மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம்: ஆசிரியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும். எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல் பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100 சதவீதம் நேரடி நியமனம் மூலம்மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம்

டெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்தொகையை உரிய தலைமை ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது

 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பில் பின் தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ய கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட ஆய்வில் முறையாக பரமரிக்கபடாத பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தெரிவித்து உள்ளார். அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் உரிய தலைமை ஆசிரியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கான மதிப்பெண் 100 ஆக குறைப்பு, அக மதிப்பீடு, வருகைப்பதிவுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய நடைமுறைகளும் 11-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில்,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வினாத்தாள் அமைப்பின்படி, மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மாதிரி வினாத்தாளின்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் வகுத்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்று 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘குரூப்- 4’ தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா?

அரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, ‘குரூப் – 4’ தேர்வுக்கான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வு, 2018 பிப்., 11ல் நடக்க உள்ளது. இதற்கான, ‘ஆன்-லைன்’ பதிவு, நவ., 14ல் துவங்கியது; டிச., 13ல் முடிகிறது. இதுவரை, கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ., பதவிக்கு, தனியாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, குரூப் – 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்; தேர்வுக்கான பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு அளவில், சமூக அறிவியல், ஆங்கிலம், வரலாறு, பொது அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, வினாக்கள் இடம் பெறும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், குரூப் – 4 தேர்வு எழுத விரும்பும், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 10ம் வகுப்பு பாட புத்தகங்கள் தேவை.

அவர்கள் பள்ளிக்கல்வித் துறையின் பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகம் வாங்க சென்றால், அங்கு புத்தகம் இருப்பு இல்லை என, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஆனால், தமிழக பாடநுால் கழகத்தில், சொற்ப எண்ணிக்கையில் புத்தகம் இருப்பு உள்ளதாகவும், அதையும் மாணவர்களுக்கே வழங்க உள்ளதாகவும், பாடநுால் கழகத்தினர் தெரிவித்துஉள்ளனர்.

தமிழக பாடத்திட்ட புத்தகங்கள், தனியார் கடைகளில் விற்பனை செய்யப் படாததால், குரூப் – 4 தேர்வர்களால், தனியாரிடமும், புத்தகம் வாங்க வழியில்லை. அதனால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், புத்தகம் வாங்குவது எப்படி என்ற தவிப்பில் உள்ளனர். சிலர், பழைய புத்தக கடையில் சென்று, 10ம் வகுப்பு புத்தகங்களை தேடி வருகின்றனர். எனவே, குரூப் – 4 தேர்வுக்கு, போதிய பாடப் புத்தகம் வழங்கும்படி, பாடநுால் கழகத்தை, டி.என்.பி.எஸ்.சி.,யும், அரசும் அறிவுறுத்தும்படி, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

சென்னை: ‘நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது’ என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

 

தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், ‘பல்கலை’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இது குறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக் கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இது குறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாநில உயர் கல்வித் துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும், யு.ஜி.சி., விதிகளின்படி, எந்த தனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக் குறிக்குள், ‘பல்கலைக்கு இணையாக கருதப்படும்’ என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.

அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற் கான ஆதாரத்துடன், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

 

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, பல படிநிலைகளில் வெற்றி பெறும் தேர்வாளர்களுக்கு, அதன் பின், பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்படுகின்றனர்.

 

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் செய்யவும், தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்யவும், பஸ்வான் கமிட்டி, ஆக., 2016ல், யு.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஆராய்ந்த, யு.பி.எஸ்.சி., மார்ச்சில், தன் தரப்பு பரிந்துரை அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைத்தது.

 

இந்நிலையில், பஸ்வான் கமிட்டி, யு.பி.எஸ்.சி., அறிக்கைகளின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகள் மற்றும் தேர்வர்களின் வயது வரம்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி., – எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் தலைமை ஆசிரியர்கள் திணறல்

எம்.பி.,- – எம்.எல்.., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன


இவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், ‘நபார்டுஉள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., – எம்.எல்..,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.

ஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.

25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது

முழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை

ஒப்பந்ததாரரும், ‘பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாதுஎன, வெளிப்படையாகவே கூறுகிறார்.

நாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., – எம்.எல்.., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., – எம்.எல்.., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை

இருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

மாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவசஹெல்ப்லைன்தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்தார்.
குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-மாணவமாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின்எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள். மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவமாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது.

மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம்.தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம்.32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குஇலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் கே.. செங்கோட்டையன் பேசினார்.விழாவில் அவர் குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், நூலகங்களுக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களுக்கும், நூலகங்களுக்கு அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கும் விருது வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, ஜெயவர்த்தன் எம்.பி., விருகை ரவி எம்.எல்.., நட்ராஜ் எம்.எல்.. உள்பட பலர் பேசினார்கள்.இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்

EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி

இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும்

போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது
.மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம்  இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும்.  அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit)  வசதி செய்யப்பட்டுள்ளது

பள்ளி மாணவியருக்கு ‘சட்ட சேவை பெட்டி’

மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், ‘சட்ட சேவை பெட்டிதிட்டம் துவக்கப்பட்டு உள்ளது.


ராமநாதபுரம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ‘சட்ட சேவை பெட்டிதிறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி, கயல்விழி திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், ”தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் பள்ளியில், சட்ட சேவை பெட்டி துவக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

மேலும், சட்ட உதவிகளால் மக்கள் அடையும் நன்மைகள், பொதுமக்களுக்கான சட்டப் பணிகளில், மாணவியர் எப்படி உதவ முடியும் என்பது குறித்தும், நீதிபதி, கயல்விழி விளக்கினார்