பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில், எந்த எண்ணை ஆய்வுக்காக பயன்படுத்துவது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

புகார்கள் வந்தன

 

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்கிறது. இதில், 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பொது தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில், பதிவு எண் இடம்பெறும். ஆனால், வெறும் பதிவு எண் மட்டும் இருப்பதால், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் உலா வருவதாக புகார்கள் எழுந்தன.

 

 

எனவே, சான்றிதழின் பாதுகாப்புக்காக, கடந்த தேர்வின் போது, 14 இலக்க தனி அடையாள எண் உருவாக்கப்பட்டு, அந்த எண், சான்றிதழில் பதிவு செய்யப்பட்டது. 

 

முடிவு செய்யப்படவில்லை 

 

இந்த ஆண்டு, 14 இலக்க தனி அடையாள எண்ணுடன், எமிஸ் என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் அடையாள எண், ஆதார் எண் மற்றும் பதிவு எண் என, நான்கு விதமான எண்களை, மாணவர்கள் பயன்படுத்த உள்ளனர்.

 

இவற்றில், எந்த எண்ணை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பயன்படுத்துவது என, பள்ளி கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. 

 

நான்கு எண்களையுமே பயன்படுத்தினால், போலிகளை தடுக்கவும், சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும், வலுவான ஆதாரமாக இருக்கும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் விரும்புகின்றனர். அது, நடைமுறைக்கு வருமான என்பது, சில நாட்களில் தெரிந்து விடும்.

குழந்தைகள் தனியாக தவித்தால் , ஆதார் மையத்திற்கு அழைத்து சென்று பெற்றோரை கண்டுபிடிக்கலாம் !!

நீங்கள் எங்காவது  சென்று வரும்போது பெற்றோர்களை பிரிந்து அழுது கொண்டிருக்கும்  சிறுகுழந்தைகள்  அவர்களது பெற்றோர் பற்றிய விபரம் சொல்லத்தெரியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் காண நேர்ந்தால் அவர்களை அருகில் உள்ள ஆதார்

மையத்திற்கு அழைத்து சென்று அவர்களது விரல் ரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோரை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை சேர்த்துவிடலாம்

ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது நிரம்பியதும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, செய்தித்துறை இயக்குனர் மற்றும் மின்-ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் சேர்க்கை வழிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இதன் படி ஆதார் அட்டை உள்ள சிறுவர்களுக்கு 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக புதன்கிழமை அன்று நிரந்தர மையங்களுக்கு நேரில் சென்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உரியத் தகவல்களை அளிக்க வேண்டும் என்று குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

ரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்!!

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் 
அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.

பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11–ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெரு மளவில் பயனடைந்து வரு கின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா வின் வழிகாட்டுதலின் படி,  2016- 2017ஆம் கல்வி யாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 7 மாணாக்கர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்திய நாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர்  சந்திரசேகரன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நீட்’ தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர,நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்டம்’ எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு

பிளஸ்தேர்வு மார்ச் 2ம் தேதியும்பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச்8ம் தேதியும் தொடங்க உள்ளனபள்ளிகள்மூலம் சுமார் 20 லட்சம் மாணவ,

மாணவியர்மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர்பிளஸ்வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளைஎடுத்துபடிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுதவேண்டும்வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாகசெய்முறைத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்துஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதுசெய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்தவாரம் சென்னையில் நடக்கஉள்ளதுஇதில்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொள்வார்கள்பிளஸ்வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும்பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் மாலையிலும் நடத்தஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

 

அறிவியல்பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள்குழுக்களாகபிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒருகுழு வீதம் செய்முறைத் தேர்வுக்குஅனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்புமாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம்முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள்முடிக்கதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு செய்முறைத்தேர்வுக்கானஅட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்

மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க “நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வு

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:

 

மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எம்.பி.பி.எஸ். முடித்து வெளியேறும் மருத்துவர்களுக்கு “நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று “நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

 

அதனடிப்படையில், புதிய மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இந்த மசோதாவை, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக சுகாதாரத் துறை அமைச்சகம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 6-ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

இதுதவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது என்றார் அவர்.

ரேஷன் கார்டுகளில் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட உத்தரவு.

ரேஷன் கார்டுகளில், ஓராண்டுக்கு உள்தாள் ஒட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியுள்ளதாவது:
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், ‘2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்’ என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் உதவி மையங்கள் 2 மாதங்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு.

பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் வகையில், அதற்கான உதவி மையங்கள் பிப்ரவரி மாத இறுதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் இதுவரை 8.5 லட்சம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதார் பதிவுக்கென கட்டணம் ஏதுமில்லை.

உதவி மையங்கள்:

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து, அட்டைகிடைக்கப்பெறாதவர்கள், அட்டையைத் தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.இதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது, தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில்ஆதார் உதவி மையங்களை அமைந்துள்ளது. இந்த மையங்கள் புதன்கிழமை (டிச.28) முதல் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை செயல்படும்.ஆதார் எண்ணுக்கு ஏற்கெனவே பதிவுகளைச் செய்துவிட்டு, ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

பிளாஸ்டிக் அட்டை:

ஆதார் எண்ணை, ஆதார் உதவி மையங்களின்அருகிலேயே இயங்கும் அரசு இணைய சேவை மையங்களில் காண்பிக்கலாம். விரல்ரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை அல்லது ரூ.10 கட்டணத்தில் காகிதத்தில் அச்சிட்டோ அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.