நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

கால தாமதம் செய்ததால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம் என்றும் கூறினார். நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று திரும்பத் திரும்ப சொன்னதில் ஏமாற்றமே மிஞ்சியது என தெரிவித்த நீதிபதி, நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடர்பாக அக்.6க்குள் விளக்கம் அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.

 

சிபிஎஸ்இ பாடத்தில் 1ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு இந்த அளவுக்கு பாடச் சுமையை கொடுப்பது சரியல்ல என்றும், பாடச் சுமையைக் குறைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விளையாட வேண்டிய வயதில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோன்ற பல காரணங்களுக்காக குழந்தைகள் விளையாடும் நேரத்தை வீணடிக்கிறோம். ஆடிப்பாட வேண்டிய வயதில் குழந்தைகளை மௌனியாக வைத்திருக்கிறோம் என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.

மேலும், புருஷோத்தமனின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி கிருபாகரன், 4 வாரத்தில் இது குறித்து முடிவு செய்யுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியது:-

 

எந்தத் துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தினை மேலும் உயர்த்திடும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறமையோடு சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அதே துறைகளில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து விளங்கும் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்காக, ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

கலைத் திருவிழா: மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை வெளிக் கொண்டு வரவும், தனித்திறன்களை வளர்க்கவும் 150 வகைப் பிரிவுகளில் மாபெரும் மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து புதுமைப் பள்ளி விருது அளிக்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு 4 பள்ளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். கணினியைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது அளிக்கப்படும். மாவட்டத்துக்கு தலா 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும்.

யோகா வகுப்புகள்: அனைத்துப் பள்ளி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கும், மன அமைதி பெறுவதற்கும், உடல் வலிமை ஏற்படுவதற்கும் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்.

பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தும் தொய்வும் இன்றி சிறப்பாகச் செயல்பட பள்ளிகளில் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல. உலகத்தின் உன்னதமான அறிவுத்திறன் கொண்ட குழந்தைகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஆவர். ஒழுக்கம், நன்னடத்தை, காலம் தவறாமை போன்ற நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து அவர்களின் முழுமையான வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோரே ஆசிரியர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாடம் கற்பிப்பது எப்படி?: பள்ளிக்குச் சென்று கற்பிக்கும் போது ஒவ்வொரு பாடப் பகுதியையும் எவ்வாறு கற்றுக் கொடுத்தால் எளிதாக இருக்கும், அதற்காக எத்தகைய உபகரணங்களை உபயோகித்தால் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதை எல்லாம் ஆசிரியர்கள் யோசிக்க வேண்டும். அவ்வாறு யோசித்து திட்டமிட்டு, வகுப்பறைக்குள் நுழைந்தால் மாணவர்களுக்குக் கற்றல் சுமையாக இல்லாமல், சுவையாக இருக்கும்.

எந்தவொரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ்பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியர்கள் பார்த்து மகிழ்வார்கள்.

பொறுப்புள்ள ஆசிரியர் பணியை அனைவரும் மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றுப் பேசினார்.

பணி நியமன உத்தரவுகள்: 2,315 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு ஆசிரியர்களுக்கும் பணி நியமன உத்தரவுகள் விழாவில் வழங்கப்பட்டன. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் அளித்தனர்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 – 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

 

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 – 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NIOS என்றால் என்ன பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.*

*[1]. NIOS ஒர் தேசியவாரியம் ஆகும், இது ஊரகப்பகுதிகளில் கல்வியறிவை அதிகரிக்கும் வகையில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்றே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. மேலும்* *உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளை வழங்குகிறது.*

*NIOS*

*தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்*

*சுருக்கம் NIOS*
*உருவாக்கம் 3 நவம்பர் 1989 (27 ஆண்டுகளுக்கு முன்னர்)*
*வகை அரசு பள்ளிக் கல்வி வாரியம்*
*தலைமையகம் நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா*
*அமைவிடம்*
*A-24/25,* *இன்ஸ்டிட்யுசனல் பகுதி, செக்டார் – 62, நொய்டா மாவட்டம், கவுதம் புத்த நகர், உத்திரப்பிரதேசம் – 201 309*

*ஆட்சி மொழி*
*இந்தி &  ஆங்கிலம்*

*தலைவர்*
*ஜே, ஆலம்*

*தாய் அமைப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)*
*வலைத்தளம் www.nios.ac.in*

*இது இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக திகழ்கிறது.*

*தற்போது தமிழில் தேர்வு எழுதலாம்*
*குறிப்பாக 3ம் வகுப்பு முதல் மருத்துவம் வரை இங்கே  பயிலலாம் பள்ளி இடை நின்றவர்கள்  10, 12 வகுப்புகளும் படிக்கலாம்.

