வேறு பள்ளிக்குப் போகச் சொன்னால் நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ’ஸ்லோ லேனர்ஸ்’ எனப்படும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை பொதுதேர்வு எழுத அனுமதிக்காமல், அவர்களை வேறு பள்ளிக்குப் போகச் சொல்லி, கட்டாயப்படுத்தி வருகின்றன பல பள்ளிகள். இந்நிலையில், கல்வித்

தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, இக்கல்வி ஆண்டு வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் அதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு.

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், ‘நெட்’ என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர்.ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.
ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.

இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

குழந்தை வளர்ப்பு-சில டிப்ஸ்…

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்…!

 

  1. பசி என்று குழந்தை
    சொன்னால், உடனே உணவு கொடுங்கள். அரட்டையிலோ,
    சோம்பலிலோ, வேறு
    வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள்
உங்களுக்கு குழந்தையாய்
தெரியலாம். எல்லோருக்கும்
அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்.

  1. ஒருபோதும் “ச்சீ வாயை மூடு”, “தொணதொணன்னு
    கேள்வி கேட்காதே” என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,
    அவர்களின் ஆர்வத்தை குழி
    தோண்டி புதைத்து விடாதீர்கள்!
  2. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற
    குழந்தைகளுடனோ
    அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும்
    தெரிந்து கொள்ளுங்கள், அவர்
    வீட்டு முகவரி உட்பட.
  3. வாகன ஓட்டுனரின்
    நடத்தையிலும், பழக்க
    வழக்கத்திலும் ஐயமின்றி
    தெளிவுறுங்கள்!
  4. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல்
    குழந்தைகளை அடைத்து,
    மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை
    தொடுவதும் சில இடங்களில் நடக்கிறது.
  5. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு
    தெளிவுபடுத்துங்கள்.
  6. குழந்தைகள், வீட்டின் முகவரி,
    பெற்றோரின் தொலைபேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
  7. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன்
    மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி
    இருந்தாலும்!
  8. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்
    விருப்பங்களை குழந்தையின்
    மேல் திணிக்காதீர்கள்.
  9. வீட்டில் குழந்தைகள் இருக்கும்
    போது வன்முறை, காதல், கொலை, கொள்ளை போன்றவை நிறைந்த திரைக்காட்சிக ளையோ, நிகழ்ச்சிகளையோ
    பார்க்காதீர்கள்!
  10. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி
    இருக்காமல், குழந்தைகளுக்கு
    பிடித்தாற்போலோ, அல்லது
    அவர்களுக்கு பொது அறிவு பெருகும் வகையிலான
    நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
  11. குழந்தைகளிடம் தினமும் நேரம்
    செலவிடுங்கள். ஒரு
    தோழமையுடன் அவர்கள்
    சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
  12. தவறுகளை தன்மையுடன்
    திருத்துங்கள். தண்டிக்க
    நினைக்காதீர்கள்!
  13. ஒருமுறை நீர் ஊற்றியவுடன்,
    விதை மரமாகிவிடாது. நீங்கள் ஒருமுறை சொன்னவுடன்
    குழந்தைகள் உங்கள் விருப்பப்படி மாறிவிட மாட்டார்கள்.
    உங்களுக்கு பொறுமை
    அவசியம்.
  14. பள்ளி விட்டு வரும்
    குழந்தைகளை அன்புடன்
    அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ,
    பெரியவர்களோ வீட்டில் இருத்தல்
    வேண்டும்!
  15. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள்
    உங்களைப் பற்றி பேசலாம்.
  16. உங்கள் பெற்றோரை நடத்தும்
    விதம், உங்கள் பிள்ளைகளால்
    கவனிக்கப்படுகிறது. நாளை உங்களுக்கும் அதுவே நடக்கலாம்!
  17. படிப்பு என்பது அடிப்படை. அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற
    ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
  18. ஓடி ஆடி விளையாடுவது
    குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு
    அவசியம். விளையாட்டிற்கு
    தடை போடாதீர்கள். “All work and no
    play makes Jack a dull boy”.
  19. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும். அவர்களின்
    வயதுக்கேற்ப புரியும்படி பதில்
    சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்போது
    தெரிந்தால் சொல்லுங்கள்,
    தெரியாவிட்டால் பிறகு
    சொல்கிறேன் என்று
    சொல்லுங்கள். சொன்னபடி
    கேள்விக்கான பதிலை அறிந்துகொண்டு, மறக்காமல் அவர்களிடம்
    சொல்வது அவசியம்.
  20. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள்
    மிகுதியாகவோ,
    இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ
    கவனம் தேவை.
  21. ஆணோ, பெண்ணோ, எந்த
    குழந்தையாய் இருந்தாலும்,
    “Good touch”, “Bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
  22. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
  23. ஒவ்வொரு குழந்தையும் இறைவனின்
    வரம். அவர்கள், ஒருபோதும் உங்கள்
    கோபதாபங்களின் வடிகால்கள்
    அல்ல!

உங்கள் வீட்டில் உள்ள வருக்கும் படித்துக் காட்டுங்கள்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களை தேர்ந்தெடுக்க முடியாது

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.

எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.

புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.

இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.

சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.

மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்

1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.

