‘எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்’ என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டு வரையிலான, நடுநிலை பள்ளிகளில், 220 நாட்கள்; 10 முதல் பிளஸ் 2 வரையிலான, உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளில், 210 நாட்கள், வகுப்புகள் நடைபெறும். அதாவது, நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 30 வரை; மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 15 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், நடுநிலை பள்ளிகள், அதிக நாட்கள் இயங்குவதால், கோடை வெயில் பாதிப்பில், சின்னஞ்சிறு மாணவர்கள் சிக்கி கொள்கின்றனர். இதை தவிர்க்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை, பரங்கிமலை, ஏ.பி.டி.எம்., நடுநிலை பள்ளி தாளாளர், விக்டர் கிருபாதனம் வெளியிட்ட அறிக்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 31க்குள் தேர்வுகள் முடிகின்றன. ஆனால், ஆறு முதல், 14 வயது வரையிலான, சிறு வயது மாணவர்களுக்கு, ஏப்., 30 வரை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதனால், அவர்கள் தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஏப்., 15க்குள் தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், இதே முறை கடைபிடிக்கப்படுகிறது. வேலை நாட்களை சரிசெய்ய, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களை குறைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி:’அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது;இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. ‘அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்’ என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு மாற்றாக, நீண்ட கால திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:கல்வி உரிமைச்சட்டம் குறித்து ஆய்வு செய்த, ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அதன் அவல நிலையை வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் பலருக்கு, தாய் மொழி எழுத்துகள் கூட தெரிய வில்லை; பெருமளவு நிதி முறைகேடு நடைபெறுகிறது. பல மாநிலங்களில், பெயரளவுக்கு தான் திட்டம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி பயிலுவதாக கணக்கு மட்டுமே காட்டப்படுகிறது.ஆனால், அவர்களது கல்வி நிலைமையை சோதித் தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே, இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயன் குறித்து முழுமை யாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.மோசடி அம்பலம்கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பல்வேறு மாநிலங் களில்,8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன; இதில் பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொய்யான பெயரில் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதைத் தடுக்க, கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளி களை, ஆதார் எண் மூலம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறிஉள்ளன.
அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் வெளி யாகியுள்ள பகீர் தகவல்கள்:
* எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, தாய் மொழி எழுத்துகள் முழுமையாக தெரியவில்லை
* தங்கள் பெயரைக் கூட எழுத தெரியவில்லை
*ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தங்கள், 2ம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்கக் கூட முடியவில்லை
* மாணவ, மாணவியருக்கு பெயரளவுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது..
பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், ‘டிப்ஸ்’ வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.
தமிழகத்தில், தற்போதைய நடைமுறைகளின் படி, மருத்துவம் படிக்க, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; அதிலும், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறுவது, மிக அவசியம். வேளாண் படிப்பு, விலங்கியல் படிப்புக்கும், உயிரியல் மதிப்பெண்கள் முக்கியம்.
இந்நிலையில், உயிரியல் பாடத்தை மாணவர்கள் புரிந்து படித்து, அதிக மதிப்பெண்கள் பெற வசதியாக, சென்னை, புரசைவாக்கம், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர், சவுந்தர பாண்டியன், ஆன்லைனில் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கிறார்.முக்கிய பாடங்கள், தாவரங்கள், விலங்குகளின் அறிவியல் பெயர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், விடைகளை எழுதும் முறை என, பல தகவல்களை, ‘வாட்ஸ் ஆப், பேஸ் புக்’ மற்றும் rspbiology@gmail.com என்ற, இ – மெயில் மூலமும், இலவசமாக பகிர்ந்து வருகிறார்.
இது குறித்து, சவுந்தர பாண்டியன் கூறியதாவது: சென்னையை தவிர, மற்ற மாவட்ட மாணவர்களுக்கும், தரமான பயிற்சி முறை தேவை என்பதால், ஆன்லைன் பயிற்சியை இலவசமாக நடத்துகிறேன். மாணவர்களின், இ – மெயில் முகவரி, வாட்ஸ் ஆப் எண்களை அளித்தால், அவர்களுக்கு, படங்களுடன் குறிப்புகள், ‘பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்’ பைல்கள் போன்றவற்றை, இலவசமாக அனுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது.
ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை
குறையத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், 2005-2006-ல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விதவிதமான பாடத்திட்டம் என்றில்லாமல், ஒரே கல்விமுறை இருக்கவேண்டும் என்றநோக்கத்தில், “சமச்சீர் கல்விமுறை” கொண்டுவரப்பட்டது. மற்ற கல்வித்திட்டங்களின் கல்வித்தரம் உயர்ந்துகொண்டே சென்றபோது, தமிழ்நாட்டில் மாறிவரும் காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வகையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவுடன் கைநிறைய சம்பளம் உடனடியாக கிடைக்கும் வகையில், வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருந்த நிலையில், அலைஅலையாய் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்கள்.
இப்போது பிளஸ்-2 படித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையைப்போல’ மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுவிட்டு, நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், இந்த மார்க்குகளின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை தந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 50 சதவீதம்பேர் முதல் ஆண்டில் தங்கள் ‘செமஸ்டர்’ தேர்வில் பல பாடங்களில் தோற்றுவிடுகிறார்கள். இவ்வாறு தோல்வியடையும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள்.
இதுபோல, என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்களில் பெரிய வேலைக்கு செல்பவர்களில் ஏராளமானோர் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, அந்த பாடத்திட்டத்தின்கீழ் படிக்க முடியாமல், ஏராளமானோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம், பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறையால் மாற்றப்படாமல் இருப்பதுதான். வருகிற ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை அகில இந்திய அளவிலான ‘நீட்’ தேர்வு மூலம்தான் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நிச்சயமாக ‘நீட்’ தேர்வை எழுதி வெற்றி பெறவே முடியாது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக இல்லாமல், பிற மாநிலத்தவர் வந்து சேரப்போகும் அபாயநிலை கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, உடனடியாக பிளஸ்-2 பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர்தரத்தில் மாற்றி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக வைத்தே ஆகவேண்டும். கிராமப்புற மாணவர்களால், ஏழை மாணவர்களால், உயர்தரத்தில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக படிக்க முடியாது என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்துக்கு இணையாக நமது மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இன்னும் சற்று உழைத்து மாணவர்களை படிக்க வைத்தால், நிச்சயமாக நமது மாணவர்களால் படிக்க முடியும்.
ஏற்கனவே, நிபுணர்குழு இதுபோல திருத்தப்பட வேண்டிய ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக அந்த ஒப்புதலை கொடுத்து, மிகவும் உயர்தரத்தில் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறையின்போது தீவிரமான பயிற்சி அளிக்கும் வேலைகளை தொடங்கவேண்டும். இதையெல்லாம் உடனடியாக தொடங்கினால்தான், வருகிற கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டங்களை மாற்றமுடியும். ஒளிமயமான எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.
தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.
மாவட்டத்தில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.
இதில் அமுதவல்லி பேசியதாவது:
பொதுத் தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டு முதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர் தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான ’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவே பெயர், பிறந்த தேதி உட்பட அனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் தவறு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்
Grammmarly என்ற ஆங்கில மொழிப் பயன்பாட்டில் எழுத்து, சொல், இலக்கணம் மற்றும் வாக்கியப் பிழைகள் திருத்தும் செயலி குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள் தாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக எழுதி உள்ளனர். சிலர், ”இதெல்லாம் பிழை என்றே தெரியாது. இப்படி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆங்கில மொழிப் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட, இந்த செயலி மூலம் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டு, தங்கள்
மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் பயன்படுத்துவதாக தகவல் தந்துள்ளனர்.
