியர் தரமான கல்வி பெற, ஜவஹர் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட்டன. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில், இரண்டு பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது, 598 பள்ளிகள் செயல்படுகின்றன.
தேவை அதிகரிப்பு

நவோதயா பள்ளிகளில், ஹிந்தி கற்றுக் கொடுப்பதால், தமிழகத்தில் இப்பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால்,30ஆண்டுகளுக்கு பின், நவோதயா ,

பள்ளிகளுக்கான தேவை, தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

மேலும், சர்வதேச அளவில் வெளிநாட்டவரும் ஹிந்தியை திறம்பட பேசுவதால், இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, தமிழக மாணவர்களும் ஆர்வத்துடன் கற்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க கோரிகன்னியாகுமரி மகாசபையைச் சேர்ந்த, ஜெயக்குமார் தாமஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது, ‘நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்’ என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நவோதயா வித்யாலயா சமிதியின், புதுச்சேரி முதல்வர், வெங்கடேஸ்வரன் தரப்பில், ‘நவோதயா பள்ளி கொள்கைப்படி, மாநில மொழிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

‘தமிழகத்தில், நவோதயா பள்ளிகளை துவங்கினால், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் முதன்மை மொழியாகவும், பிளஸ் 1,

பிளஸ் 2வில் கூடுதல் மொழியாகவும் கற்றுத் தரப்படும்’ என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நவ., 20க்குள்:

மேலும், ‘மாவட்டம் தோறும், ஒரு பள்ளிக்கு, 30ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும். அதில், கட்டுமானம் மேற்கொண்டு, மத்திய அரசு பள்ளிகளை நடத்தும். இதற்காக மாவட்டத்துக்கு, 20கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்’ என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘நவோதயா பள்ளிகள் துவங்க, எட்டு வாரங்களுக்குள், தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழகபள்ளி கல்வியின் சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, நவ., 20க்குள், மாவட்டம் தோறும், ஒரு நவோதயா பள்ளி துவங்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.இதற்காக, அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிக்கவும்
ஆலோசனை நடந்து வருகிறது.

பள்ளிகளுக்கு தேவையான, 30 ஏக்கர் இடத்தை ஒதுக்கும் முன், தற்காலிக இடங்களை தேர்வு செய்து, வரும் கல்வி ஆண்டிலேயே, ஆறாம் வகுப்பை துவக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.ஹிந்தி எதிர்ப்பால் முடங்கிய நவோதயா கல்வி திட்டம், நீதிமன்ற தலையீட்டால், 30 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் துளிர்விடுவது பிரகாசமாகி உள்ளது.

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும் !!

