‘ஆன்லைன்’ முறையில் பள்ளிகள் அங்கீகாரம்

அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, ‘ஆன்லைன்’ முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது.

 

தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன.

இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த, சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, ‘சாப்ட்வேர்’ கேட்கும் ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவர்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் ஆசிரியர்கள்: தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்

அரசு பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வெகுவாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் மீதான கட்டுப்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாணவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது, பொதுத்தேர்வில், 100 சதவிகித தேர்ச்சி விகிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கெடுபிடிகளால், கடும் தவிப்புக்கு ஆளாகினர். சமீபத்தில், பெற்றோரை அழைத்து வர ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், நான்கு மாணவியர், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில், பல ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இதனால், மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல், தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளில், பெரும்பாலானோரின் பெற்றோர், கூலி வேலை செய்பவர்களாக, உரிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனால், அவர்களை மாணவர்கள் எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். ஏற்கனவே பள்ளியில் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற உத்தரவால், ஆசிரியர்களுக்கு, பல மாணவர்கள் மரியாதை தருவதில்லை. அதற்கும் மேலாக, மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, ஆசிரியர்களுக்கு இருந்த ஒரே ஆயுதம்; பெற்றோரிடம் தெரிவிப்பது மட்டும் தான். தற்போது ஏற்பட்ட சூழலில், ‘பெற்றோரிடம் தெரிவித்தால், நடப்பதே வேறு’ என, பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கின்றனர். பள்ளிக்கு வருவதாக கூறிவிட்டு, நீர்நிலை, குட்டை, சினிமா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர். மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் கூட, உயர் அதிகாரிகளுக்கு பதில் கூறிக்கொள்ளலாம்; ஆனால், மாணவர்களை கட்டுப்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கையும், சிறையும் தான் கிடைக்கும் என்ற பயம், ஆசிரியர்களிடையே உருவாகியுள்ளது. இதனால், பலரும் மாணவர்களை கண்டு கொள்வதேயில்லை. பல தலைமை ஆசிரியர்களே, ‘மாணவர்களை கண்டிக்க வேண்டாம்’ என, ஆசிரியர்களிடம் அறிவுறுத்துகின்றனர். இதனால், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறாதோர் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒழுக்கமும் கல்வியும் போதிக்க வேண்டிய, ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், எதிர்கால சமூகத்தில் பாதிப்புகள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்!!

கல்வி தரம் உயர வேண்டுமானால்……………

 

1.மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

 

2.பள்ளியில் பராமரிக்கப்படுகின்ற தேவையில்லாத records நீக்கப்பட வேண்டும்

 

3.பணியிடை பயிற்சி ( crc, brc பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால்) நீக்கப்பட வேண்டும்.

 

4.வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.
 

5.கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.(தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இனைத்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)

 

6.ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

 

7.அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.

 

8.எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.

 

9.பயிர் நன்றாக வளர களையை நீக்குவது போல, பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

 

10 .ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.

 

11.சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.

 

12.இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது(Aeeo,ssa)

 

13.பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,

அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

 

14.அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய, அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.

 

இன்னும்…இன்னும் …ஆயிரம் ஏக்கங்கள் உள்ளன.

 

குறைந்த பட்சம் மேலே உள்ளதை அரசு செய்து பார்க்கட்டும்.

மாணவர்கள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் காரணமா??

வேலுார் பனப்பாக்கத்தில் பெற்றோரை
அழைத்து வர ஆசிரியர் கூறியதால் நான்கு மாணவிகள் ஒரே நேரத்தில் தற்கொலை… கோவை சோமனுாரில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை… திருவாரூரில் மாணவருக்கு முடி வெட்டிய ஆசிரியை கைது… கோவிந்தவாடி அகரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு…

என தமிழகத்தில் ஒரு வாரத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகள் கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கண்டிப்பு தான் காரணம் என்று பொதுவான காரணம் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமுதாயத்தையும் அதிர வைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், ‘மாணவர்களை கண்டிக்காமல் விட்டால் அவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல், நற்பண்புகள் வளருமா. தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் குறித்து அவர்களின் பெற்றோரை அழைத்து கூற முயற்சித்தது ஆசிரியர் தவறா. இது அவர்களின் கடமைகளில் ஒன்று அல்லவா. ஆசிரியர்கள் கைகள் எல்லா நிலையிலும் இவ்வாறு கட்டப் பட்டால் நுாறு சதவீதம் தேர்ச்சியை கல்வித்துறை எதிர்பார்ப்பது சரியா,’ என பொங்கி எழுந்து நியாயம் கேட்டு வருகின்றனர்.