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு மட்டுமல்ல, அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கூட சிரமங்கள் ஏற்படுவதுண்டு. ஒரு மொழிப் பயன்பாட்டில் இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவது சகஜமே. இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு தருவதில் சிறந்த செயலியாக இயங்கும் Grammarly குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. அதே இலக்குடன் மேலும் பல செயலிகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மொழியின் இலக்கணத்தில் எளிதாக ஒருவர் மிகப் பெரிய அளவில் புலமை பெற்றிட முடியாது. ஒவ்வொரு சொல் பயன்படுத்துவதிலும் நமக்கு சந்தேகம் ஏற்படும். அது தாய்மொழியாக இருந்தாலும் கூட. எனவே, இந்த சந்தேகங்களைத் தீர்க்கும் கம்ப்யூட்டர் டூல் இருந்தால், அது நம்மை வழி நடத்தி, நம் மொழிப் பயன்பாட்டிற்கு மெருகூட்டும். வாக்கிய அமைப்புகளைச் சீராக்கும். எழுத்துப் பிழைகள் இல்லாமல் செய்திடும். சரியான சொற்களை அமைப்பதில் வழி காட்டும். இந்த டூல்களைத் தாங்கியுள்ள தளங்களையும், அவை நமக்கு எந்த வழிகளில் உதவுகின்றன என்பதனையும் காணலாம்.
Grammarly
ஏற்கனவே தரப்பட்ட கட்டுரையில் சொல்லப்பட்ட Grammarly செயலி தான் இந்த வகையில் மிகச் சிறந்ததாகும். இது பற்றி சுருக்கமாக இங்கு தருகிறேன். நாம் ஆங்கில மொழியில் தயாரிக்கும் ஆவணங்கள், மின் அஞ்சல்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் திருத்தி அமைக்கும். வேர்ட் செயலி காட்டும் பிழைகளைக் காட்டிலும் பத்து மடங்கு அளவில் பிழைகளை இது சுட்டிக் காட்டுகிறது. முன் ஒட்டுச் சொற்கள் (preposition), சரியான வினைச்சொல் பயன்பாடு, பெயர்ச்சொல் பயன்படுத்தல், தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அனைத்து வகைகளிலும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://www.grammarly.com/. இதன் மேம்படுத்தப்பட்ட, கூடுதல் வசதிகள் கொண்ட பதிப்பு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
Ginger Grammar Checker
இணையத்தில் கிடைக்கும், ஆங்கில மொழி பயன்பாட்டினை மெருகூட்டித் தரும் ஒரு டூல் ‘ஜிஞ்சர்’ (Ginger). மேலே சொல்லப்பட்ட ‘கிராமர்லி’ போலவே, இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனைப் பெறலாம். இலக்கண மற்றும் சொல் பிழைகளை இது திருத்துகிறது. இதன் சிறப்பு, இதில் உள்ள ‘sentence rephraser’ என்னும் டூல் ஆகும். இது நீங்கள் அமைத்திடும் முழு வாக்கியத்தினைச் செம்மைப் படுத்தி அமைக்க உதவுகிறது.