(  உணவு இடைவேளையின் போது )     ஒரு மாறுதலுக்காக  வகுப்பறையில்

 

உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்)   ஒன்றை எழுதி ஒட்டி விடலாம். அதனைப் படித்துவிட்டு பாா்க்காமல் என் முன்பு எழுதிக்காட்ட  வேண்டும் என மாணவா்களிடம் கூறவும்.

 

இப்போது அனைவரும் ஆா்வத்துடன் அவ்வாக்கியத்தை படித்துவிட்டு நினைவில் நிறுத்தி நம் முன்னே எழுதிக் காட்டுவா்.   எழுத்துப் பிழையுள்ள சொல்லை வட்டமிட்டு, மீண்டும் எழுத சொல்ல , தாளை நோக்கி ஓடிச் சென்று,  எந்த இடத்தில் தவறு செய்தாா்களோ அதனை நன்கு கவனித்து மீண்டும் பிழையின்றி எழுதிக்காட்டுவாா்கள் .

 

இதுபோன்று செய்வதால் மாணவா்களிடையே  ஆா்வமும், புதிய அனுபவமும், நல்ல ஞாபகத்திறனும், பாா்க்காமல் எழுதும் திறனும் வளரும்.  நாளடைவில் ஆங்கில வாா்த்தைகள், சொற்றொடா்களை எழுத பயிற்சி அளிக்கலாம்.

 

மெல்லக் கற்கும் மாணவா்க்கு தனியாக சொற்கள் எழுதி பயிற்சி அளிக்கலாம்.

 

 

 

  1.  நினைவாற்றலை வளர்க்க,,,,

தொடக்க நிலை மாணவர்க்கு பேனா, பென்சில், ரூபாய்த்தாள், நாணயம் முதலிய பொருட்களை ( 5 முதல் 7 வரை)  மாணவர்க்கு காட்டி நன்கு அவர்கள் பார்த்த பிறகு அவற்றை மூடி வைத்து விடவும். இப்போது அவர்களை ஒவ்வொருவராக அழைத்து மூடி வைத்ததில் என்னென்ன உள்ளது என கேட்க வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள் உடனே சரியாக பதில் கூறுவார்கள். மெல்லக்கற்போர் ஒன்றிரண்டை விட்டு விட்டு கூறுவார்கள்.

 

அடுத்த சுற்றில் பொருட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கண்டுபிடிப்பாளர்களும் பெயர்களை கூறுவதில் சற்று முன்னேறி இருப்பர்.

அடுத்த நாளில் பொருட்களுக்கு மாற்றாக வார்த்தை அட்டைகளை வைத்துமுயற்சி செய்யும் போது நினைவாற்றலும் கூடும், மேலும் அவ்வார்த்தை அட்டைகளை நாம் சொல்ல, மாணவர்கள் எழுதினால் பிழையின்றி எழுதி அசத்துவார்கள்

 

  1.  விரைவாகப் படிக்கும் ஆா்வத்தை துாண்ட ..

 

வகுப்பு வாாியாக பாடப்புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தைக் கூறி அதில் இடம் பெற்றுள்ள ஒரு சொற்றொடரை கண்டுபிடித்து படிக்க கூறவும். மாணவா்களிடையே பரபரப்பும், ஆா்வமும் தொற்றிக்கொள்ளும்.  போட்டி போட்டுக்கொண்டு அப்பத்தியில்  இடம் பெற்றுள்ள மொத்த வாக்கியங்களையும் படித்து – கண்டுபிடித்துவிடுவாா்கள். தொடா்ந்து இம்முறையை பின்பற்ற, விரைவாகப் படிக்கும் திறன் அவா்களிடையே தானாக உருவாகும்.

 

மெல்லக்கற்கும் மாணவா்க்கு மேற்குறிப்பிட்ட முறையில் ஒரேயொரு சொல்லைக் கூறி பயிற்சி அளிக்கலாம்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ‘EMIS’ பதிவேற்றம் பணிகள் : இணை இயக்குனர் உத்தரவு

‘அனைத்து மாவட்டங்களிலும் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ‘எமிஸ்’ (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தும் பணிகள் ஜன.,க்குள் முடிக்க வேண்டும்’ என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் ‘தேர்வு எண்’ (நாமினல் ரோல்) ‘எமிஸ்’ பதிவு மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பிளஸ் 1லும் விடுபட்ட மாணவர்களுக்கு ‘எமிஸ்’ எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் பணிகள் ஜன., முதல் துவங்குகிறது. இதையடுத்து 7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ‘எமிஸ்’ பதிவை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அமுதவல்லி கூறுகையில், “மாணவர்கள் உண்மையான எண்ணிக்கையை அறியும் வகையில் ‘எமிஸ்’ பதிவுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பொதுத்தேர்வுக்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, ஜன.,க்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கும் ‘எமிஸ்’ எண்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்

நீட்’ தேர்வு போன்று என்ஜினீயரிங் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு மத்திய அரசு பரிசீலனை!!!

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதுதொடர்பான
ஆலோசனை, முன்னேறிய கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இத்தகைய தேர்வு, 2018–ம் ஆண்டில் இருந்துதான் அமலுக்கு வரும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.‘‘என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை உருவாக்கவும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு விரும்புகிறது’’ என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.