  1. Anthropology – மானுடவியல்/ மானிடவியல்

    2. Archaeology – தொல்பொருளியல்

    3. Astrology – சோதிடவியல் (சோதிடம்)

    4. Astrology – வான்குறியியல்

    5. Bacteriology பற்றுயிரியல்

    6. Biology – உயிரியல்

    7. Biotechnology – உயிரித்தொழில்நுட்பவியல்

    6. Climatology – காலநிலையியல்

    7. Cosmology – பிரபஞ்சவியல்

    8. Criminology – குற்றவியல்

    9. Cytology – உயிரணுவியல்/ குழியவியல்

    10. Dendrology – மரவியல்

    11. Desmology – என்பிழையவியல்

    12. Dermatology – தோலியல்

    13. Ecology – உயிர்ச்சூழலியல்

    14. Embryology – முளையவியல்

    15. Entomology – பூச்சியியல்

    16. Epistemology – அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

    17. Eschatology – இறுதியியல்

    18. Ethnology – இனவியல்

    19. Ethology – விலங்கு நடத்தையியல்

    20. Etiology/ aetiology – நோயேதியல்

    21. Etymology – சொற்பிறப்பியல்

    22. Futurology – எதிர்காலவியல்

    23. Geochronology – புவிக்காலவியல்

    24. Glaciology – பனியாற்றியியல்/ பனியியல்

    25. Geology – புவியமைப்பியல்/ நிலவியல்

    26. Geomorphology – புவிப்புறவுருவியல்

    27. Graphology – கையெழுத்தியல்

    28. Genealogy – குடிமரபியல்

    29. Gynaecology – பெண்ணோயியல்

    30. Haematology – குருதியியல்

    31. Herpetology – ஊர்வனவியல்

    32. Hippology – பரியியல்

    33. Histrology – இழையவியல்

    34. Hydrology – நீரியல்

    35. Ichthyology – மீனியியல்

    36. Ideology – கருத்தியல்

    37. Information Technology – தகவல் தொழில்நுட்பவியல்

    38. Lexicology – சொல்லியல்

    39. Linguistic typology – மொழியியற் குறியீட்டியல்

    40. Lithology – பாறையுருவியல்

    41. Mammology – பாலூட்டியல்

    42. Meteorology – வளிமண்டலவியல்

    43. Metrology – அளவியல்

    44. Microbiology – நுண்ணுயிரியல்

    45. Minerology – கனிமவியல்

    46. Morphology – உருவியல்

    47. Mycology – காளாம்பியியல்

    48. Mineralogy – தாதியியல்

    49. Myrmecology – எறும்பியல்

    50. Mythology – தொன்மவியல்

    51. Nephrology – முகிலியல்

    52. Neurology – நரம்பியல்

    53. Odontology – பல்லியல்

    54. Ontology – உளமையியல்

    55. Ophthalmology – விழியியல்

    56. Ornithology – பறவையியல்

    57. Osteology – என்பியல்

    58. Otology – செவியியல்

    59. Pathology – நொயியல்

    60. Pedology – மண்ணியல்

    61. Petrology – பாறையியல்

    62. Pharmacology – மருந்தியக்கவியல்

    63. Penology – தண்டனைவியல்

    64. Personality Psychology – ஆளுமை உளவியல்

    65. Philology – மொழிவரலாற்றியல்

    66. Phonology – ஒலியியல்

    67. Psychology – உளவியல்

    68. Physiology – உடற்றொழியியல்

    69. Radiology – கதிரியல்

    70. Seismology – பூகம்பவியல்

    71. Semiology – குறியீட்டியல்

    72. Sociology – சமூகவியல்

    73. Speleology – குகையியல்

    74. Sciencology – விஞ்ஞானவியல் (அறிவியல்)

    75. Technology – தொழில்நுட்பவியல்

    76. Thanatology – இறப்பியல்

    77. Theology – இறையியல்

    78. Toxicology – நஞ்சியல்

    79. Virology – நச்சுநுண்மவியல்

    80. Volcanology – எரிமலையியல்

    81. Zoology – விலங்கியல்

விஜயதசமி ‘அட்மிஷன் ஜோர்’ கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்

விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆண்டு தோறும், விஜயதசமி பண்டிகை நாளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை சம்பிரதாயமாக துவங்குவது வழக்கம்.
இதற்காக, தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், யு.கே.ஜி., வரை, அட்மிஷன் வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகளில், பிளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகளில், சிறப்பு அட்மிஷன் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, நாளை விஜயதசமி பண்டிகை வருகிறது. இன்று சேரும் குழந்தைகளில், அரசின் விதிகளின் படி வருமானம் பெறும், தகுதியான பெற்றோரின் குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி சட்டத்தில், இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், கட்டாய கல்வி சட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய
தளத்தில், பதிவு செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

இந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக வங்கி..! ஏன் தெரியுமா?

பள்ளிக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் குறைபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

வளரும் நாடுகளில் உள்ள மாணவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பள்ளிப்படிப்பு படித்துவரும் மாணவர்களில் பலர் எழுதவோ படிக்கவோ கூட்டல் கழித்தல் கூட தெரியாமலே பாதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இந்த அளவிற்குத்தான் இந்தியாவில் அடிப்படைக் கல்வி உள்ளது.