இப்பிரச்னை குறித்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்…

பிரேமலதா, ஆசிரியை, மதுரை: ‘பெற்றோர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு காரணமாக மாணவர்களின் மனம் புண்படும்படி அவர்களை திட்டவோ அடிக்கவோ கூடாது,’ என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களை பெயர் அளவுக்கு கூட கண்டிக்க பயமாக உள்ளது. பெற்றோர் சிலர் உரிமையோடு பிள்ளையை கண்டிக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் கண்டித்த பின் அந்த மாணவரின் தவறை மறைக்கும் வகையில் பெற்றோரிடம் சம்பவத்தை திரித்து கூறி விடுகின்றனர். அப்போது உண்மை நிலவரம் தெரியாமல் பெற்றோரும் உணர்ச்சிவசப்பட்டு ஆசிரியர் மீது புகார் செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர். அதேநேரம் ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சிலரின் தவறான செயல்பாடுகள் மாணவர்களை தற்கொலை செய்துகொள்ள துாண்டுகின்றன.

முருகன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்: ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால் மெதுவாக கற்கும் மாணவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். தமிழகத்தில் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால்

கற்பிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பாடங்களை புரிந்து படிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போது தான் கல்வியில் ஆர்வம் ஏற்படும். வாரம் ஒரு முறை
மருத்துவம், சமூகம், சுகாதாரம், மனநலம், உடற்பயிற்சி போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் சந்திப்பு மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் உரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆசிரியர்களும் தங்களை மாற்றிக்கொண்டு மாணவர்களுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிச் சூழல் மகிழ்ச்சியானால் தற்கொலைகள் நடக்காது.

ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஒரு குழந்தை உள்ள பெற்றோரிடையே பிள்ளை மீது அதிக பாசம்ஏற்படுவது இயற்கை. நாம் சம்பாதிப்பது பிள்ளைக்கு தானே; அவர்கள் ஆசைப்படுவதை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். இதனால் எதிர்ப்பு, கடும் சொல் தாங்காத நிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள் இதுபோன்ற முடிவை உடன் எடுக்கின்றனர். தற்கொலைக்கு பள்ளிச் சூழல் மட்டும் காரணம் அல்ல. வீட்டு சூழல் ஆரோக்கிய மாக இருந்தால் அவர்கள் தற்கொலைக்கு செல்லும் எண்ணம் ஏற்படாது. நான் படிக்கும் போது ஆசிரியர்கள் கண்டிப்பதை என் பெற்றோர் எதிர்க்க வில்லை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஆசிரியர் கண்டிக்கும் போது, பெற்றோர் கறாராக இருக்க கூடாது. அதேநேரம் ஆசிரியர்களும் எல்லை தாண்டி கண்டிக்க கூடாது.

எஸ்.பி.டி.கனகசபை, தாளாளர், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அதனால்தான் ஆசிரியரை இரண்டாவது பெற்றோர் என்றும், பெற்றோரை முதல் ஆசிரியர் என்றும் கூறுவர். கல்வியறிவை போதிப்பது மட்டும் ஆசிரியர் பணி இல்லை. ஒழுக்கம்தான் முக்கியமானதாகும். எதை இழந்தாலும் திரும்ப பெறலாம். ஒழுக்கத்தை இழந்தால் திரும்ப பெற முடியாது. மாணவர்கள் ஒழுக்கம் திசைமாறும் போதுதான் ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். தவறு செய்யும் மாணவ பருவத்தில் கண்டிக்கா விட்டால் பிற்காலத்தில் சமுதாயத்திற்கு எதிரான சக்தியாக உருவெடுப்பர்.

