பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

‘தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,’துாய்மை இந்தியா’ திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தை, ஒவ்வொரு துறைகளிலும் நடை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செப்., 15 முதல், இத்திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, அக்., 2 வரை, பள்ளிகளில் கட்டாயம் நடத்த வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

EMIS WEBSITE NOW OPEN (update News)

*EMIS WEBSITE NOW OPEN*

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது 

 

  1. SSA அலுவலகத்திலிருந்து புதிய password பெற வேண்டும்.

 

 

  1. பிறகு log in செய்து உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு சென்றவர்களை transfer செய்ய வேண்டும்.

DEEO meeting news:பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்.

DEEO meeting news:

1. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமைஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

4. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள்செய்ய வேண்டும்.

5. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.

EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்)

தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்

ஏற்கனவே அனுப்பப்பட்ட படிவத்தில் ( தற்போதும் இணைக்கப்பட்டுள்ளது ) மாணவர் விவரங்கள் தொகுத்து அம்மாணவர்களை transfer செய்யலாம்

தங்கள் பள்ளியில் தற்போது (01.09.2017 அன்று) பதிவில் உள்ள மாணவர்கள் விவரம் மட்டும் தான் Emis லும் இருக்க வேண்டும்.மற்ற மாணவர்கள் பொது தொகுப்பிற்கு (student pool) மாற்ற வேண்டும்

 

 

*How to transfer yourself* 

 

_

*தாங்களே இப்பணியை செய்ய கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்_*

 

Step1: go to Google search

Step 2: type www.emis.tnschool.com

Step 3:, USER ID is your Dise code (3303050…….)

Step 4 : 

PASSWORD Type ur new password (as u given on 5.9.17 &6.9.17 அல்லது பெரும்பான்மை பள்ளிக்கு த.ஆ தொலைபேசி எண்)

 

Step5: 

click in student pool. …

 

Click on class….

click on student EMIS number

See right top

click TRANFER button

அம்மாணவன் student pool க்கு சென்றுவிடுவர்…

தற்போது transfer மட்டும் தான் செய்ய வேண்டும்

*` *`😳😳😳😳😳😳😳😳😳😳` *New admition புதிய சேர்க்கை விரைவில் துவங்கும்* 😄😄😄😄😄😄😄

அப்போதும் மேற்கண்ட அதே படி நிலைகளையே செய்து Admit என்ற option பயன்படுத்தி 2முதல்-8 வகுப்பு வரை

*EMIS எண் உள்ள மாணவர்களை மட்டும் admit செய்ய வேண்டும்..* 

* *Transfer மற்றும் Admit செய்யும் மாணவர் விவரமும். 2 நகல்கள் எழுதி திங்கள் மாலைக்குள் குன்றத்தூர் கலப்பு பள்ளியிலும், படப்பை Aeo அலுவலகத்தில் சம்ர்பிக்கவும்*

 

மேற்கண்ட விவரத்துடன் உரிய படிவங்களுடன் வந்து பணிகளை 100% முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

முதல் மாணவர்கள் சேர்த்தலுக்கு தனியாக Emis format ல் தகவல் சேகரித்து வைக்கவும். அறிவிப்பு வந்ததும் பதிவேற்றம் செய்யவும்.

 

( Emis transfer / admit பணிகள் EMIS எண் உள்ள மாணவர்க்கு மட்டும்.

Emis எண் இல்லாமல் 2 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர் விவரம் சேகரித்து தனியே வைக்கவு

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கஅவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும் 2017-18 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறுபான்மையின மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடு: புது திட்டம்

கோபி, ”கற்றல் குறைபாட்டை தீர்க்க, புது திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

 

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்த விபத்து ஏற்பட்டாலும், 24 மணி நேரத்தில், நிவாரணம் மேற் கொள்ளும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில், 1௦ சதவீத மாணவர்கள், கற்றலில் குறைபாடு உள்ளதாக புள்ளி விபரம் கிடைத்து

உள்ளது. இதை தீர்க்க, ஒரு புதிய திட்டம், அடுத்த மாதம் கொண்டு வரப்படும். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும், கல்வியை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றனர். ஒரு பங்கு இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மதிப்பெண்படி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் படித்த 30 முதல் 35 மாணவர்கள் வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 3 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்’ என்றனர்.

TET – தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.

 அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், 2019க்குள் தகுதித் தேர்வில் கட்டாயம்தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரையான, தனியார் பள்ளிகளில் பணிபுரியும், பட்டம் மற்றும் டிப்ளமா முடித்த ஆசிரியர்களுக்கு, சிறப்பு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பையும், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அனுபவம் : இந்த படிப்பை, என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தநிலை பள்ளி யில், தொலைநிலை கல்வி யாக, இரண்டு ஆண்டு படிக்கலாம். இதற்கான பதிவு, செப்., 15ல் முடிவதாகவும், அதற்குள் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாக சங்க தலைவர், ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது: தனியார் பள்ளிகளில், பல ஆண்டு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை, வெறும் தகுதித் தேர்வுக்காக, பணியில் இருந்து அனுப்ப முடியாது. எனவே, அவர்கள் பணியில் தொடரும் வகை யில், மத்திய அரசு, இந்த படிப்பை அறிமுகம் செய்து உள்ளது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வரவேற்பும் எதிர்ப்பும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆதரவு

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாததால் நீட் தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் நவோதயா பள்ளிகளுக்கு தடையில்லா சான்றை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது நவோதயா பள்ளிகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறது. ஆனால் இந்தப் பள்ளிகளில் மும்மொழி கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 20 கோடி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்ப்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என அறிஞர் அண்ணா திட்டவட்டமாக கொள்கை முடிவாக அறிவித்தார். அக்கொள்கையைத்தான் திமுக, அதிமுக முதல்வர்கள் பின்பற்றி வந்தனர். எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதோடு, இது எங்கள் கொள்கை முடிவு என பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இது மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பதில்லை என உறுதியாக இருந்தனர். இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேருவதற்கே நீட் தேர்வைப் போன்று நுழைவுத் தேர்வு அவசியம். மேலும் இது நேரடியாக இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டை மறந்ததால் பரிதவிக்கும் மாணவர்கள்

மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதில் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளதுடன், தற்போது ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். கோ கோ, கபடி, சிலம்பம், களரி, வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

இதன் விளைவாக அவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதோடு கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்தில் நல்ல அறிவார்ந்த சமூகம் உருவாகும் நிலை ஏற்படும். இந்த பணியை பள்ளி பருவத்தில் ஊக்குவிக்கவில்லை என்றால் எந்த நிலையிலும் செய்ய முடியாது. இதனால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது மாணவர்கள் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை. விளையாட்டு நேரங்களில் பாடம் நடத்துகின்றனர். மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை தவிர்த்து செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இதனால் அவர்கள் மனரீதியாக மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். அவர்கள் போதிய அளவு சலுகை கொடுக்காமல் மாலை நேரத்தில் விளையாட கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு கண்டிப்பாக திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் ஆம்பூரில் ப்ளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவி கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியர்கள் கவுன்சில் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப்ளூவேல் கேம் விளையாடி வருகிறார்களா என்று ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.