இதில் கிடைக்கும் ‘Text to Speech’ என்ற டூலினைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தை எப்படி அதனை உச்சரிக்க வேண்டுமோ, அதன்படி உச்சரித்துப் பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழை திருத்தம், ஒற்றை மற்றும் பன்மை பெயர்ச் சொற்களில் பிழை திருத்தம், தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் திருத்தம் எனப் பலவகையான திருத்தங்களைச் செயல்படுத்துகிறது இந்த செயலி. இந்த வகையில், நம் தனிப்பட்ட ஆசிரியராகவே இது செயல்படுகிறது. இது ஒரு கூகுள் எக்ஸ்டன்ஷன் புரோகிராமாகவும் கிடைக்கிறது. அல்லது இணைய இணைப்பில் உங்கள் ஆவணத்தைத் திருத்திப் பெறலாம். இந்த செயலியைத் தரவிறக்கம் செய்திடhttp://www.gingersoftware.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
Paper Rater
இணையத்தில் கிடைக்கும் ஒரு வித்தியாசமான ஆங்கில மொழி திருத்தி Paper Rater. மற்ற செயலிகளைப் போல, இந்த செயலியும் எழுத்து, இலக்கண, சொல் மற்றும் வாக்கியப் பிழைகளைத் திருத்துகிறது. இதன் தனிச் சிறப்பு, இதில் காணப்படும் Vocabulary Builder என்னும் டூல் ஆகும். சொற்களைச் சரியாகப் பயன்படுத்த இந்த டூல் நமக்கு உதவுகிறது. இதன் இன்னொரு சிறப்பு, ஆங்கில மொழியினைப் பயன்படுத்துவதில், எழுதுபவர் அல்லது படிப்பவரின் நிலைக்கேற்ப, டெக்ஸ்ட்டைத் திருத்துவதாகும். கல்லூரி மாணவர், பட்டதாரி, டாக்டர் பட்ட ஆய்வாளர் என மூன்று நிலைகளில் எப்படி ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நிலைக்கேற்ப திருத்தங்களை அளிக்கிறது. கட்டுரையின் தன்மைக்கேற்பவும் திருத்தங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், உங்களுடைய கட்டுரையினைப் படித்து, மொத்தமாக மதிப்பெண் தருகிறது. இதிலிருந்து உங்கள் கட்டுரையின் மதிப்பினை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.https://www.paperrater.com/free_paper_graderஎன்னும் முகவரியில் உள்ள தளம் சென்று, உங்கள் கட்டுரையை அதில் பதித்து, தளத்தின் திருத்தங்கள் மற்றும் மதிப்பெண்ணைப் பெறலாம். அல்லது, கட்டுரை கோப்பினை அப்லோட் செய்து பெறலாம்.
After the Deadline
மிக அருமையான இலக்கண பிழை திருத்தி. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. PolishMyWriting எனவும் இதனை அழைக்கின்றனர். Word Press செயலியியைத் தயாரித்து வழங்கும் Automattic Inventions என்ற நிறுவனத்தினர், இதனைத் தயாரித்து வழங்கியுள்ளனர். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் மிகச் சிறந்த செயலி. இலக்கணப் பிழைகளைத் திருத்தி, பிழைகளின் இடத்தில் என்ன மாதிரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகிறது. இந்த செயலி, Plug in / Add on ஆகக் கிடைப்பதால், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுடன் பயன்படுத்தலாம். ஆனால், இதனை மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது. இந்த செயலியைப் பெறhttp://www.polishmywriting.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
WebSpellChecker
இந்த செயலியின் சிறப்பு, ஒரு சொல்லுக்கு அதே பொருளைத் தரும் இன்னொரு சொல்லைத் தரும். எழுத்துப் பிழைகளைத் திருத்துவதுடன், இலக்கண பிழைகளை ஆய்வு செய்து விளக்கங்களைத் தருகிறது. முதலில் குறிப்பிட்டது போல, உங்கள் கட்டுரையில் இடம் பெற்றுள்ள சொற்களுக்கான அதே பொருளைத் தரும் பிற சொற்களையும் தருகிறது. இந்த செயலியைத் திறந்தவுடன், Grammar, Spellchecker, மற்றும் Thesaurus என மூன்று டேப்களைக் காணலாம். இதில் மூன்றாவதான Thesaurus டேப்பில் கிளிக் செய்தால், சொல்லுக்கான பொருளைத் தரும் இன்னொரு சொல் (synonym) கிடைக்கும். எந்த சொற்களுக்கெல்லாம், வேறு சொற்களையும் பயன்படுத்தலாமோ, அவை எல்லாம் ஹைலைட் செய்யப்பட்டு, அவற்றைத் தேர்ந்தெடுக்கையில், அச்சொற்கள் காட்டப்படும். இந்தச் செயலியைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி:https://www.spellchecker.net/
Slick Write
இந்த Slick Write செயலி, மற்ற செயலிகள் போல இலக்கணப் பிழைகளை அவ்வளவாகத் திருத்துவது இல்லை. ஆனால், ஓர் ஆவணம் படிக்கும் அளவிற்குத் தகுதியானது தானா என்பதை Readability Score தருவதன் மூலம் காட்டுகிறது. மேலும், ஆவணத்தை நன்கு படிக்கும் அளவிற்குத் தகுதியானதாக மாற்றுவதற்குத் தேவையான அறிவுரைகளைத் தருகிறது. எனவே இலக்கணப் பிழைகளைத் திருத்திக் கொண்டு, உங்களுடைய டெக்ஸ்ட்டின் தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளைப் பெற இந்த Slick Write செயலியைப் பயன்படுத்தலாம். இதனை அதன் இணைய தளத்திலேயே பயன்படுத்தலாம். இணைய தள முகவரி:http://www.slickwrite.com/#!home