தரமான தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வழங்கப்படாததால் திறமை குறைவு காரணமாக பட்டப்படிப்பு படித்தும் நிறைய பேர் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தரமான கல்வியை வழங்காதது என்பது மாணவர்களின் வளர்ச்சியை தடைபடுத்துகிறது. தரமற்ற கல்வி என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

இவ்வாறு உலக வங்கியின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுத்து நல்ல புரிதலோடு மாணவர்களை உருவாக்க வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கியின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தியாவின் கல்வித்தரம் இந்த அளவில்தான் உள்ளது என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இனியாவது பள்ளி கல்வி தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம்..

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா? யார் சொன்னது?

நீட் தேர்வும் அதைத் தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதாவின் மரணமும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளன.
பெரும்பாலோனோர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது போலவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரம் மிகவும் உயர்வானது போலவும் கருத்தை திணித்து வருகிறார்கள்.
கணிதம், அறிவியல், புவியியல் பாடத்திட்டங்கள் அனைத்து கல்வி முறையிலும் ஒன்றுதான், சமூக அறிவியல், வரலாறு மற்றும் மொழிப் பாடங்கள்தான் வேறுபடுகின்றன. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று சொல்பவர்கள், முதலில் அது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் கல்விப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு உறுதுணையாகவும் தக்க ஆலோசனை வழங்கவும் மத்திய அரசால் 1961ம் ஆண்டு NCERT (The National Council of Educational Research and Training) என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை National Curriculum Framework (NCM) வெளியிடப்படும். அதாவது தேசிய பாடத்திட்ட வரைமுறை என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில மத்திய அரசின் பாடத்திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே அமலுக்கு வரும். கடைசியாக 2005ம் ஆண்டு தேசிய பாடத்திட்ட வரைமுறை (NCM) வெளியானது. அதன் அடிப்படையில் தான் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் ஆய்வு செய்யப்பட்டு , NCERT ஒப்புதலுடனே அமல் செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி 11வது 12வது வகுப்புக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் NCERT க்கு தமிழக அரசு அனுப்பியது. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய துறை சார்ந்த வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, NCERT ன் ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பட்டது. NCERT ன் இந்த ஆய்வறிக்கை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் NCM 2005 வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்று கூறியுள்ளது.

அதன் பிறகே தமிழக அரசு நான்கு பாடத்திட்டத்திற்கும் பொதுவான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான NCERT ன், தற்போது நடைமுறையில் இருக்கும் 2005ம் ஆண்டு வரையறைக்கு உட்பட்டு, NCERT ஒப்புதல் அளித்துள்ள பாடத்திட்டத்தை, தரம் குறைந்தது என்று எப்படி கூறலாம். மாநில அரசு தன்னிச்சையாக முடிவு செய்யவில்லையே. ஒருவேளை தரம் குறைவு என்றால் அது மத்திய அரசின் NCERT தரத்தைத் தானே குறிப்பிடும்.
முத்துக்குமரன் குழு, தமிழ் நாடு பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை விட சிறந்தது என்று சான்று அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பாடத்திட்டமும் மாற்றத்திற்குரியதே. ஆகையால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு தமிழக அரசு குழுக்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு மாற்றமும் NCERT ஒப்புதலுக்குப் பிறகே அமலுக்கு வருகிறது. கடைசியாக தமிழக அரசின் பாடத்திட்டம் 2010ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த பாடத்திட்ட மாற்றம், பாடத்திட்டக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆக, தமிழக அரசு NCERT தேசிய ஆணையத்தின் வரையறைக்கு உட்பட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய மாற்றங்களும் செய்து கொண்டு தான் வருகிறது. தமிழக அரசின் பாடத்திட்ட தரம் சரியில்லை என்பவர்கள் முதலில் மத்திய அரசின் NCERT யிடம் தான் முறையிட வேண்டும்.

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

விதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.