EMIS – நாம் செய்ய வேண்டிய பணிகள் (UPDATE NEWS)

EMIS தளத்தில் தற்போது செய்ய வேண்டியது என்ன?
EMIS தற்போது புதிய வடிவில் திறக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள்

User name: dise code

Password: ssa officeல் பெறப்பட்டது

Google – emis – tnschool education department –

Enter your school username & password

பின்பு SIGN IN யை கிளிக் செய்க.

Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்

School mobile: HM mobile no கொடுத்தவுடன்      save மை கிளிக் செய்யவும்.

Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.

Step 3:
Student list – student profile (கிளிக் செய்யவும்) – student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV  என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் – பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student’s) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது.

தற்போதைய தளத்தில் புதிய சேர்க்கைக்காக இன்னும் தரவுகள் கொடுக்கப்படவில்லை.. மாறுதல் பணி முடித்ததும்
விரைவில் சேர்க்கைக்காக திறக்கப்படும்.

Steps for New student entry:

EMIS site ல் dashboardற்க்கு அடுத்து உள்ள student என்பதை கிளிக் செய்யவும். பின்பு create student யை கிளிக் செய்யவும்.
Student registration form தோன்றும். இப்படிவம் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் எளிமை படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக student photo தேவையில்லை.
கோரப்பட்டுள்ள தகவல்களும் குறைவு (எளிமை).
1.student name
2.adhaar no
3.D.O.B
4.Gender
5.religion, community, sub caste
6.Mother tongue
7. Father/ mother name, occupation, income
8. Mobile no & address
9. Class, section, previous class, admission no, D.O.J, Medium ஆகிய தகவல்கள் மட்டும் போதுமானது
Submit யை கிளிக் செய்யவும்.

EMIS New registration ஒரே பக்கத்தில் முடிந்து விடும்

EMIS தளத்தில் நீல வண்ணத்தில் வரும் எழுத்துகள் மீது கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்

வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு வந்த மாணவரை admit செய்யும் முறை

EMIS site ல் student – student search என்ற வழிமுறையில் மாணவரின்
1. Emis no
2. Adhar no
3.mobile no
4. Last studied school dise code, class
5. Last studied school postal pincode, D.O.B இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் போதும் admit செய்து விடலாம்.

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது. 12 வங்கிகளில் ஆதார் போட்டோ எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

டிச., 31ம்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிடில், வரும் 2018, ஜனவரி முதல் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பரிவர்த்தனை நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 85 சதவீத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 

இன்னும் 15 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.வங்கிகளில் ஆதார் மையம்: வாடிக்கையாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆதார் போட்டோ எடுப்பதற்காக வங்கிகளில் முதல் கட்டமாக 12 ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், பழநி, நத்தம், ஆத்துார் ஆகிய ஊர்களில் உள்ள கனரா வங்கிகளிலும், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார், நத்தம் பகுதிகளில் ஐ.ஓ.பி., வங்கி கிளைகளிலும், ஓட்டன்சத்திரம் பெடரல் வங்கிக் கிளையிலும் ஆதார் மையங்கள் அமைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் குடும்பத்தினரும் ஆதார் அடையாள அட்டை பெற போட்டோ எடுக்கலாம் என, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மண்டல மேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்

‘தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,’துாய்மை இந்தியா’ திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தை, ஒவ்வொரு துறைகளிலும் நடை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செப்., 15 முதல், இத்திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, அக்., 2 வரை, பள்ளிகளில் கட்டாயம் நடத்த வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

EMIS WEBSITE NOW OPEN (update News)

*EMIS WEBSITE NOW OPEN*

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது 

 

  1. SSA அலுவலகத்திலிருந்து புதிய password பெற வேண்டும்.

 

 

  1. பிறகு log in செய்து உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிகளுக்கு சென்றவர்களை transfer செய்ய வேண்டும்.

DEEO meeting news:பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்.

DEEO meeting news:

1. டெங்கு காய்ச்சல் பற்றி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. ஆபத்தான புளுவேல் விளையாட்டை பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமைஆசிரியர்கள் , 31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும். இல்லை எனில் அன்று முதல் பணி இழக்க நேரிடும். உடனடியாக தலைமை ஆசிரியர்கள், இ. ஆ. தங்களின் +2 சான்றிதழ் சரிபார்க்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

4. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள்செய்ய வேண்டும்.

5. தூய்மை இந்தியா உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டும்.