Online Correction
இந்த Online Correction டூல், உங்களின் ஆவணத்தில் எத்தனை பிழைகள் உள்ளன என்று காட்டி, அவற்றை எப்படி திருத்த வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சொற்கள், வரிகளுக்கிடையே இடைவெளி சரியாக உள்ளதா என்பதையும் எடுத்துச் சொல்கிறது. எழுத்துப் பிழைகள் சிகப்பு கோடு இடப்பட்டு காட்டப்படுகிறது. மற்ற பிழைகள், பச்சை வண்ணத்தில் கோட்டுடன் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் எட்டு மொழிகளில் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகள்) உள்ள ஆவணங்களைத் திருத்தலாம் என்பது கூடுதல் தகவல். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:http://www.onlinecorrection.com/
GramMark
GramMark செயலியை இணைய இணைப்பிலும், இல்லாத போதும் பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தை மிகத் தெளிவாக ஆய்வு செய்து, அதில் உள்ள செயப்படு / செயப்பாடு வினை பிழைகள் (active and passive voice errors), வாக்கியங்கள், வாக்கிய அமைப்புகள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை மிகச் சரியாகத் திருத்துகிறது. இந்த டூல் மிகவும் பாராட்டுகளைப் பெற்ற ஒன்றாகும். இதனைப் பெறhttp://grammark.org/dist/#/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள டூல்கள் அனைத்தும், நம் ஆங்கில மொழியில் அமைக்கும் ஆவணங்களைத் திருத்தி, சிறப்பாக, உயர்ந்ததாக அமைக்க நமக்கு உதவுகின்றன. நல்ல திறமையான ஆசிரியர்களைப் போல இவை இயங்குவது இவற்றின் சிறப்பாகும். இதில் நமக்குப் பழக்கமாக, எளியதாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்தலாம்
இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க www.cbseneet.nic.in என்றஇணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வரும் மே 7ம் தேதி இந்த தேர்வு நாடெங்கிலும் பல பகுதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1400ம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கட்டணங்களை செலுத்த பிப்ரவரி 1ம் தேதியே கடைசியாகும்.
இந்த தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
”நமதுவகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவரவகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம்எவ்வளவு, எத்தனைபேர் நூற்றுக்கு
நூறு, ஸ்டேட் ரேங்க்எத்தனை பேர், கடந்தவருடத்தைவிடஎத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி… எனஎண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்தப்புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும்பள்ளியை நோக்கி பெற்றோர்கள்ஓடுகின்றனர். ஒருவகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒருதலைமுறை தன் சிந்தனையைஉருவாக்கிக்கொள்ளும்உயரிய இடம்.
அதற்குமனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒருவகுப்பறை இருந்தால்10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத்தேர்வுமுடிவுகள் வரும்போது இத்தனைவெற்றுக்கூச்சல்கள் கேட்காது.
உலகின்எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வுமுடிவுகளின்போதுஇத்தனை ஆரவாரக் கூச்சல்கள்ஒலிக்காது.
மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையைஅடியோடுவெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித்தேர்வுமுடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள்.
அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம்புத்தகவாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டுமுழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கியபுத்தகத்தைஅவமதிக்கும் அந்தக் கணம், அவன்பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான்.
இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டுநமதுபாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றிஅமைக்கவேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க்வாங்கியது கொண்டாடப்படும்சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம்கண்டுகொள்ளாமல்விடப்படும்!”