வளரும் பருவத்தில், உடலியல் மாற்றங்கள் சேட்டைகளை மாணவர்கள் செய்வார்கள். அலைபேசி, இன்டர் நெட் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலம் அவர்கள் மனம் திசைமாறுவதற்கும், ஒழுக்க நெறிகளில் இருந்து பிறழ்வதற்கும் இன்று அதிகளவில் வாய்ப்புள்ளது. பருவம் மாறும் போது தவறான செய்திகள், படங்கள், மாணவர்கள் மனதில் அச்சாணி போல பதிந்துவிடும். இதை ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறில்லை. மேலும் முதல் ஆசிரியராக விளங்கும் பெற்றோரும் இதை கண்டிக்க வேண்டும்.

குழந்தைகளை கண்டித்துதான் வளர்க்க வேண்டும். ‘துாண்டல், துலங்கல்’ குறித்து ஆய்வு செய்த பெரிய உளவியல் அறிஞர்களே தண்டனையை வலியுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் நல்லொழுக்கத்திற்காக ஆசிரியர்கள் கண்டிப்பது தவறில்லையே. இதை தவறு என்றால் தங்கள் கண்ணை, தாங்களே குத்துவதாகத்தான் அர்த்தம். யாரோ பெற்ற குழந்தை நன்றாக வளர்வதற்காக கண்டிக்கும் ஆசிரியர்களை சபிப்பது தவறு. இதில் நஷ்டம் ஆசிரியருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்குத்தான் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்.

ஆசிரியரின் அடி; எங்களுக்கு உரம்:

மணி, கல்வித்துறை முன்னாள் இயக்குனர்: தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்- பிள்ளைகள் உறவிலும் நல்ல சூழல் இல்லை. முன்பு ஆசிரியர்கள் தெய்வமாக பார்க்கப்பட்டனர். ஒரு தலைப்புக்கு அடிக்கோடிடாததால் ஆசிரியரிடம் அடி வாங்கியவன் நான். ஆனால் அடுத்த நாளே அந்த ஆசிரியரும் என்னை அன்புடன் நலம் விசாரித்தார். மாணவர்- ஆசிரியரிடையே இது போன்ற நல்லுறவு அன்று இருந்தது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்கள் வளர்ச்சிக்கான உரங்களாக பயன்பட்டன.

ஆசிரியர்- பெற்றோர்- மாணவர்- சமுதாயம் இணக்கமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களுடன் நற்பண்புகளை அதிகம் போதிக்க வேண்டும். அதே நேரம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி முறை வேண்டும்.

‘ஒரு தட்டில் மெயின் சாப்பாடாக ஆசிரியர் கற்பித்தல் இருந்தது. ஆனால் தற்போது கற்பித்தல் என்பது ஊறுகாயாக மாறிவிட்டது’. ஆசிரியர்கள் பணிப்பளு அதிகரித்து விட்டது. இதையும் கல்வித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதவிர ‘டிவி’, சினிமா உட்பட பல்வேறு புறக்காரணங்களாலும் ஆசிரியர்- மாணவர் உறவுகள் பாதிக்கின்றன.

பிரச்னைகளை சமாளிக்கும் வாழ்க்கை கல்வி அவசியம்:

மதுரை மனநல டாக்டர் ராமானுஜம் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் நடக்கும் நிகழ்வின் மூலம் ஏற்படும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்கின்றனர். மனதளவில் பக்குவமான மாணவர்கள் இச்செயலில் ஈடுபடுவதில்லை. இதற்கு பெற்றோர், ஆசிரியர் இருவரும் தான் காரணம்.

பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தையின் தவறான நடவடிக்கைக்கு துணை போகின்றனர். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வியை சமமாக எண்ணும் பக்குவத்தை கற்றுத் தருவதில்லை. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் மாணவர் நடத்தையை கண்காணிப்பது இல்லை. இதற்கு தான் கூட்டு குடும்பமுறை வேண்டும்.

மாணவர்களுக்கு படிப்பை விட சமுதாயத்தில் நல்ல மனிதராகவும், பிரச்னையை சமாளிக்கும் வாழ்க்கை கல்வியை கற்றுத் தருவோராக ஆசிரியர் செயல்பட வேண்டும். அதை விடுத்து, சில ஆசிரியர்கள் தேவையற்ற விஷயத்தை கையில் எடுத்து மாணவரை தண்டிக்க கூடாது. மாணவர்களை பக்குவமாக கையாளும் திறன் உள்ளதா என அறிந்த பின்னரே ஆசிரியர் பணியில் சேர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியரும் பக்குவமாக கையாண்டு வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், என்றார்.

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசுகண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! – மத்திய அரசு

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிட தேசிய ஊட்டச்சத்து மிஷன் அடிப்படையில் ஆதார் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அரசின் வளங்கள் சுரண்டப்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக அரசின் வளங்களைக் கொண்டுசேர்ப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியான பெயர்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி உணவுகள் வீணாகின்றன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்பதால், இந்தத் திட்டத்திற்காக வயது வரம்பை மூன்றாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் தினமும் ஆதார் கொண்டு செல்லத் தேவையில்லை என்றும், அதைப் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்…

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை. ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்? இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம். இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது. 2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம்.

 

காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 

இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா?

 

இரத்த அழுத்தம் இருக்கிறதா? நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை? பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது?

 

பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே.

 

உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும்.

 

அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள்.

 

இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான்.

 

இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம்.

 

குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள். ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு.

 

இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்’ இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.

 

மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது? கஷ்டங்கள் எதில் தான் இல்லை?

 

இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.

 

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வவெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
ரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.

இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு ! தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம். அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும் மாணவர்களை கொண்ட வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும். தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்: கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன. தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு !

தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட எதிர்கால தலைவர்களை உருவாக்கும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிகுள்ளாகுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி கூங்கூர் மூலமா மேல்நிலைப்பள்ளியில் 520 மாணவர்கள் பயில்கின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மிகுந்த சிக்கலில் உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் வெறும்  மாணவர்களை கொண்ட  வகுப்பறை வெறுமையில் உள்ளது. மாணவர்கள் இதன் பொருட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் வேதியியல், தமிழ், அறிவியல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். இதனை அரசு கவனித்து மாணவர்கள் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்.

தலை ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகள்:
கோவை மாவட்டத்தில் 17 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கற்ப்பித்தல் மற்றும் நிர்வாகப்பணிகள் பாதிப்படைகின்றனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.

தலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து  வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும். தற்பொழுது அப்பணியை தலைமை துணை ஆசிரியர் மேற்கொள்வதால் பணிச்சுமை பெருகுகின்ற்து, இவ்வாண்டு கல்வியாண்டு தொடங்கி ஆறுமாத காலங்களை தொட்டுவிட்டன. அத்துடன் இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில் மாணவர்களை தேர்வில் படிக்க வைக்க வேண்டும் அத்துடன் தேர்வரைகள் , கண்காணிப்பு பணிகள் , போன்ற பல்வேறு பணிகளை நடத்த வேண்டிய பொருப்புகள் இருப்பதால் அரசு இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிர்யர்களை நியமிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தேவை இன்றியமையாமை ஆகும். இதனை உணர்ந்து  பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டியது அவசியமாகும்

பள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்நேற்று கூறியதாவது:

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க,பல்வேறு சட்டம், விதிகள் அமலில் உள்ளன. இருப்பினும், நாடு முழுவதும்பல்வேறு இடங்களில், பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்கள்நடப்பது குறித்த புகார்கள் வந்தபடி உள்ளன.எனவே, குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல், தீய தொடுதல் எது என்றபாடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

 

பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல்களை தடுக்க, பல அரசு சாராஅமைப்புகளுடனும், சமூக ஆர்வலர் குழுக்களுடனும், பேச்சு நடந்து வருகிறது.பள்ளி மட்டத்தில், பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரங்களை தடுக்க,விரைவில் சிறப்பான திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.